under review

ஏ.வி. மணிகண்டன்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
 
(11 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=மணிகண்டன்|DisambPageTitle=[[மணிகண்டன் (பெயர் பட்டியல்)]]}}
[[File:ஏ.வி. மணிகண்டன்.png|thumb|ஏ.வி. மணிகண்டன்|266x266px]]
[[File:ஏ.வி. மணிகண்டன்.png|thumb|ஏ.வி. மணிகண்டன்|266x266px]]
[[File:ஏ.வி. மணிகண்டன்1.jpg|thumb|ஏ.வி. மணிகண்டன்|265x265px]]
[[File:ஏ.வி. மணிகண்டன்1.jpg|thumb|ஏ.வி. மணிகண்டன்|265x265px]]
ஏ.வி. மணிகண்டன் (பிறப்பு: நவம்பர் 9, 1981) புகைப்படக் கலைஞர், நவீனக்கலை, இலக்கிய விமர்சகர். புகைப்படக்கலை சார்ந்த புத்தகங்கள், நவீனக்கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஏ.வி. மணிகண்டன் (பிறப்பு: நவம்பர் 9, 1981) புகைப்படக் கலைஞர், நவீனக்கலை, இலக்கிய விமர்சகர். புகைப்படக்கலை சார்ந்த புத்தகங்கள், நவீனக்கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஏ.வி. மணிகண்டன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நவம்பர் 9, 1981-இல் வெங்கடேசன், மீனாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி. அரசு மேல்நிலைப்பள்ளி புதூரில் பள்ளிப்படிப்பு பயின்றார். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் ஓவிய நுண்கலை பட்டப்படிப்பு (BFA) பயின்றார் 1997-2002.
ஏ.வி. மணிகண்டன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நவம்பர் 9, 1981-ல் வெங்கடேசன், மீனாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி. அரசு மேல்நிலைப்பள்ளி புதூரில் பள்ளிப்படிப்பு பயின்றார். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் ஓவிய நுண்கலை பட்டப்படிப்பு (BFA) பயின்றார் 1997-2002.

==தனிவாழ்க்கை ==
==தனிவாழ்க்கை ==
ஏ.வி. மணிகண்டன் 2009-இல் கிருஷ்ணப்ரபாவை திருமணம் செய்து கொண்டார். மகள் யதிகா. 2015  வரை அனிமேஷன் துறையில் பணியாற்றினார். பின் ஐந்து வருடங்கள் முழுநேர புகைப்படக்கலைஞராக இருந்தார். திரைப்படத்துறையில் கணினி வரைகலை நிபுணராக 2020 முதல் பணியில் உள்ளார். பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
ஏ.வி. மணிகண்டன் 2009-ல் கிருஷ்ணப்ரபாவை திருமணம் செய்து கொண்டார். மகள் யதிகா. 2015  வரை அனிமேஷன் துறையில் பணியாற்றினார். பின் ஐந்து வருடங்கள் முழுநேர புகைப்படக்கலைஞராக இருந்தார். திரைப்படத்துறையில் கணினி வரைகலை நிபுணராக 2020 முதல் பணியில் உள்ளார். பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
ஏ.வி. மணிகண்டனின் புகைப்படக்கலை சார்ந்த முதல் படைப்பு ’Another Spring’ 2015-இல் வெளியானது. இவரின் நவீனக் கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் ஜெயமோகன் தளம், அகழ் மின்னிதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. [[வெண்முரசு]] நாவல் தொகுதியின் பதினான்கு நாவல்களுக்கு அத்தியாயத்திற்கு ஓர் ஓவியமென ஷண்முகவேலுடன் இணைந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களில் பங்காற்றினார். ஏ.வி. மணிகண்டன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து அதற்கு வரைய வேண்டிய தருணத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்க அதை ஷண்முகவேல் ஓவியமாக தீட்டினார்.
ஏ.வி. மணிகண்டனின் புகைப்படக்கலை சார்ந்த முதல் படைப்பு ’Another Spring’ 2015-ல் வெளியானது. இவரின் நவீனக் கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் ஜெயமோகன் தளம், அகழ் மின்னிதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. [[வெண்முரசு]] நாவல் தொகுதியின் பதினான்கு நாவல்களுக்கு அத்தியாயத்திற்கு ஓர் ஓவியமென ஷண்முகவேலுடன் இணைந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களில் பங்காற்றினார். ஏ.வி. மணிகண்டன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து அதற்கு வரைய வேண்டிய தருணத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்க அதை ஷண்முகவேல் ஓவியமாக தீட்டினார்.

ஏ.வி. மணிகண்டன் தன் புகைப்பட ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ரகுபீர் சிங் (Raghubir Singh), தயானிதா சிங் (Dayanita Singh), ராபர்ட் ஃப்ராங் (Robert Frank), அலெக் சோத் (Alec Soth), நெபுயோஷி அராக்கி (Nobuyoshi Araki) ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கலை நோக்கில் செல்வாக்கு செலுத்திய ஆசிரியர்களாக [[ஜெயமோகன்]], நிக்காஸ் கஸாந்த்ஸாகீஸ், மார்சல் ப்ரௌஸ்ட், ஐசக் பாஷவிஸ் சிங்கர், [[அரவிந்தர்]], அவீக் சென், தார்க்கோவ்ஸ்கி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

Line 26: Line 27:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.manikandanav.com/about/ ஏ.வி. மணிகண்டன்: வலைதளம்]
* [https://www.manikandanav.com/about/ ஏ.வி. மணிகண்டன்: வலைதளம்]
* [https://akazhonline.com/?p=9204 புகைப்படம், முடிவின்மையை நிகழ்கணத்தில் காணும் கலை: ஏ.வி.மணிகண்டன் நேர்காணல் - விஷால் ராஜா: அகழ் மின்னிதழ்]
* [https://akazhonline.com/?p=9174 ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (1) - ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை, சபரிநாதன்]
* [https://akazhonline.com/?p=9190 ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (2) - பாலசுப்ரமணியன் பொன்ராஜ், வயலட், சியாம்]
* [https://akazhonline.com/?p=9260 ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (3) - விஷால் ராஜா, பிரசாத் முருகேசன், ஜனார்த்தனன் இளங்கோ]
* [https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/ ஏ.வி. மணிகண்டன்: ஜெயமோகன் தளம்]
* [https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/ ஏ.வி. மணிகண்டன்: ஜெயமோகன் தளம்]
* [https://www.jeyamohan.in/106284/ அருகமர்தல்: ஏ.வி. மணிகண்டன்: ஜெயமோகன் தளம்]
* [https://www.jeyamohan.in/106284/ அருகமர்தல்: ஏ.வி. மணிகண்டன்: ஜெயமோகன் தளம்]
Line 34: Line 39:
* [https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_10.html ஆரண்யகம் - ஏ. வி. மணிகண்டன்: ஜெ 60]
* [https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_10.html ஆரண்யகம் - ஏ. வி. மணிகண்டன்: ஜெ 60]
* [https://akazhonline.com/?tag=%e0%ae%8f-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d ஏ.வி.மணிகண்டன்: கலை சார்ந்த கட்டுரைகள்: அகழ் மின்னிதழ்]
* [https://akazhonline.com/?tag=%e0%ae%8f-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d ஏ.வி.மணிகண்டன்: கலை சார்ந்த கட்டுரைகள்: அகழ் மின்னிதழ்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Oct-2023, 13:42:21 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 14:07, 30 December 2024

மணிகண்டன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மணிகண்டன் (பெயர் பட்டியல்)
ஏ.வி. மணிகண்டன்
ஏ.வி. மணிகண்டன்

ஏ.வி. மணிகண்டன் (பிறப்பு: நவம்பர் 9, 1981) புகைப்படக் கலைஞர், நவீனக்கலை, இலக்கிய விமர்சகர். புகைப்படக்கலை சார்ந்த புத்தகங்கள், நவீனக்கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ஏ.வி. மணிகண்டன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நவம்பர் 9, 1981-ல் வெங்கடேசன், மீனாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி. அரசு மேல்நிலைப்பள்ளி புதூரில் பள்ளிப்படிப்பு பயின்றார். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் ஓவிய நுண்கலை பட்டப்படிப்பு (BFA) பயின்றார் 1997-2002.

தனிவாழ்க்கை

ஏ.வி. மணிகண்டன் 2009-ல் கிருஷ்ணப்ரபாவை திருமணம் செய்து கொண்டார். மகள் யதிகா. 2015 வரை அனிமேஷன் துறையில் பணியாற்றினார். பின் ஐந்து வருடங்கள் முழுநேர புகைப்படக்கலைஞராக இருந்தார். திரைப்படத்துறையில் கணினி வரைகலை நிபுணராக 2020 முதல் பணியில் உள்ளார். பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கலை வாழ்க்கை

ஏ.வி. மணிகண்டனின் புகைப்படக்கலை சார்ந்த முதல் படைப்பு ’Another Spring’ 2015-ல் வெளியானது. இவரின் நவீனக் கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் ஜெயமோகன் தளம், அகழ் மின்னிதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. வெண்முரசு நாவல் தொகுதியின் பதினான்கு நாவல்களுக்கு அத்தியாயத்திற்கு ஓர் ஓவியமென ஷண்முகவேலுடன் இணைந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களில் பங்காற்றினார். ஏ.வி. மணிகண்டன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து அதற்கு வரைய வேண்டிய தருணத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்க அதை ஷண்முகவேல் ஓவியமாக தீட்டினார்.

ஏ.வி. மணிகண்டன் தன் புகைப்பட ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ரகுபீர் சிங் (Raghubir Singh), தயானிதா சிங் (Dayanita Singh), ராபர்ட் ஃப்ராங் (Robert Frank), அலெக் சோத் (Alec Soth), நெபுயோஷி அராக்கி (Nobuyoshi Araki) ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கலை நோக்கில் செல்வாக்கு செலுத்திய ஆசிரியர்களாக ஜெயமோகன், நிக்காஸ் கஸாந்த்ஸாகீஸ், மார்சல் ப்ரௌஸ்ட், ஐசக் பாஷவிஸ் சிங்கர், அரவிந்தர், அவீக் சென், தார்க்கோவ்ஸ்கி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

புகைப்படக்கலை தொடர்பானவை
  • Another Spring (2015)
  • Let it go (2015)
  • Young men and the Sea (2017)
  • There is no Mt.Fuji in Bengaluru Dear Hokusai (2018)
  • Ahir Bhairav (2020)
  • One Hundred days (2020)
  • Going Home (2021)
  • Kaveri (2022)

இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 13:42:21 IST