under review

கமலா சத்தியநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors in article)
(Corrected typo errors;)
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=கமலா|DisambPageTitle=[[கமலா (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=சத்தியநாதன்|DisambPageTitle=[[சத்தியநாதன் (பெயர் பட்டியல்)]]}}
[[File:Kamala Sathyanathan.jpg|thumb|கமலா சத்தியநாதன்]]

கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: ஜூலை 2,1879- ஜனவரி 26, 1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான 'The Indian Ladies Magazine’-ன் ஆசிரியர். கல்வியாளர் [[சாமுவேல் சத்தியநாதன்|சாமுவேல் சத்தியநாதனி]]ன் மனைவி.  
கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: ஜூலை 2,1879- ஜனவரி 26, 1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான 'The Indian Ladies Magazine'-ன் ஆசிரியர். கல்வியாளர் [[சாமுவேல் சத்தியநாதன்|சாமுவேல் சத்தியநாதனி]]ன் மனைவி.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா என்னும் இயற்பெயர் கொண்ட கமலா சத்தியநாதன், ஜூலை 2, 1879-ல், ராஜமுந்திரியில், ஒருகன்டி சிவராமன் கிருஷ்ணம்மா - நானி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பிராமணர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய குடும்பம் அவர்களுடையது. உயர்கல்வியை உள்ளூரில் முடித்த கமலா, தனது சகோதரி சுந்தரத்துடன் கல்லூரிப் படிப்பை மசூலிப்பட்டினத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இண்டர்மீடியட் படிப்பில் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.  

Line 12: Line 14:
சாமுவேல் சத்தியநாதன் ஏப்ரல் 4, 1906 அன்று, ஜப்பானில் உள்ள யோகோஹமாவில் சாமுவேல் சத்தியநாதன் காலமானார். ஆறு வயது மகனுடனும், கைக்குழந்தையான மகளுடனும் ஜப்பானுக்குச் சென்று கணவருக்கு இறுதி மரியாதைகளைச் செய்துவிட்டு இந்தியா திரும்பினார் கமலா சத்தியநாதன்.

====== பீதாபுரத்தில் ======
====== பீதாபுரத்தில் ======
கணவரைப் பிரிந்த கமலாவுக்கு உறுதுணையாக அவரது தாய் நானி இருந்தார். அதே 1906-ம் ஆண்டில் சாமுவேல்- கமலா இணையர் பணம் சேர்த்து வைத்திருந்த அர்பத்நாட் வங்கி திவாலானது. சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பணத்தையும் இழந்தார் கமலா சத்தியநாதன். இந்நிலையில் அவருக்கு பீதாபுரத்து ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணி வாய்ப்பு வந்தது. மகன் பில், மகள் பத்மினி, தாய் நானி மற்றும் சில உதவியாளர்களுடன் பீதாபுரத்துக்குச் சென்றார் கமலா. அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் தங்கி ராணிக்கு ஆங்கிலமும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்போதும் தொய்வில்லாமல் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை நடத்திவந்தார். ஆறாண்டுகள் அங்கே இருந்தார்  
கணவரைப் பிரிந்த கமலாவுக்கு உறுதுணையாக அவரது தாய் நானி இருந்தார். அதே 1906-ம் ஆண்டில் சாமுவேல்- கமலா இணையர் பணம் சேர்த்து வைத்திருந்த அர்பத்நாட் வங்கி திவாலானது. சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பணத்தையும் இழந்தார் கமலா சத்தியநாதன். இந்நிலையில் அவருக்கு பீதாபுரத்து ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணி வாய்ப்பு வந்தது. மகன் பில், மகள் பத்மினி, தாய் நானி மற்றும் சில உதவியாளர்களுடன் பீதாபுரத்துக்குச் சென்றார் கமலா. அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் தங்கி ராணிக்கு ஆங்கிலமும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்போதும் தொய்வில்லாமல் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' இதழை நடத்திவந்தார். ஆறாண்டுகள் அங்கே இருந்தார்  
====== சென்னையில் ======
====== சென்னையில் ======
கமலா சத்தியநாதன் பீதாபுரத்தில் இருந்து வால்டருக்கும் (விசாகப்பட்டினம்) ராஜமுந்திரிக்கும் சென்று வசித்தார். பின்னர் சென்னை லேடீஸ் க்ளப்பில் மணமான பெண்களுக்கு ஆங்கிலம், வரலாறு, புவியியல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அப்போது நாடகங்கள் சிலவற்றை உருவாக்கி கதை, வசனம் எழுதி அரங்கேற்றினார். அதற்கு அக்கால இதழ்களிலிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. அக்காலகட்டத்திலும், கமலாவின் ஆசிரியத்துவத்தில், 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தொய்வில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தது.  
கமலா சத்தியநாதன் பீதாபுரத்தில் இருந்து வால்டருக்கும் (விசாகப்பட்டினம்) ராஜமுந்திரிக்கும் சென்று வசித்தார். பின்னர் சென்னை லேடீஸ் க்ளப்பில் மணமான பெண்களுக்கு ஆங்கிலம், வரலாறு, புவியியல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அப்போது நாடகங்கள் சிலவற்றை உருவாக்கி கதை, வசனம் எழுதி அரங்கேற்றினார். அதற்கு அக்கால இதழ்களிலிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. அக்காலகட்டத்திலும், கமலாவின் ஆசிரியத்துவத்தில், 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' தொய்வில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தது.  
====== இங்கிலாந்தில் ======
====== இங்கிலாந்தில் ======
1919-ல் கமலா, தனது குழந்தைகளின் மேற் கல்விக்காக, தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த தொகை மூலம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தியன் ரீஃபார்மர் போன்ற இந்திய இதழ்கள் சிலவற்றிற்கு இங்கிலாந்திலிருந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார். மகன் பில் ஐ.சி.எஸ். தேர்ச்சி பெறும் வரை இங்கிலாந்தில் இருந்த கமலா சத்தியநாதன் அதன் பின் தமிழ்நாடு திரும்பினார்.

Line 20: Line 22:
கமலா சத்தியநாதனின் மகன் பில் சத்தியநாதன் இங்கிலாந்தில் ICS பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பியதும்ர் அரசாங்கத்தால் தஞ்சையின் உதவி கலெக்டர் ஆக நியமிக்கப்பட்டார். அவருடன் சென்று வசித்தார் கமலா. பின் திருநெல்வேலிக்கு மகனுக்குப் பணி மாறுதல் பெற்றபோது அங்கும் சென்று வசித்தார்

====== சென்னை ======
====== சென்னை ======
கமலாவின் மகன் பில்லுக்கு, 'நில ஆவணங்கள் துறை இயக்குநர்’ (Director of Land Records) ஆகச் சென்னைக்குப் பணி மாறுதல் கிடைத்தது. அதனால் மகனுடன் சென்னைக்கு வந்தார்.
கமலாவின் மகன் பில்லுக்கு, 'நில ஆவணங்கள் துறை இயக்குநர்' (Director of Land Records) ஆகச் சென்னைக்குப் பணி மாறுதல் கிடைத்தது. அதனால் மகனுடன் சென்னைக்கு வந்தார்.
== கல்விப்பணிகள் ==
== கல்விப்பணிகள் ==
====== சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரி ======

Line 26: Line 28:
ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த கமலா, ஆங்கிலத்தை மிக விரும்பிக் கற்றார். சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். அப்போதைய சென்னை ராஜதானியில், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற முதல் பட்டதாரியும் கமலா சத்தியநாதன் தான். இதனை அக்காலத்தில் வெளிவந்த இதழ்கள் பாராட்டி எழுதின.

====== வித்யோதயா ======
====== வித்யோதயா ======
இங்கிலாந்தில் வசித்த தனது தோழி திருமதி ஈ.எஸ்.அப்பாசுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் கமலா சத்தியநாதன். அதற்கு 'வித்யோதயா’ <ref>https://vidyodayaschools.in/history.php</ref> என்று பெயர் சூட்டியதுடன் பள்ளியின் முதல் முதலவர் ஆகவும் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் மூன்றாண்டுகள் சென்னைப்பல்கலையிலும், ஆந்திரப் பல்கலையிலும் செனட் உறுப்பினராக இருந்தார். ராயல் ஆசியாடிக் சொசைட்டியிலும், சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை மற்றும் விஜயநகரில் கெளரவ மாஜிஸ்திரேட் ஆகவும் பணியாற்றினார். பெண்கள் கல்விக்கான மத்திய ஆலோசனைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
இங்கிலாந்தில் வசித்த தனது தோழி திருமதி ஈ.எஸ்.அப்பாசுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் கமலா சத்தியநாதன். அதற்கு 'வித்யோதயா' <ref>https://vidyodayaschools.in/history.php</ref> என்று பெயர் சூட்டியதுடன் பள்ளியின் முதல் முதலவர் ஆகவும் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் மூன்றாண்டுகள் சென்னைப்பல்கலையிலும், ஆந்திரப் பல்கலையிலும் செனட் உறுப்பினராக இருந்தார். ராயல் ஆசியாடிக் சொசைட்டியிலும், சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை மற்றும் விஜயநகரில் கெளரவ மாஜிஸ்திரேட் ஆகவும் பணியாற்றினார். பெண்கள் கல்விக்கான மத்திய ஆலோசனைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
== இதழியல் ==
== இதழியல் ==
====== தி இந்தியன் லேடீஸ் மேகஸின் ======

பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா சத்தியநாதன் பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதன் அளித்த ஊக்கத்தால் சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான '[[தி இந்தியன் லேடீஸ் மேகஸின்]]’ (The Indian Ladies' Magazine) 1901-ல் தொடங்கப்பட்டது.  
பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா சத்தியநாதன் பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதன் அளித்த ஊக்கத்தால் சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான '[[தி இந்தியன் லேடீஸ் மேகஸின்]]' (The Indian Ladies' Magazine) 1901-ல் தொடங்கப்பட்டது.  
[[File:The Indian Ladies Magazine.jpg|thumb|தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - 1905-ம் ஆண்டு இதழ்]]

பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை கமலா சத்தியநாதன் எழுதினார்.  
பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை கமலா சத்தியநாதன் எழுதினார்.  

சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி உள்ளிட்ட பலர் அவ்விதழில் எழுதினர். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். இந்தியா முழுமைக்குமான பெண்கள் இதழாக இவ்விதழ் இருந்தது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது.

’தி லண்டன் டைம்ஸ்’, 'தி லண்டன் டெய்லி டெலிக்ராப்’ போன்ற இதழ்கள் தி இந்தியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.  
'தி லண்டன் டைம்ஸ்', 'தி லண்டன் டெய்லி டெலிக்ராப்' போன்ற இதழ்கள் தி இந்தியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.  

1901-1918 வரை இவ்விதழ் வெளியானது. தன் மகளுடன் திருநெல்வேலியில் வசித்தபோது, ஆகஸ்ட் 1927-ல், மீண்டும் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை ஆரம்பித்தார். தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார் . 1938 வரை இவ்விதழ் வெளிவந்தது.  
1901-1918 வரை இவ்விதழ் வெளியானது. தன் மகளுடன் திருநெல்வேலியில் வசித்தபோது, ஆகஸ்ட் 1927-ல், மீண்டும் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' இதழை ஆரம்பித்தார். தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார் . 1938 வரை இவ்விதழ் வெளிவந்தது.  
[[File:Kamala - Samuel Sathyanathan.jpg|thumb|கமலா - சாமுவேல் சத்தியநாதன்]]

== இலக்கியப் பணிகள் ==
== இலக்கியப் பணிகள் ==
கமலா சத்தியநாதன் தன் இதழான தி இண்டியன் லேடீஸ் மேகஸீனில் பல பெயர்களில் கட்டுரைகளை எழுதினார். ’Stories of Indian christian life’ என்ற நூலைக் கணவர் சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார். 'இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்' போன்ற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது இங்கிலாந்து வாழ்க்கை அனுபவங்களை, 1925-ல், ஹிந்து இதழில், மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்’ (My Impressions of England) என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார்
கமலா சத்தியநாதன் தன் இதழான தி இண்டியன் லேடீஸ் மேகஸீனில் பல பெயர்களில் கட்டுரைகளை எழுதினார். 'Stories of Indian christian life' என்ற நூலைக் கணவர் சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார். 'இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்' போன்ற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது இங்கிலாந்து வாழ்க்கை அனுபவங்களை, 1925-ல், ஹிந்து இதழில், மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்' (My Impressions of England) என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார்

கமலா எழுதிய முதல் நாவல் ’பத்மா’. தன்னுடைய இளவயது வாழ்க்கை அனுபவங்களையே கற்பனை கலந்து நாவலாக்கியிருக்கிறார். கமலா சத்தியநாதன் தன் இறுதிக்காலத்தில் எழுதிய நாவல்கள் டிடெக்டிவ் ஜானகி (Detective Janaki) மற்றும் சூர்யா ராவ்ஸ் ஆர்டியல் (Surya Rao's ordeal). சில நாடகங்களையும் கமலா சத்தியநாதன் எழுதியிருக்கிறார்.  
கமலா எழுதிய முதல் நாவல் 'பத்மா'. தன்னுடைய இளவயது வாழ்க்கை அனுபவங்களையே கற்பனை கலந்து நாவலாக்கியிருக்கிறார். கமலா சத்தியநாதன் தன் இறுதிக்காலத்தில் எழுதிய நாவல்கள் டிடெக்டிவ் ஜானகி (Detective Janaki) மற்றும் சூர்யா ராவ்ஸ் ஆர்டியல் (Surya Rao's ordeal). சில நாடகங்களையும் கமலா சத்தியநாதன் எழுதியிருக்கிறார்.  
== சமூகப்பணிகள் ==
== சமூகப்பணிகள் ==
கமலா சத்தியநாதன் திருநெல்வேலியில் தன் மகனுடன் வாழும்போது ஒரு குழந்தைகள் நல மற்றும் மகப்பேறு மையம் அமையக் காரணமானார். கமலா சத்தியநாதனின் முயற்சியால் அனந்தபூரில் பெண்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் சென்னையில் ஒன்பது கூட்டுறவுச் சங்கங்கள் உருவாயின.  

Line 51: Line 53:
== ஆவணம் ==
== ஆவணம் ==
[[File:Sathyanandhan family album.jpg|thumb|Family Album]]

The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், [[அன்னா சத்தியநாதன்]] மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, யுனிஸ் டிசௌஸா 'The Satthianadhan Family Album’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிட்டுள்ளார். அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் 'Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  
The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், [[அன்னா சத்தியநாதன்]] மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, யுனிஸ் டிசௌஸா 'The Satthianadhan Family Album' என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிட்டுள்ளார். அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் 'Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  

கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ' The Portrait of an Indain Woman’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன் கமலா சத்தியநாதனின் பணிகளை நினைவு கூந்துள்ளார். கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்கு, தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன் தான். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  
கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ' The Portrait of an Indain Woman' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன் கமலா சத்தியநாதனின் பணிகளை நினைவு கூந்துள்ளார். கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்கு, தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன் தான். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  
== பண்பாட்டு இடம் ==
== பண்பாட்டு இடம் ==
கமலா சத்தியநாதன் தமிழ்ச்சூழலில் வெளிவந்த முதல் பெண்கள் இதழை நடத்தியவர். சமூகவாழ்க்கைச்சூழல்களை பதிவுசெய்யும் கட்டுரைகளையும் நாவலையும் எழுதியவர். முன்னோடியான கல்வியாளர்.  

[[File:Kamala Books From Academy.jpg|thumb|Kamala Articles form the book 'The Satthianadhan Family Album']]

== நூல்கள் ==
== நூல்கள் ==
* Stories of Indian christian life’ (சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து ) 1898
* Stories of Indian christian life' (சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து ) 1898
* My Impressions of England. 1925
* My Impressions of England. 1925
*Padma Novel
*Padma Novel
Line 70: Line 72:
* [https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=21&id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlut6&tag=The+Indian+Ladies+magazine The Indian Ladies' Magazine: தமிழ் இணைய நூலகம்]

* [https://archive.org/details/in.ernet.dli.2015.96595 The Portrait Of An Indian Woman: பத்மினி சென்குப்தா]

*[https://www.google.co.in/books/edition/The_Indian_Ladies_Magazine_1901_1938/GzUpDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=The+++Satthianadhan+Family+Album&pg=PA86&printsec=frontcover The Indian Ladies' Magazine, 1901–1938 From Raj to Swaraj]  
*[https://www.google.co.in/books/edition/The_Indian_Ladies_Magazine_1901_1938/GzUpDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=The+++Satthianadhan+Family+Album&pg=PA86&printsec=frontcover The Indian Ladies' Magazine, 1901-1938 From Raj to Swaraj]  
*[https://www.google.co.in/books/edition/The_Satthianadhan_Family_Album/mYie-S7VMh4C?hl=en&gbpv=0 The Satthianadhan Family Album, Eunice de Souza]

* [https://www.vikatan.com/news/women/141187-south-india-first-woman-graduate-kamala தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி (விகடன் கட்டுரை)]

Line 84: Line 86:

[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:கல்வியாளர்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:45, 22 November 2025

கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)
சத்தியநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சத்தியநாதன் (பெயர் பட்டியல்)
கமலா சத்தியநாதன்

கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: ஜூலை 2,1879- ஜனவரி 26, 1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான 'The Indian Ladies Magazine'-ன் ஆசிரியர். கல்வியாளர் சாமுவேல் சத்தியநாதனின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா என்னும் இயற்பெயர் கொண்ட கமலா சத்தியநாதன், ஜூலை 2, 1879-ல், ராஜமுந்திரியில், ஒருகன்டி சிவராமன் கிருஷ்ணம்மா - நானி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பிராமணர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய குடும்பம் அவர்களுடையது. உயர்கல்வியை உள்ளூரில் முடித்த கமலா, தனது சகோதரி சுந்தரத்துடன் கல்லூரிப் படிப்பை மசூலிப்பட்டினத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இண்டர்மீடியட் படிப்பில் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தனி வாழ்க்கை

சிவராமன் தான் சென்னை சர்வகலாசாலையில் (சென்னைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய பெயர்) கமலாவைச் சேர்த்தார். உறவினர் ஒருவர் மூலம் ரெவரண்ட் வில்லியம் தாமஸ் சத்தியநாதன் (டபிள்யூ.டி. சத்தியநாதன்) அறிமுகமானார். அவரது மகன் சாமுவேல் சத்தியநாதன் ஏற்கனவே மணமாகி மனைவி கிருபா பாயை இழந்தவர், கமலாவை விட 19 வயது அதிக வயதுடையவர் எனினும் கமலா சாமுவேல் சத்தியநாதனை 1898-ல் மணந்துகொண்டார். திருமணத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் அவர்கள் குடியேறினர்.

மனைவி கமலாவின் ஆர்வங்களை அறிந்த சாமுவேல் சத்தியநாதன், கமலா முறையாக மேற்கல்வி பயில ஊக்குவித்தார். இளங்கலைப் பட்டத்திற்குப் பின், தான் பயின்ற அதே சென்னைப் பல்கலையில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார் கமலா. கணவரின் ஊக்குவிப்பால் செஸ், டென்னிஸ், பேட்மிட்டன் போன்றவை விளையாடக் கற்றுக் கொண்டார்.

குழந்தைகள்

கமலா - சாமுவேல் சத்தியநாதன் இணையருக்கு இரண்டு குழந்தைகள். முதல் மகன் பில் சத்தியநாதன் (வில்லியம் ரத்னம் சாமுவேல் சத்தியநாதன்) 1900-த்தில் பிறந்தார். இரண்டாவது மகளான பத்மினி (பத்மினி லிலியன் சத்தியநாதன்) 1905-ல் பிறந்தார்.

சாமுவேல் மறைவு

சாமுவேல் சத்தியநாதன் ஏப்ரல் 4, 1906 அன்று, ஜப்பானில் உள்ள யோகோஹமாவில் சாமுவேல் சத்தியநாதன் காலமானார். ஆறு வயது மகனுடனும், கைக்குழந்தையான மகளுடனும் ஜப்பானுக்குச் சென்று கணவருக்கு இறுதி மரியாதைகளைச் செய்துவிட்டு இந்தியா திரும்பினார் கமலா சத்தியநாதன்.

பீதாபுரத்தில்

கணவரைப் பிரிந்த கமலாவுக்கு உறுதுணையாக அவரது தாய் நானி இருந்தார். அதே 1906-ம் ஆண்டில் சாமுவேல்- கமலா இணையர் பணம் சேர்த்து வைத்திருந்த அர்பத்நாட் வங்கி திவாலானது. சேர்த்து வைத்திருந்த அனைத்துப் பணத்தையும் இழந்தார் கமலா சத்தியநாதன். இந்நிலையில் அவருக்கு பீதாபுரத்து ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணி வாய்ப்பு வந்தது. மகன் பில், மகள் பத்மினி, தாய் நானி மற்றும் சில உதவியாளர்களுடன் பீதாபுரத்துக்குச் சென்றார் கமலா. அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் தங்கி ராணிக்கு ஆங்கிலமும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்போதும் தொய்வில்லாமல் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' இதழை நடத்திவந்தார். ஆறாண்டுகள் அங்கே இருந்தார்

சென்னையில்

கமலா சத்தியநாதன் பீதாபுரத்தில் இருந்து வால்டருக்கும் (விசாகப்பட்டினம்) ராஜமுந்திரிக்கும் சென்று வசித்தார். பின்னர் சென்னை லேடீஸ் க்ளப்பில் மணமான பெண்களுக்கு ஆங்கிலம், வரலாறு, புவியியல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அப்போது நாடகங்கள் சிலவற்றை உருவாக்கி கதை, வசனம் எழுதி அரங்கேற்றினார். அதற்கு அக்கால இதழ்களிலிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. அக்காலகட்டத்திலும், கமலாவின் ஆசிரியத்துவத்தில், 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' தொய்வில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தது.

இங்கிலாந்தில்

1919-ல் கமலா, தனது குழந்தைகளின் மேற் கல்விக்காக, தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த தொகை மூலம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தியன் ரீஃபார்மர் போன்ற இந்திய இதழ்கள் சிலவற்றிற்கு இங்கிலாந்திலிருந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார். மகன் பில் ஐ.சி.எஸ். தேர்ச்சி பெறும் வரை இங்கிலாந்தில் இருந்த கமலா சத்தியநாதன் அதன் பின் தமிழ்நாடு திரும்பினார்.

தஞ்சை,நெல்லை

கமலா சத்தியநாதனின் மகன் பில் சத்தியநாதன் இங்கிலாந்தில் ICS பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பியதும்ர் அரசாங்கத்தால் தஞ்சையின் உதவி கலெக்டர் ஆக நியமிக்கப்பட்டார். அவருடன் சென்று வசித்தார் கமலா. பின் திருநெல்வேலிக்கு மகனுக்குப் பணி மாறுதல் பெற்றபோது அங்கும் சென்று வசித்தார்

சென்னை

கமலாவின் மகன் பில்லுக்கு, 'நில ஆவணங்கள் துறை இயக்குநர்' (Director of Land Records) ஆகச் சென்னைக்குப் பணி மாறுதல் கிடைத்தது. அதனால் மகனுடன் சென்னைக்கு வந்தார்.

கல்விப்பணிகள்

சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரி
கமலா சத்தியநாதன் எம்.ஏ.பட்டம் பெற்ற குறிப்பு

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த கமலா, ஆங்கிலத்தை மிக விரும்பிக் கற்றார். சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். அப்போதைய சென்னை ராஜதானியில், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற முதல் பட்டதாரியும் கமலா சத்தியநாதன் தான். இதனை அக்காலத்தில் வெளிவந்த இதழ்கள் பாராட்டி எழுதின.

வித்யோதயா

இங்கிலாந்தில் வசித்த தனது தோழி திருமதி ஈ.எஸ்.அப்பாசுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் கமலா சத்தியநாதன். அதற்கு 'வித்யோதயா' [1] என்று பெயர் சூட்டியதுடன் பள்ளியின் முதல் முதலவர் ஆகவும் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் மூன்றாண்டுகள் சென்னைப்பல்கலையிலும், ஆந்திரப் பல்கலையிலும் செனட் உறுப்பினராக இருந்தார். ராயல் ஆசியாடிக் சொசைட்டியிலும், சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலும் உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை மற்றும் விஜயநகரில் கெளரவ மாஜிஸ்திரேட் ஆகவும் பணியாற்றினார். பெண்கள் கல்விக்கான மத்திய ஆலோசனைக் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.

இதழியல்

தி இந்தியன் லேடீஸ் மேகஸின்

பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா சத்தியநாதன் பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதன் அளித்த ஊக்கத்தால் சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' (The Indian Ladies' Magazine) 1901-ல் தொடங்கப்பட்டது.

தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - 1905-ம் ஆண்டு இதழ்

பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை கமலா சத்தியநாதன் எழுதினார்.

சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி உள்ளிட்ட பலர் அவ்விதழில் எழுதினர். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். இந்தியா முழுமைக்குமான பெண்கள் இதழாக இவ்விதழ் இருந்தது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது.

'தி லண்டன் டைம்ஸ்', 'தி லண்டன் டெய்லி டெலிக்ராப்' போன்ற இதழ்கள் தி இந்தியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.

1901-1918 வரை இவ்விதழ் வெளியானது. தன் மகளுடன் திருநெல்வேலியில் வசித்தபோது, ஆகஸ்ட் 1927-ல், மீண்டும் 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்' இதழை ஆரம்பித்தார். தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார் . 1938 வரை இவ்விதழ் வெளிவந்தது.

கமலா - சாமுவேல் சத்தியநாதன்

இலக்கியப் பணிகள்

கமலா சத்தியநாதன் தன் இதழான தி இண்டியன் லேடீஸ் மேகஸீனில் பல பெயர்களில் கட்டுரைகளை எழுதினார். 'Stories of Indian christian life' என்ற நூலைக் கணவர் சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார். 'இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்' போன்ற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது இங்கிலாந்து வாழ்க்கை அனுபவங்களை, 1925-ல், ஹிந்து இதழில், மை இப்ம்ரஷன்ஸ் ஆஃப் இங்லாண்ட்' (My Impressions of England) என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார்

கமலா எழுதிய முதல் நாவல் 'பத்மா'. தன்னுடைய இளவயது வாழ்க்கை அனுபவங்களையே கற்பனை கலந்து நாவலாக்கியிருக்கிறார். கமலா சத்தியநாதன் தன் இறுதிக்காலத்தில் எழுதிய நாவல்கள் டிடெக்டிவ் ஜானகி (Detective Janaki) மற்றும் சூர்யா ராவ்ஸ் ஆர்டியல் (Surya Rao's ordeal). சில நாடகங்களையும் கமலா சத்தியநாதன் எழுதியிருக்கிறார்.

சமூகப்பணிகள்

கமலா சத்தியநாதன் திருநெல்வேலியில் தன் மகனுடன் வாழும்போது ஒரு குழந்தைகள் நல மற்றும் மகப்பேறு மையம் அமையக் காரணமானார். கமலா சத்தியநாதனின் முயற்சியால் அனந்தபூரில் பெண்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் சென்னையில் ஒன்பது கூட்டுறவுச் சங்கங்கள் உருவாயின.

சமூக விடுதலைக்குப் பிறகு இந்தியா விடுதலையடைவதுதான் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து முன்பு கமலாவுக்கு இருந்தது. ஆனால், இங்கிலாந்து சென்று வந்த பிறகு அவரது அந்தக் கருத்து மாறியது. தேசத்திற்கு விடுதலை விரைவில் கிடைப்பது அவசியம் என்று கருதினார். அது குறித்து தனது இதழில் எழுதியும் வந்தார்.

மறைவு

கமலா சத்தியநாதன் ஜனவரி 26, 1950 அன்று காலமானார்.

ஆவணம்

Family Album

The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், அன்னா சத்தியநாதன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, யுனிஸ் டிசௌஸா 'The Satthianadhan Family Album' என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிட்டுள்ளார். அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் 'Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ' The Portrait of an Indain Woman' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன் கமலா சத்தியநாதனின் பணிகளை நினைவு கூந்துள்ளார். கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்கு, தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவியிருந்தார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன் தான். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பண்பாட்டு இடம்

கமலா சத்தியநாதன் தமிழ்ச்சூழலில் வெளிவந்த முதல் பெண்கள் இதழை நடத்தியவர். சமூகவாழ்க்கைச்சூழல்களை பதிவுசெய்யும் கட்டுரைகளையும் நாவலையும் எழுதியவர். முன்னோடியான கல்வியாளர்.

Kamala Articles form the book 'The Satthianadhan Family Album'

நூல்கள்

  • Stories of Indian christian life' (சாமுவேல் சத்தியநாதனுடன் இணைந்து ) 1898
  • My Impressions of England. 1925
  • Padma Novel
  • Detective Janaki
  • Surya Rao's ordeal
  • Tales of India and of Animals
  • Stories of Ancient India
  • Great Men and Women of India
  • The Son of Man

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

[[]]

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Sep-2022, 12:30:43 IST