அழகு பழனிச்சாமி: Difference between revisions
Page Created: Para Added and Edited: Image Added: Link Created: Proof Checked |
Added: Category:கவிஞர் |
||
| (6 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 3: | Line 3: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
அழகு பழனிச்சாமி, ஜூன் 10, 1933 அன்று, மதுரை மாவட்டம் அப்பிப்பட்டியில், சு. சொக்கலிங்கம் பிள்ளை | அழகு பழனிச்சாமி, ஜூன் 10, 1933 அன்று, மதுரை மாவட்டம் அப்பிப்பட்டியில், சு. சொக்கலிங்கம் பிள்ளை - அழகம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
அழகு பழனிச்சாமி, | அழகு பழனிச்சாமி, '[[கண்ணன் (இதழ்)|கண்ணன்]]', '[[கோகுலம் (இதழ்)|கோகுலம்]]', '[[பூந்தளிர்]]', '[[ரத்னபாலா]]' மற்றும் இலங்கையிலிருந்து வெளிவந்த 'சிறுவர் அமுதம்' உள்ளிட்ட பல சிறார் இதழ்களில் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்களை எழுதினார். 'பழனி அழகன்', 'வெள்ளிவீதியன்' போன்ற புனை பெயர்களில் எழுதினார். [[அழ.வள்ளியப்பா]]வின் 'நீலா மாலா' உள்ளிட்ட சில நூல்கள் வெளிவர உதவினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் கதைகளை எழுதினார். | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
அழகு பழனிச்சாமி | அழகு பழனிச்சாமி 'பூந்தளிர்' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். | ||
== நாடக வாழ்க்கை == | == நாடக வாழ்க்கை == | ||
| Line 16: | Line 16: | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* [[குழந்தை எழுத்தாளர் சங்கம்]] அளித்த வெள்ளிப் பதக்கம் | * [[குழந்தை எழுத்தாளர் சங்கம்]] அளித்த வெள்ளிப் பதக்கம் 'உலகை ஆளும் கரங்கள்' கவிதை நூலுக்காக (1981) | ||
* ஏவி. எம். அறக்கட்டளை நடத்திய குழந்தை இலக்கியப் போட்டியில் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான தங்கப் பதக்கம் (1982) | * ஏவி. எம். அறக்கட்டளை நடத்திய குழந்தை இலக்கியப் போட்டியில் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான தங்கப் பதக்கம் (1982) | ||
* வி.ஜி.பி. அறக்கட்டளையின் சிறந்த கவிஞர் விருது (1989) | * வி.ஜி.பி. அறக்கட்டளையின் சிறந்த கவிஞர் விருது (1989) | ||
* | * 'மனிதனும் தெய்வமாகலாம்' நூலுக்கு [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழ் வளர்ச்சித்துறை]]யின் முதல் பரிசு (1994) | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
| Line 42: | Line 42: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? | * குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? - தொகுப்பாசிரியர்: ரத்னம், குழந்தை எழுத்தாளர் சங்க வெளியீடு, முதல் பதிப்பு: 1961 | ||
* நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994. | * நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994. | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|07-Feb-2025, 17:20:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழாளர்]] | |||
[[Category:கவிஞர்]] | |||
Latest revision as of 00:34, 21 December 2025

அழகு பழனிச்சாமி (எஸ்.எஸ். பழனிச்சாமி) (பிறப்பு: ஜூன் 10, 1933), கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். சிறார்களுக்கான நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நாடகங்களையும் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அழகு பழனிச்சாமி, ஜூன் 10, 1933 அன்று, மதுரை மாவட்டம் அப்பிப்பட்டியில், சு. சொக்கலிங்கம் பிள்ளை - அழகம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார்.
இலக்கிய வாழ்க்கை
அழகு பழனிச்சாமி, 'கண்ணன்', 'கோகுலம்', 'பூந்தளிர்', 'ரத்னபாலா' மற்றும் இலங்கையிலிருந்து வெளிவந்த 'சிறுவர் அமுதம்' உள்ளிட்ட பல சிறார் இதழ்களில் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்களை எழுதினார். 'பழனி அழகன்', 'வெள்ளிவீதியன்' போன்ற புனை பெயர்களில் எழுதினார். அழ.வள்ளியப்பாவின் 'நீலா மாலா' உள்ளிட்ட சில நூல்கள் வெளிவர உதவினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் கதைகளை எழுதினார்.
இதழியல்
அழகு பழனிச்சாமி 'பூந்தளிர்' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
நாடக வாழ்க்கை
அழகு பழனிச்சாமி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். நாடகங்களில் பல வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலி, ஒளிபரப்பப்பட்டன.
விருதுகள்
- குழந்தை எழுத்தாளர் சங்கம் அளித்த வெள்ளிப் பதக்கம் 'உலகை ஆளும் கரங்கள்' கவிதை நூலுக்காக (1981)
- ஏவி. எம். அறக்கட்டளை நடத்திய குழந்தை இலக்கியப் போட்டியில் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான தங்கப் பதக்கம் (1982)
- வி.ஜி.பி. அறக்கட்டளையின் சிறந்த கவிஞர் விருது (1989)
- 'மனிதனும் தெய்வமாகலாம்' நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசு (1994)
மதிப்பீடு
அழகு பழனிச்சாமி, சிறார் இலக்கியத்திற்குப் பங்களித்த மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். கவிமணி, தங்கமணி, அழ. வள்ளியப்பா வரிசையில் பாடல்கள், சிறுகதை, நாடகம் என பல களங்களில் பங்களித்தார். குழந்தைக் கவிஞர் பரம்பரை இலக்கியவாதிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- முயற்சி திருவினை ஆக்கும்
- அருளிச் செய்த ஆழ்வார்கள்
- எம்மதமும் சம்மதமே
- தாத்தாவின் பொம்மை
- தங்கத்தின் தங்க மனசு
- நன்னெறிக் கதைகள்
- சிறுவர் கதை விருந்து
- காக்கும் கரங்கள்
- அரியும் சிவனும் ஒன்றே
- மனிதனும் தெய்வமாகலாம்
- மணக்கும் மலர்கள் (சிறார் பாடல்கள்)
மற்றும் பல
உசாத்துணை
- குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? - தொகுப்பாசிரியர்: ரத்னம், குழந்தை எழுத்தாளர் சங்க வெளியீடு, முதல் பதிப்பு: 1961
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:20:27 IST