வாள் மங்கலம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected typo errors;) |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 9: | Line 9: | ||
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று (கொளு.35) | வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று (கொளு.35) | ||
</poem> | </poem> | ||
எனக் கொளு விளக்குகிறது. | எனக் கொளு விளக்குகிறது. 'கலக்குவதற்கு இயலாத பெரிய கடல் போன்ற படையினையும் வலிமை மிக்க களிற்றையும் உடைய அரசனது வாளைப் புகழ்தல்' என்பது பொருள். | ||
வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. | வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. 'அரண்மனையுள் மகளிர் அரசனது செங்கோலின் சிறப்பைப்பாட, வெற்றியைப் பெறும் பொருட்டு அவன் கைவாள் சினத்தை வெளிப்படுத்தும்' எனக் காட்டுகிறது, வெண்பா. | ||
<poem> | <poem> | ||
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில் | கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில் | ||
| Line 49: | Line 49: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|01-Jan-2025, 18:14:33 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 17:39, 22 November 2025
வாள் மங்கலம்(வாண் மங்கலம்)பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனின் வாளின் சிறப்பைக் கூறுவது வாள் மங்கலம்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
வாளைப் புகழ்தல் என்பது பொருள். அரசனுடைய வெற்றி விளைவிக்கும் வாளை வாழ்த்துவது அவன் வீரத்தை வாழ்த்துவது என்று புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு குறிப்பிடுகிறது.
கயக்கருங் கடல்தானை
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று (கொளு.35)
எனக் கொளு விளக்குகிறது. 'கலக்குவதற்கு இயலாத பெரிய கடல் போன்ற படையினையும் வலிமை மிக்க களிற்றையும் உடைய அரசனது வாளைப் புகழ்தல்' என்பது பொருள்.
வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. 'அரண்மனையுள் மகளிர் அரசனது செங்கோலின் சிறப்பைப்பாட, வெற்றியைப் பெறும் பொருட்டு அவன் கைவாள் சினத்தை வெளிப்படுத்தும்' எனக் காட்டுகிறது, வெண்பா.
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில்
மங்கலம் கூற மறம் கனலும் - சேங்கோல்
நிலம்தரியச் செல்லும் நிரைதண்தார்ச் சேரன்
வலம் திரிய ஏந்திய வாள் 223
தொல்காப்பியம்
"மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும்" என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வாள் என்பது அரசனின் வேறு படைக்கலங்களையும் குறிக்கலாம். புறநானூற்றில் ஒரு பாடல் வாள் மங்கலம் என்ற துறையில் அமைந்தது.
எடுத்துக்காட்டு
புறநானூறு
- திணை: பாடாண் துறை: வாள் மங்கலம்
- பாடியவர் : ஔவையார்
- பாடப்பட்டவன்: அதியமான்
இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.(95)
அதியமானின் வாள் பகைவருடன் போரிட்டு அவர்களைக் குத்திக் கிழித்ததால் கொல்லன் பட்டறையில் சீர் செய்யக் காத்திருப்பதாக ஔவையார் கூறுவதால் இது வாள் மங்கலம்.
உசாத்துணை
- புறப்பொருள் வெண்பாமாலை, மதுரைத் திட்டம்
- புறநானூறு 95, தமிழ்த்துளி
- பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 18:14:33 IST