குறியிறையார்: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
குறியிறையார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில்  இடம்பெற்றுள்ளது.
குறியிறையார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில்  இடம்பெற்றுள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'குறியிறைப் புதல்வர்’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'குறியிறைப் புதல்வர்' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
குறியிறையார் பாடிய ஒரு பாடல் [[குறுந்தொகை|குறுந்தொகையில்]]  394-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவை எண்ணி வாடும் தலைவியிடம் தோழி, தலைவனது இயல்பை பழித்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
குறியிறையார் பாடிய ஒரு பாடல் [[குறுந்தொகை|குறுந்தொகையில்]]  394-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவை எண்ணி வாடும் தலைவியிடம் தோழி, தலைவனது இயல்பை பழித்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவன், சொல்லியபடி திரும்பி வராமல் தலைவிக்கு பிரிவுத் துயரத்தைக் கொடுக்கிறான். அது கண்ட தோழி தலைவியிடம் தலைவனின் குண மாற்றத்தைப் பழித்து கூறுகிறாள்.
பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவன், சொல்லியபடி திரும்பி வராமல் தலைவிக்கு பிரிவுத் துயரத்தைக் கொடுக்கிறான். அது கண்ட தோழி தலைவியிடம் தலைவனின் குண மாற்றத்தைப் பழித்துக் கூறுகிறாள்.
*பெண் யானையின் முழங்காலளவு உயரமே உள்ள யானைக் கன்றானது கள் மிகுந்த மலை ஊரில் இருக்கும்  குறவர் பிள்ளைகளுடன் விளையாடும்.
*பெண் யானையின் முழங்காலளவு உயரமே உள்ள யானைக் கன்றானது கள் மிகுந்த மலை ஊரில் இருக்கும்  குறவர் பிள்ளைகளுடன் விளையாடும்.
*உவமை: பாலுறுப்பை மறைக்கும் குறியிறை என்ற அணிகலன்களை அணிந்த குறவர் சிறுபிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்த யானைக்கன்று, வளர்ந்த பின் குறவர்கள் காவல் காக்கும் தினை வயலை மேய்ந்து அவர்களுக்கு பகையாக மாறுவது போல தலைவனும் உன்னிடத்தே முன்பு பழகி அன்பு செய்துவிட்டு, இப்போது பிரிவுத் துயரத்தை உனக்குக் கொடுத்துள்ளான்.

Line 25: Line 25:
*[https://www.tamilvu.org/node/154572?linkid=21637 குறுந்தொகை - 394 - Tamilvu]
*[https://www.tamilvu.org/node/154572?linkid=21637 குறுந்தொகை - 394 - Tamilvu]

{{Second review completed}}
{{Finalised}}
{{Fndt|22-Nov-2024, 13:00:31 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'குறியிறைப் புதல்வர்' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

குறியிறையார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 394-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவை எண்ணி வாடும் தலைவியிடம் தோழி, தலைவனது இயல்பை பழித்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவன், சொல்லியபடி திரும்பி வராமல் தலைவிக்கு பிரிவுத் துயரத்தைக் கொடுக்கிறான். அது கண்ட தோழி தலைவியிடம் தலைவனின் குண மாற்றத்தைப் பழித்துக் கூறுகிறாள்.

  • பெண் யானையின் முழங்காலளவு உயரமே உள்ள யானைக் கன்றானது கள் மிகுந்த மலை ஊரில் இருக்கும் குறவர் பிள்ளைகளுடன் விளையாடும்.
  • உவமை: பாலுறுப்பை மறைக்கும் குறியிறை என்ற அணிகலன்களை அணிந்த குறவர் சிறுபிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்த யானைக்கன்று, வளர்ந்த பின் குறவர்கள் காவல் காக்கும் தினை வயலை மேய்ந்து அவர்களுக்கு பகையாக மாறுவது போல தலைவனும் உன்னிடத்தே முன்பு பழகி அன்பு செய்துவிட்டு, இப்போது பிரிவுத் துயரத்தை உனக்குக் கொடுத்துள்ளான்.

பாடல் நடை

குறுந்தொகை - 394

குறிஞ்சித் திணை துறை: வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்ந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:00:31 IST