under review

தெ. பொ. மீனாட்சிசுந்தரம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''தெ. பொ. மீனாட்சிசுந்தரம்''' ( ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல மொழிகளில் புலமை பெற்ரவர்....")
 
(Corrected error in line feed character)
 
(58 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
'''தெ. பொ. மீனாட்சிசுந்தரம்''' ( ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன்  போன்ற பல மொழிகளில் புலமை பெற்ரவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்
[[File:Thepo.jpg|thumb|https://thamizhppanimanram.blogspot.com/]]
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தென்பட்டணம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரம்:ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர், தமிழியல் ஆய்வாளர்,பன்மொழிப் புலமை பெற்றவர். பழந்தமிழ்ப்பண்பாட்டு ஆய்வை மேலைநாட்டு ஆய்வுமுறைகளைக்கொண்டு வகுத்துரைத்த கல்வியாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் ஆய்வுத் தளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினார். பல்கலைக்கழகங்களில் மொழியியல், ஒப்பிலக்கணத் துறைகளை ஏற்படுத்தி, அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு வழிகோலியவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் அல்டெர்மனாகவும் (alderman-மேயருக்கு அடுத்த நகராட்சிக்குழு மூத்த உறுப்பினர்) பணிபுரிந்தார். மத்திய அரசின் பத்மபூஷண் விருது, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
== பிறப்பு,கல்வி ==
தெ. பொ. மீனாட்சி சுந்தரம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் ஜனவரி 8,1901 அன்று பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பொன்னுசாமிக் கிராமணியார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரான [[தி. க. சுப்பராய செட்டியார்|தி. க. சுப்பராய செட்டியாரிடம்]] தமிழ் பயின்றவர். தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை|மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யின் பெயரை தன் மகனுக்கு இட்டார். நாடகக் கலைஞரும், தேசபக்தி நாடகங்களை அரங்கேற்றியவருமான [[தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்]] இவரது மூத்த சகோதரர்.
 
பள்ளிக்கல்வியை சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தார்.1920-ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் 1922-ல் பி.எல். பட்டமும் பெற்றார். 1923-ல் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1923-ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இருப்பினும் அத்துறையில் மிகக் குறைந்த காலமே பணி செய்தார்.
 
1924-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் (Indian Aluminium factory worker's association) தலைவராய் பணியாற்றினார்.
 
தமிழின் மேலிருந்த தீராத ஆர்வத்தால் 1934-க்குள் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். வேதாந்த சங்கத்தை நடத்திய [[கோ. வடிவேலு செட்டியார்|கோ. வடிவேலு செட்டியாரிடம்]] தருக்கம், வேதாந்தம், தமிழிலக்கியம் ஆகியவற்றைப் பயின்றார். [[கா.ர. கோவிந்தராச முதலியார்]], [[செல்வக்கேசவராய முதலியார்|திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்]] போன்ற அறிஞர்களிடம் வேதாந்தமும் தமிழ் இலக்கியங்களும் கற்றார். இராமலிங்கத் தம்பிரானிடம் ''தணிகைப் புராணம் , சேது புராணம்'' ஆகியவற்றைக் கற்றார். [[மறைமலையடிகள்|மறைமலையடிகளிடம்]] சைவ சித்தாந்தத்தையும், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கரச்சாரியார், திருப்புறம்பியம் ராமசாமி நாயுடு மற்றும் ஶ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரிடம் வைணவத் தத்துவமும் பயின்றார்.
 
1939-40 ஆண்டுகளில் தமிழ் வித்வான் இளநிலை, நிறைநிலைத் தேர்வுகள் எழுதி 'வித்வான்' பட்டம் பெற்றார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். 
 
1941-ல் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். 
 
ஜூல்ஸ் ப்லாக்(Jules Block) என்ற பேராசிரியரின் மேற்பார்வையில் 1939-ல் எம். ஒ. எல் பட்டத்திற்காக ஒலியியலில் (Phonology) தமிழ் ஒலிகளில் ஆராய்ச்சி செய்தார். அவரது ஆய்வுக்கட்டுரை மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு எனத் தேர்வாளர்களால் பாராட்டப்பட்டது. ஜூல்ஸ் ப்லாகின் தூண்டுதலால் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் உயர் சான்றிதழ் பெற்றார்.
==கல்விப் பணிகள்==
[[File:Varalaru.jpg|thumb|panuval.com]]
[[File:Samana.jpg|thumb|panuval.com]]
[[File:Tamizhum.jpg|thumb|tamizhum]]
[[File:Manamum.jpg|thumb|commonfolks.in]]
[[File:Pattile.jpg|thumb]]
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் பணியாற்றியபோது சிந்தாதிரிப்பேட்டையிலும், சுற்றுப்புறங்களிலும் பல ஆரம்பப் பள்ளிகளை ஏற்படுத்தி, அவற்றின் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணித்தார். 1936-ல் கோ. வடிவேலு செட்டியாரின் மரணத்திற்குப்பின் வேதாந்த சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்தல், சென்னைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி பல இலக்கிய மாநாடுகளை நடத்துதல் ஆகிய பணிகளை இக்காலகட்டத்தில் மேற்கொண்டார். தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 1944-ல் ராஜா.சர்.அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டு 1946 வரை பணியாற்றினார். 1954-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ் பேராசிரியராகப் பணியேற்று, ஒப்பிலக்கியத்தையும், கல்வெட்டு மொழி ஆய்வையும் பாடங்களாக்கினார். மீண்டும் 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1945-ல்நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாடு திராவிடப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தை தலைவராக நியமித்தது.
 
சிகாகோ பல்கலைகழகத்தில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டபோது தெ. பொ. மீனாட்சிசுந்தரம் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டு பத்து சொற்பொழிவுகள் தமிழ் மொழி வரலாற்றைப் பற்றியும் பத்து சொற்பொழிவுகள் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் ஆற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அச்சொற்பொழிவுகளின் இறுதிவடிவம் ' A history of Tamil Language<ref>[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3l0Yy.TVA_BOK_0007270 தெ.பொ.மீ தமிழ் மொழி வரலாறு மொழியாக்கம்]</ref>' 'A history of Tamil literature' என்ற இரு நூல்களாக வெளியானது.
 
1963 முதல் 65 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் (Advanced Centre for Dravidian Linguistic) இயக்குனராகப் பணியாற்றி தமிழகத்தில் மொழியியல் கல்வி தனித்து வளர்வதற்கும் துறைசார் ஆய்வாளர்கள் பலரைத் தோற்றுவிக்கவும் காரணமானார்.
 
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார். மதுரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக புதிய அறிவியல் துறைகள், உயிரியல், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளைத் தொடங்கினார். தமிழ்த்துறை தமிழியல் துறையாக அமையவும், ஒப்பிலக்கியத் துறை உருவாகவும் வழி வகுத்தார். மாணவர்களின் நலனுக்காக தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
 
1973-74ம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
==இலக்கிய/தமிழியல் பணி==
[[File:Vallu.jpg|thumb|marinabooks.com]]
[[File:Thira.jpg|thumb|commonfolks.in]]
தெ, பொ. மீனாட்சிசுந்தரம் கலைக்களஞ்சியத்தில் தமிழ் எழுத்தியல், மொழியியல், இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் 88 கட்டுரைகள் எழுதினார். ஈழத்து இலக்கிய ஏடான 'கலாநிலையம்', 'விவேக சூடாமணி', 'லோகோபகாரி', 'நவசக்தி' ஆகிய இதழ்களில் இலக்கியம், மொழியியல், தத்துவம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் வரையறுத்தார். சென்னைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவி பத்துப்பாட்டு, தொல்காப்பியம் மாநாடுகளை நடத்தினார். திருவள்ளுவர் கூறும் பெண்மையின் பெருமையை 'வள்ளுவரும் மகளிரும்' என்ற நூலாக எழுதினார். ' 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' ஓர் ஒப்பிலக்கிய நூலாகும்.
 
தமிழில் மொழியியல் துறையின் முன்னோடியாகக் கருதப்படும் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மொழியியல் நோக்கில் மொழியை அணுகி ஆராயும்போது மொழியின் கட்டமைப்பையும் அது சமுதாயத்தில் வழங்கி வரும் முறையையும் காணலாம் என்பதைத் தன் ஆய்வுகளின் மூலம் அறியச் செய்தார்.
 
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் இலக்கண வரலாற்றை வடமொழி இலக்கணம், தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஆய்வுசெய்தார். வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மொழிகள். இந்தியாவில் வழங்கும் பல்வேறு மொழி இலக்கியங்களிலிருந்து இந்திய இலக்கியம் என ஒன்றை வகுத்துக்கொள்ளமுடியும் என்று கருதினார்.
 
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் வழிக் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை போன்ற அறிவியல் தத்துவங்களைத் தமிழில் எழுதினார். தமிழ் மொழி எழுத்துக்களை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியும், திருத்தியும், குறைத்தும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
 
"Rhythm of the common speech; Glorification by Bharathi" என்ற நூலில் பாரதியின் மொழிநடை தமிழ் மரபிலிருந்து எதைப் பெற்றுக்கொண்டது என்பதைஆராய்கிறார்.
 
நோம் சோம்ஸ்கியின்( Noam Chomsky) ஆய்வுகளின் வழியாக மாற்றிலக்கணம் ( transformational grammar) என்ற புதிய கோட்பாடு உருவாகி உலக அளவில் மொழியியல் ஆய்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கோட்பாட்டை முழுவதுமாக உள்வாங்கி, தமிழுக்கு அறிமுகம் செய்யும் முகமாக தமிழ் எடுத்துக்காட்டுகளுடன் 'மாற்றிலக்கணம்'<ref> [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007286_%E0%AE%A4%E0%AF%86_%E0%AE%AA%E0%AF%8A_%E0%AE%AE%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf மாற்றிலக்கணம்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம் தமிழ் இணைய கல்விக் கழகம்] </ref> என்ற நூலை எழுதினார்.
 
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று தமிழ் பற்றிய அரிய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார். 'தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை' என்ற நூலில் தமிழ்நாட்டுச் சடங்குகளுக்கும், தாய்லாந்து நாட்டு சடங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கினார். தாய்லாந்தின் ஊஞ்சல் திருவிழா தமிழ்நாட்டின் பாவை நோன்புடனும் திருவெம்பாவை, திருப்பாவையுடனும் தொடர்புடையது என்பதை சான்றுகளுடன் நிறுவினார். ஊஞ்சல் திருவிழா 'த்ரியம்பாவை' என்றே தாய்லாந்தில் அழைக்கப்படுகிறது.
 
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் '[[யுனெஸ்கோ கூரியர்]]' தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
== விருதுகள், சிறப்புகள் ==
* பல்கலைச் செல்வர் – திருவாடுதுறை ஆதினம்
* பன்மொழிப் புலவர் – குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் பெருந்தமிழ் மணி – சிவபுரி சன்மார்க்க சபை (முதலமைச்சர் காமராசர் தலைமை)
* கலைமாமணி விருது-தமிழக அரசு
* சாகித்ய அகாடமி விருது
* பத்மபூஷண் விருது
====== நாட்டுடைமை ======
தெ.பொ. மீனாட்சிசுந்தரத்தின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கப்பட்டன.
== இறப்பு ==
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் ஆகஸ்ட் 27, 1980 அன்று சென்னையில் புற்றுநோயால் காலமானார்.
==இலக்கிய இடம்/மதிப்பீடு==
"தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது" என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து. தமிழின் தளம் விரிவுபடுத்தப்படவேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையோடு திறனாய்வுத் துறையில் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
 
தமிழியலுக்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் முக்கியமான பங்களிப்பு பல்கலைக்கழக அளவில் மொழியியலையும் ஒப்பிலக்கியத்தையும் பாடமாக்கி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியது. இலக்கியத் துறையில் ஆய்வு, ஆய்வு வழிகாட்டல், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினார். தமிழரல்லாதவர் தமிழை அறியச் செய்வதில் அவரது ஆங்கில நூல்களும், கட்டுரைகளும் தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் மொழி வரலாறு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளும், அவற்றின் நூல் வடிவத் தொகுப்புகளும் பெரும் பங்காற்றின. சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு தொடங்க ஆவன செய்தார். அவரது ஆய்வுகள் சிந்தனைகள் கட்டுரைகள் நூல்கள் யாவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுக்கு அறிவியல் நெறிப்பட்ட அணுகுமுறைகளை புதிய செல்நெறிகள் வழங்கிச் சென்றுள்ளன.
 
தமிழ் இலக்கியம், இலக்கணவரலாறு ஆகியவற்றிற்கு இணையாகவே மொழியியலிலும் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் இலக்கியங்கள், மரபிலக்கியங்களில் புலமை பெற்றவர்கள் மொழியியலை இலக்கியத்திற்கு எதிரியாகக் கருதிய காலத்தில் மொழியியல் அறிவு தமிழை நன்கு உணர்ந்து கற்கவும் , ஆய்வு செய்வதற்கு ஏற்ற கருவியாகவும் பயன்படும் என்பதை வலியுறுத்தினார். ஒரு மொழி அது பேசப்படும் சமுதாயத்தை பிரதிபலித்து வெளிப்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டி புதியதோர் ஆய்வுமுறைக்கு முன்னோடியாக அமைந்தார். அவரது தலைமையில் M.Litt பட்டத்திற்கு பல்வேறு இலக்கியங்களின் மொழி அமைப்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
ஒப்பிலக்கண ஆய்வு, மொழி வரலாற்றாய்வு என மொழியியல் ஆய்வை இரு கோணங்களில் அணுகினார். தமிழ் இலக்கணத்தில் பிறமொழிக்கூறிகளை ஆய்வு செய்தார். திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் தலைவராக திராவிட மொழிகளின் ஒலியமைப்பை விளக்கிய முன்னோடி. திராவிட மொழிகளின் பால்பாகுபாடுகள் பற்றிய பற்றிய அவரது ஒப்பிலக்கண ஆய்வு அத்துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
 
அவரது மொழி வரலாறு அறிவியல் ரீதியானது. அகவயப்பட்ட(subjective) பார்வைக்கு மாற்றாக புறவயப்பட்ட(objective) பார்வையை வழங்கி தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் உலகுக்கு எதைக் கொடுத்தது, எதைப் பெற்றுக் கொண்டது என்பதை பரந்துபட்ட ரீதியில் தெளிவுபடுத்தினார். மரபிலக்கணத்தின் நுண்ணிய கோட்பாடுகளை மொழியியல் வழியாக வெளிக்கொணரும் முறை அவராலும் அவர் மாணவர்களாலும் பின்பற்றப்பட்டது. மொழி வரலாற்றிலும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அவருடன் பணிபுரிந்த ஆசிரியர்களும், அவரது மாணவர்களும் தடம் பதித்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களின் பாரம்பரியத்தை அறிவுபூர்வமாகக் காண வழிவகுத்ததே தெ. பொ. மீ விட்டுச் சென்ற மரபாகும்.
 
"தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரைச் சிலர் பல்கலைக்கழகம் எனக்கு கூறுவர். எனக்கு அவர் அவ்வாறு தோன்றுகிறார் இல்லை. அவர் பல்கலைக்கழகத்தையும் கடந்த ஒருவர் என்பது என் உட்கிடக்கை. மீனாட்சிசுந்தரனார் பிறவி புண்ணியமுடையது. ஏன்?அவர் வாழும் உலகில் பகையில்லை" என [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு. வி. க]] மீனாட்சிசுந்தரனாரைப் போற்றியுள்ளார்.
 
ப. மருதநாயகம் தெபொ.மீ யின் திறனாய்வுகள் பற்றிய தன் முனைவர் பட்ட ஆய்வு நூலில்( 'திறனாய்வாளர் தெ.பா.மீ' ) தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மேற்கத்திய திறனாய்வாளர்களுக்குக்கு நிகரானவர் என்று குறிப்பிடுகிறார். டி.எஸ்.எலியட்டைப்போல(T.S.Eliot) தெ.பொ.மீயும் படைப்புகளை மதிப்பிடும் பொழுது இலக்கிய தன்மைக்கு முதன்மை தரும் போக்கைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
==படைப்புகள்==
*வள்ளுவரும் மகளிரும்
* அன்பு முடி
*கால்டுவெல் ஒப்பிலக்கணம்
*தமிழா நினைத்துப்பார்
*நீங்களும் சுவையுங்கள்
*வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
*பிறந்தது எப்படியோ?
*கானல்வரி
*சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
*கல்விச் சிந்தனைகள்
*தமிழ் மணம்
*தமிழும் பிற பண்பாடும்
*வாழும் கலை
*தமிழ் மொழி வரலாறு
*தமிழ் இலக்கிய வரலாறு
*மொழியியல் விளையாட்டுக்கள்
*பத்துப்பாட்டு ஆய்வு
*குடிமக்கள் காப்பியம்,
*பிறந்தது எப்படியோ,
*தமிழா நினைத்துப்பார்
*சமணத் தமிழிலக்கியம்
*குசேலர்.
*அச்சொற்கள்
*மனோதத்துவ சாத்திரம்
*
=====ஆங்கில நூல்கள்=====
*A History of Tamil Language
*A History of Tamil Literature
*Philosophy of Thiruvalluvar
*Advaita in Tamil
*Tamil – A Bird’s eye view
*
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0001666_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8A_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் தமிழ்த்தொண்டும் மொழியியல் பங்களிப்பும் -கோ.சீனிவாசவர்மா]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3038 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் - தென்றல் இதழ்]
* [https://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/1663-2009-09-13-14-35-33/2013-sp-140/25791-2013-12-20-06-14-22 உலகப் பரப்பில் தமிழியல் ஆய்வு- பா.ரா.சுப்ரமணியனுடன் நேர்காணல் கீற்று இதழ்]
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
{{Finalised}}
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]

Latest revision as of 20:14, 12 July 2023

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தென்பட்டணம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரம்:ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர், தமிழியல் ஆய்வாளர்,பன்மொழிப் புலமை பெற்றவர். பழந்தமிழ்ப்பண்பாட்டு ஆய்வை மேலைநாட்டு ஆய்வுமுறைகளைக்கொண்டு வகுத்துரைத்த கல்வியாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் ஆய்வுத் தளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினார். பல்கலைக்கழகங்களில் மொழியியல், ஒப்பிலக்கணத் துறைகளை ஏற்படுத்தி, அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு வழிகோலியவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் அல்டெர்மனாகவும் (alderman-மேயருக்கு அடுத்த நகராட்சிக்குழு மூத்த உறுப்பினர்) பணிபுரிந்தார். மத்திய அரசின் பத்மபூஷண் விருது, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

பிறப்பு,கல்வி

தெ. பொ. மீனாட்சி சுந்தரம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் ஜனவரி 8,1901 அன்று பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பொன்னுசாமிக் கிராமணியார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரான தி. க. சுப்பராய செட்டியாரிடம் தமிழ் பயின்றவர். தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரை தன் மகனுக்கு இட்டார். நாடகக் கலைஞரும், தேசபக்தி நாடகங்களை அரங்கேற்றியவருமான தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் இவரது மூத்த சகோதரர்.

பள்ளிக்கல்வியை சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தார்.1920-ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் 1922-ல் பி.எல். பட்டமும் பெற்றார். 1923-ல் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1923-ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இருப்பினும் அத்துறையில் மிகக் குறைந்த காலமே பணி செய்தார்.

1924-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் (Indian Aluminium factory worker's association) தலைவராய் பணியாற்றினார்.

தமிழின் மேலிருந்த தீராத ஆர்வத்தால் 1934-க்குள் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். வேதாந்த சங்கத்தை நடத்திய கோ. வடிவேலு செட்டியாரிடம் தருக்கம், வேதாந்தம், தமிழிலக்கியம் ஆகியவற்றைப் பயின்றார். கா.ர. கோவிந்தராச முதலியார், திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் போன்ற அறிஞர்களிடம் வேதாந்தமும் தமிழ் இலக்கியங்களும் கற்றார். இராமலிங்கத் தம்பிரானிடம் தணிகைப் புராணம் , சேது புராணம் ஆகியவற்றைக் கற்றார். மறைமலையடிகளிடம் சைவ சித்தாந்தத்தையும், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கரச்சாரியார், திருப்புறம்பியம் ராமசாமி நாயுடு மற்றும் ஶ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரிடம் வைணவத் தத்துவமும் பயின்றார்.

1939-40 ஆண்டுகளில் தமிழ் வித்வான் இளநிலை, நிறைநிலைத் தேர்வுகள் எழுதி 'வித்வான்' பட்டம் பெற்றார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

1941-ல் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.

ஜூல்ஸ் ப்லாக்(Jules Block) என்ற பேராசிரியரின் மேற்பார்வையில் 1939-ல் எம். ஒ. எல் பட்டத்திற்காக ஒலியியலில் (Phonology) தமிழ் ஒலிகளில் ஆராய்ச்சி செய்தார். அவரது ஆய்வுக்கட்டுரை மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு எனத் தேர்வாளர்களால் பாராட்டப்பட்டது. ஜூல்ஸ் ப்லாகின் தூண்டுதலால் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் உயர் சான்றிதழ் பெற்றார்.

கல்விப் பணிகள்

panuval.com
panuval.com
tamizhum
commonfolks.in
Pattile.jpg

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் பணியாற்றியபோது சிந்தாதிரிப்பேட்டையிலும், சுற்றுப்புறங்களிலும் பல ஆரம்பப் பள்ளிகளை ஏற்படுத்தி, அவற்றின் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணித்தார். 1936-ல் கோ. வடிவேலு செட்டியாரின் மரணத்திற்குப்பின் வேதாந்த சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்தல், சென்னைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி பல இலக்கிய மாநாடுகளை நடத்துதல் ஆகிய பணிகளை இக்காலகட்டத்தில் மேற்கொண்டார். தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 1944-ல் ராஜா.சர்.அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டு 1946 வரை பணியாற்றினார். 1954-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ் பேராசிரியராகப் பணியேற்று, ஒப்பிலக்கியத்தையும், கல்வெட்டு மொழி ஆய்வையும் பாடங்களாக்கினார். மீண்டும் 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1945-ல்நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாடு திராவிடப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தை தலைவராக நியமித்தது.

சிகாகோ பல்கலைகழகத்தில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டபோது தெ. பொ. மீனாட்சிசுந்தரம் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டு பத்து சொற்பொழிவுகள் தமிழ் மொழி வரலாற்றைப் பற்றியும் பத்து சொற்பொழிவுகள் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் ஆற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அச்சொற்பொழிவுகளின் இறுதிவடிவம் ' A history of Tamil Language[1]' 'A history of Tamil literature' என்ற இரு நூல்களாக வெளியானது.

1963 முதல் 65 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் (Advanced Centre for Dravidian Linguistic) இயக்குனராகப் பணியாற்றி தமிழகத்தில் மொழியியல் கல்வி தனித்து வளர்வதற்கும் துறைசார் ஆய்வாளர்கள் பலரைத் தோற்றுவிக்கவும் காரணமானார்.

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார். மதுரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக புதிய அறிவியல் துறைகள், உயிரியல், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளைத் தொடங்கினார். தமிழ்த்துறை தமிழியல் துறையாக அமையவும், ஒப்பிலக்கியத் துறை உருவாகவும் வழி வகுத்தார். மாணவர்களின் நலனுக்காக தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.

1973-74ம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இலக்கிய/தமிழியல் பணி

marinabooks.com
commonfolks.in

தெ, பொ. மீனாட்சிசுந்தரம் கலைக்களஞ்சியத்தில் தமிழ் எழுத்தியல், மொழியியல், இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் 88 கட்டுரைகள் எழுதினார். ஈழத்து இலக்கிய ஏடான 'கலாநிலையம்', 'விவேக சூடாமணி', 'லோகோபகாரி', 'நவசக்தி' ஆகிய இதழ்களில் இலக்கியம், மொழியியல், தத்துவம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் வரையறுத்தார். சென்னைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவி பத்துப்பாட்டு, தொல்காப்பியம் மாநாடுகளை நடத்தினார். திருவள்ளுவர் கூறும் பெண்மையின் பெருமையை 'வள்ளுவரும் மகளிரும்' என்ற நூலாக எழுதினார். ' 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' ஓர் ஒப்பிலக்கிய நூலாகும்.

தமிழில் மொழியியல் துறையின் முன்னோடியாகக் கருதப்படும் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மொழியியல் நோக்கில் மொழியை அணுகி ஆராயும்போது மொழியின் கட்டமைப்பையும் அது சமுதாயத்தில் வழங்கி வரும் முறையையும் காணலாம் என்பதைத் தன் ஆய்வுகளின் மூலம் அறியச் செய்தார்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் இலக்கண வரலாற்றை வடமொழி இலக்கணம், தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஆய்வுசெய்தார். வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மொழிகள். இந்தியாவில் வழங்கும் பல்வேறு மொழி இலக்கியங்களிலிருந்து இந்திய இலக்கியம் என ஒன்றை வகுத்துக்கொள்ளமுடியும் என்று கருதினார்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் வழிக் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை போன்ற அறிவியல் தத்துவங்களைத் தமிழில் எழுதினார். தமிழ் மொழி எழுத்துக்களை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியும், திருத்தியும், குறைத்தும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

"Rhythm of the common speech; Glorification by Bharathi" என்ற நூலில் பாரதியின் மொழிநடை தமிழ் மரபிலிருந்து எதைப் பெற்றுக்கொண்டது என்பதைஆராய்கிறார்.

நோம் சோம்ஸ்கியின்( Noam Chomsky) ஆய்வுகளின் வழியாக மாற்றிலக்கணம் ( transformational grammar) என்ற புதிய கோட்பாடு உருவாகி உலக அளவில் மொழியியல் ஆய்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கோட்பாட்டை முழுவதுமாக உள்வாங்கி, தமிழுக்கு அறிமுகம் செய்யும் முகமாக தமிழ் எடுத்துக்காட்டுகளுடன் 'மாற்றிலக்கணம்'[2] என்ற நூலை எழுதினார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று தமிழ் பற்றிய அரிய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார். 'தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை' என்ற நூலில் தமிழ்நாட்டுச் சடங்குகளுக்கும், தாய்லாந்து நாட்டு சடங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கினார். தாய்லாந்தின் ஊஞ்சல் திருவிழா தமிழ்நாட்டின் பாவை நோன்புடனும் திருவெம்பாவை, திருப்பாவையுடனும் தொடர்புடையது என்பதை சான்றுகளுடன் நிறுவினார். ஊஞ்சல் திருவிழா 'த்ரியம்பாவை' என்றே தாய்லாந்தில் அழைக்கப்படுகிறது.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 'யுனெஸ்கோ கூரியர்' தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

விருதுகள், சிறப்புகள்

  • பல்கலைச் செல்வர் – திருவாடுதுறை ஆதினம்
  • பன்மொழிப் புலவர் – குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் பெருந்தமிழ் மணி – சிவபுரி சன்மார்க்க சபை (முதலமைச்சர் காமராசர் தலைமை)
  • கலைமாமணி விருது-தமிழக அரசு
  • சாகித்ய அகாடமி விருது
  • பத்மபூஷண் விருது
நாட்டுடைமை

தெ.பொ. மீனாட்சிசுந்தரத்தின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இறப்பு

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் ஆகஸ்ட் 27, 1980 அன்று சென்னையில் புற்றுநோயால் காலமானார்.

இலக்கிய இடம்/மதிப்பீடு

"தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது" என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து. தமிழின் தளம் விரிவுபடுத்தப்படவேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையோடு திறனாய்வுத் துறையில் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழியலுக்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் முக்கியமான பங்களிப்பு பல்கலைக்கழக அளவில் மொழியியலையும் ஒப்பிலக்கியத்தையும் பாடமாக்கி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியது. இலக்கியத் துறையில் ஆய்வு, ஆய்வு வழிகாட்டல், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினார். தமிழரல்லாதவர் தமிழை அறியச் செய்வதில் அவரது ஆங்கில நூல்களும், கட்டுரைகளும் தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் மொழி வரலாறு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளும், அவற்றின் நூல் வடிவத் தொகுப்புகளும் பெரும் பங்காற்றின. சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு தொடங்க ஆவன செய்தார். அவரது ஆய்வுகள் சிந்தனைகள் கட்டுரைகள் நூல்கள் யாவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுக்கு அறிவியல் நெறிப்பட்ட அணுகுமுறைகளை புதிய செல்நெறிகள் வழங்கிச் சென்றுள்ளன.

தமிழ் இலக்கியம், இலக்கணவரலாறு ஆகியவற்றிற்கு இணையாகவே மொழியியலிலும் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் இலக்கியங்கள், மரபிலக்கியங்களில் புலமை பெற்றவர்கள் மொழியியலை இலக்கியத்திற்கு எதிரியாகக் கருதிய காலத்தில் மொழியியல் அறிவு தமிழை நன்கு உணர்ந்து கற்கவும் , ஆய்வு செய்வதற்கு ஏற்ற கருவியாகவும் பயன்படும் என்பதை வலியுறுத்தினார். ஒரு மொழி அது பேசப்படும் சமுதாயத்தை பிரதிபலித்து வெளிப்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டி புதியதோர் ஆய்வுமுறைக்கு முன்னோடியாக அமைந்தார். அவரது தலைமையில் M.Litt பட்டத்திற்கு பல்வேறு இலக்கியங்களின் மொழி அமைப்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒப்பிலக்கண ஆய்வு, மொழி வரலாற்றாய்வு என மொழியியல் ஆய்வை இரு கோணங்களில் அணுகினார். தமிழ் இலக்கணத்தில் பிறமொழிக்கூறிகளை ஆய்வு செய்தார். திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் தலைவராக திராவிட மொழிகளின் ஒலியமைப்பை விளக்கிய முன்னோடி. திராவிட மொழிகளின் பால்பாகுபாடுகள் பற்றிய பற்றிய அவரது ஒப்பிலக்கண ஆய்வு அத்துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

அவரது மொழி வரலாறு அறிவியல் ரீதியானது. அகவயப்பட்ட(subjective) பார்வைக்கு மாற்றாக புறவயப்பட்ட(objective) பார்வையை வழங்கி தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் உலகுக்கு எதைக் கொடுத்தது, எதைப் பெற்றுக் கொண்டது என்பதை பரந்துபட்ட ரீதியில் தெளிவுபடுத்தினார். மரபிலக்கணத்தின் நுண்ணிய கோட்பாடுகளை மொழியியல் வழியாக வெளிக்கொணரும் முறை அவராலும் அவர் மாணவர்களாலும் பின்பற்றப்பட்டது. மொழி வரலாற்றிலும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அவருடன் பணிபுரிந்த ஆசிரியர்களும், அவரது மாணவர்களும் தடம் பதித்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களின் பாரம்பரியத்தை அறிவுபூர்வமாகக் காண வழிவகுத்ததே தெ. பொ. மீ விட்டுச் சென்ற மரபாகும்.

"தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரைச் சிலர் பல்கலைக்கழகம் எனக்கு கூறுவர். எனக்கு அவர் அவ்வாறு தோன்றுகிறார் இல்லை. அவர் பல்கலைக்கழகத்தையும் கடந்த ஒருவர் என்பது என் உட்கிடக்கை. மீனாட்சிசுந்தரனார் பிறவி புண்ணியமுடையது. ஏன்?அவர் வாழும் உலகில் பகையில்லை" என திரு. வி. க மீனாட்சிசுந்தரனாரைப் போற்றியுள்ளார்.

ப. மருதநாயகம் தெபொ.மீ யின் திறனாய்வுகள் பற்றிய தன் முனைவர் பட்ட ஆய்வு நூலில்( 'திறனாய்வாளர் தெ.பா.மீ' ) தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மேற்கத்திய திறனாய்வாளர்களுக்குக்கு நிகரானவர் என்று குறிப்பிடுகிறார். டி.எஸ்.எலியட்டைப்போல(T.S.Eliot) தெ.பொ.மீயும் படைப்புகளை மதிப்பிடும் பொழுது இலக்கிய தன்மைக்கு முதன்மை தரும் போக்கைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

படைப்புகள்

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு
  • குடிமக்கள் காப்பியம்,
  • பிறந்தது எப்படியோ,
  • தமிழா நினைத்துப்பார்
  • சமணத் தமிழிலக்கியம்
  • குசேலர்.
  • அச்சொற்கள்
  • மனோதத்துவ சாத்திரம்
ஆங்கில நூல்கள்
  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s eye view

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page