கா.சுப்ரமணிய பிள்ளை: Difference between revisions
m (Created/reviewed by Je) |
(Corrected Category:உரையாசிரியர்கள் to Category:உரையாசிரியர்Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்Corrected Category:பேராசிரியர்கள் to Category:பேராசிரியர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்) |
||
(24 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சுப்பிரமணிய பிள்ளை|DisambPageTitle=[[சுப்பிரமணிய பிள்ளை (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=K. Subramania Pillai|Title of target article=K. Subramania Pillai}} | |||
[[File:Kasupillai.jpg|thumb|கா.சு.பிள்ளை]] | [[File:Kasupillai.jpg|thumb|கா.சு.பிள்ளை]] | ||
கா. சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (5 | கா. சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (நவம்பர் 5, 1888 - ஏப்ரல் 30, 1945) தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர். சைவசித்தாந்த வல்லுநர், வழக்கறிஞர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர், சொற்பொழிவாளர்.தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு | கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு நவம்பர் 5, 1888-ல் பிறந்தார். திருநெல்வேலி திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. 1906-ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். 1908-ல் சென்னை மாகாணக் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow of Arts) தேர்வில் வென்றார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். ''பவர்முர்கெட்'' என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1910-ல் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் படித்து பி.ஏ பட்டம்பெற்றார். 1913-ல் ஆங்கில இலக்கியத்திலும் 1914-ல் தமிழில் இலக்கியத்திலும் தேறிஎம்.ஏ பட்டங்களைப் பெற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டத்தையும் 1917-ல் எம்.எல் பட்டத்தையும் பெற்றார். | ||
[[File:Ka-su-pillai-saivaperumakkal FrontImage 638.jpg|thumb|கா.சு.பிள்ளை]] | [[File:Ka-su-pillai-saivaperumakkal FrontImage 638.jpg|thumb|கா.சு.பிள்ளை]] | ||
== வாழ்க்கை == | == வாழ்க்கை == | ||
====== சென்னையில் ====== | ====== சென்னையில் ====== | ||
நீதிபதி சேஷகிரி ஐயருடைய உதவியால், அவருக்கு | நீதிபதி சேஷகிரி ஐயருடைய உதவியால், அவருக்கு 1919-ல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். கா. சு. பிள்ளை 1920-ல் குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology) என்னும் தலைப்பில் 12 சொற்பொழிகள் ஆற்றி கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தினர் உருவாக்கியிருந்த 'தாகூர் சட்ட விரிவுரைப் பரிசு’ பெற்றார். 1922-ல் சென்னை மாகாண அரசு அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இடம் பெற்றார். பிறமொழி கலவாத தனித் தமிழ்நூல்களை வெளியிடுவதற்கென்று உருவாக்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1926-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 1932 வரை வகித்தார். தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான சர். பி. டி. தியாகராயச் செட்டியாரின் உதவியால் சட்டப்பேராசிரியராக உயர்ந்தார். 1927-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927-ல் சட்டப் பேராசிரியர் பதவியைத் துறந்தார். | ||
====== நெல்லையில் ====== | ====== நெல்லையில் ====== | ||
பேராசிரியப் பதவியைத் துறந்த கா. சு. பிள்ளை தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். 1927 | பேராசிரியப் பதவியைத் துறந்த கா. சு. பிள்ளை தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். 1927 முதல் 1929 வரை அங்கேயே தங்கியிருந்து சைவக்குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார். 1930-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகியதும் கா. சு. பிள்ளை மீண்டும் நெல்லைக்குத் திரும்பினார். அங்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு திருநெல்வேலி நகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார். நெல்லை நகரில் அமைந்திருக்கும் காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலின் அறங்காவலராகவும் பணியாற்றினார். அப்பொழுது, தமிழ் வழிபாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தேவார, சைவ ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார் | ||
1934-ம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு முதன்முறையாக நெல்லையில் கூடியது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக கா. சு. பிள்ளை பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து எடுத்துரைத்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவின்படி, பாளையங்கோட்டையில் 1934-ம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கா. சு. பிள்ளை 1938 வரை அப்பதவியை வகித்தார். | |||
====== காஞ்சியில் ====== | ====== காஞ்சியில் ====== | ||
கா.சு. பிள்ளை | கா.சு. பிள்ளை 1938 முதல் 1940 வரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். அப்பொழுது தன் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவார் என்பவருடன் தங்கியிருந்து தமிழிசையை ஆய்வு செய்தார். | ||
====== சிதம்பரத்தில் ====== | ====== சிதம்பரத்தில் ====== | ||
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக 1929 | சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக 1929-1930-ம் கல்வியாண்டில் பணியாற்றினார். பத்தாண்டுகள் கழித்து 1940-1941-ம் கல்வியாண்டிலிருந்து 1943-1944-ம் கல்வியாண்டு வரை நான்காண்டுகள் அப்பல்கலைக் கழகத்தில் மீண்டும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஜூலை 1, 1944 அன்று ஓய்வுபெற்றார். | ||
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது முறையாக தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது வாதநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தன்னுடைய ஆய்வுரைகளையும் நூல்களையும் உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். 1944-ல் சிதம்பரத்தில் இருந்து நெல்லைக்குத் திரும்பினார் | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கா.சு.பிள்ளை 1927 -1930 ல் நெல்லையில் வாழ்ந்தபோது எழுதிய நூல் | கா.சு.பிள்ளை 1927-1930-ல் நெல்லையில் வாழ்ந்தபோது எழுதிய நூல் 'தமிழ் இலக்கிய வரலாறு’ இரண்டு பகுதிகளாக அமைந்த இந்நூல் தமிழர், தமிழிலக்கியம் இரண்டையும் வரையறை செய்ய முயன்ற முதல்நூல். திருவாசகம், திருக்குறள், திருமுருகாற்றுப் படை, சிவஞான போதம் ஆகிய நூல்க்களுக்கு உரை எழுதினார். அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் வரலாறுகளை எழுதினார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* பல்கலைப் புலவர் என்னும் பட்டம் 1940-ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்சங்கக் கூட்டத்தில் கா. சு. பிள்ளைக்கு வழங்கப்பட்டது. | |||
* பல்கலைப் புலவர் என்னும் பட்டம் | * நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் செட்டி நாட்டின் இளவரசருமான மு. அ. முத்தையா செட்டியார் 1940-ம் ஆண்டில் கா. சு. பிள்ளையின் பணிகளைப் பாராட்டி செப்புப் பட்டயம் ஒன்றினை வழங்கினார். | ||
* நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் செட்டி நாட்டின் இளவரசருமான மு. அ. முத்தையா செட்டியார் | ====== நாட்டுடைமை ====== | ||
கா.சு. பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கப்பட்டன. | |||
== வாழ்க்கைவரலாறுகள், நினைவகங்கள் == | == வாழ்க்கைவரலாறுகள், நினைவகங்கள் == | ||
* ''கா. சு. பிள்ளை வரலாறு'' - இ.மு.சுப்ரமணியபிள்ளை. 1958 (திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) | * ''கா. சு. பிள்ளை வரலாறு'' - இ.மு.சுப்ரமணியபிள்ளை. 1958 (திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) | ||
* திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் கைலாசபுரம் | * திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் கைலாசபுரம் நகர்மன்றப் பூங்காவில் கா. சு. பிள்ளையின் நினைவாக அக்டோபர் 13, 1947 அன்று நடுகல் ஒன்று நாட்டப்பட்டது. | ||
* கா. சு நினைவு இலக்கியக் குழு என்னும் அமைப்பு குளித்தலையில் நிறுவப்பட்டது. திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான மீ. சு. இளமுருகு பொற்செல்வி இக்குழுவை நிறுவினார். இக்குழுவின் சார்பில் குளித்தலையில் கா. சு. பிள்ளை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. | * கா. சு நினைவு இலக்கியக் குழு என்னும் அமைப்பு குளித்தலையில் நிறுவப்பட்டது. திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான மீ. சு. இளமுருகு பொற்செல்வி இக்குழுவை நிறுவினார். இக்குழுவின் சார்பில் குளித்தலையில் கா. சு. பிள்ளை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
கா. சு. பிள்ளை, தம்முடைய | கா. சு. பிள்ளை, தம்முடைய 56-வது வயதில் ஏப்ரல் 30, 1945 அன்று மரணமடைந்தார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
தமிழிலக்கிய ஆய்வாளர்களில் தொடக்ககாலத்து ஆய்வுகளைச் செய்தவர் என்னும் வகையில் கா.சு.பிள்ளை குறிப்பிடத்தக்கவர். ஆனால் மனோன்மணியம் [[பெ.சுந்தரம் பிள்ளை]], [[கே.என். சிவராஜ பிள்ளை]] போல ஆய்வுமுறைமையை கடைப்பிடித்தவர் அல்ல, அவர்களுக்கு முன்னரே அவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் நூல்களின் மொழித்தரவுகளை ஒட்டியே எழுதப்பட்டன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அவருடைய சைவச்சார்பு ஆய்வுகளை எல்லைக்குட்படுத்திவிட்டது. திருக்குறளை சைவநோக்கில் அவர் உரையெழுதியது ஓர் உதாரணம். | தமிழிலக்கிய ஆய்வாளர்களில் தொடக்ககாலத்து ஆய்வுகளைச் செய்தவர் என்னும் வகையில் கா.சு.பிள்ளை குறிப்பிடத்தக்கவர். ஆனால் மனோன்மணியம் [[பெ.சுந்தரம் பிள்ளை]], [[கே.என். சிவராஜ பிள்ளை]] போல ஆய்வுமுறைமையை கடைப்பிடித்தவர் அல்ல, அவர்களுக்கு முன்னரே அவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் நூல்களின் மொழித்தரவுகளை ஒட்டியே எழுதப்பட்டன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அவருடைய சைவச்சார்பு ஆய்வுகளை எல்லைக்குட்படுத்திவிட்டது. திருக்குறளை சைவநோக்கில் அவர் உரையெழுதியது ஓர் உதாரணம். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
Line 64: | Line 54: | ||
|02 | |02 | ||
|1923 | |1923 | ||
| | |1927 ஜூலை | ||
| | | | ||
|இந்து சமயங்களின் சுருக்க வரலாறு | |இந்து சமயங்களின் சுருக்க வரலாறு | ||
Line 97: | Line 87: | ||
|1925 | |1925 | ||
| | | | ||
|1939 | |1939 ஜூலை | ||
|அறிவு விளக்க வாசகம் | |அறிவு விளக்க வாசகம் | ||
|5+66 | |5+66 | ||
Line 111: | Line 101: | ||
|- | |- | ||
|08 | |08 | ||
|1925 | |1925 டிச | ||
|1958 அக் | |1958 அக் | ||
| | | | ||
Line 121: | Line 111: | ||
|1926 | |1926 | ||
| | | | ||
|1947 | |1947 ஜன | ||
|அப்பர் சுவாமிகள் சரித்திரம் | |அப்பர் சுவாமிகள் சரித்திரம் | ||
|164 | |164 | ||
Line 128: | Line 118: | ||
|10 | |10 | ||
|1927 | |1927 | ||
|1953 | |1953 ஜூன் | ||
| | | | ||
|ஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் | |ஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் | ||
Line 168: | Line 158: | ||
|15 | |15 | ||
|1928 | |1928 | ||
|1958 | |1958 ஜன | ||
| | | | ||
|இலக்கிய வரலாறு, தொகுதி 1 | |இலக்கிய வரலாறு, தொகுதி 1 | ||
Line 176: | Line 166: | ||
|16 | |16 | ||
|1928 | |1928 | ||
|1958 | |1958 ஜன | ||
| | | | ||
|இலக்கிய வரலாறு, தொகுதி 2 | |இலக்கிய வரலாறு, தொகுதி 2 | ||
Line 184: | Line 174: | ||
|17 | |17 | ||
|1929 | |1929 | ||
|1955 | |1955 ஜன | ||
| | | | ||
|திருக்குறள் பொழிப்புரை | |திருக்குறள் பொழிப்புரை | ||
Line 207: | Line 197: | ||
|- | |- | ||
|20 | |20 | ||
|1930 | |1930 ஜூன் | ||
|1955 மார்ச் | |1955 மார்ச் | ||
| | | | ||
Line 223: | Line 213: | ||
|- | |- | ||
|23 | |23 | ||
|1932 | |1932 ஜன | ||
|1947 | |1947 | ||
| | | | ||
Line 256: | Line 246: | ||
|27 | |27 | ||
|1938 | |1938 | ||
|1952 | |1952 டிச | ||
| | | | ||
|இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 1 | |இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 1 | ||
Line 311: | Line 301: | ||
|- | |- | ||
|34 | |34 | ||
|1949 | |1949 டிச | ||
| | | | ||
| | | | ||
Line 572: | Line 562: | ||
|திருவுந்தியார் திருக்களிற்றுப்படியா | |திருவுந்தியார் திருக்களிற்றுப்படியா | ||
|} | |} | ||
== உசாத்துணை == | |||
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=632 முன்னோடி - கா.சு.பிள்ளை - Thendral Tamil Magazine | tamilonline.com] | |||
* [https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2016/nov/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-2592655.html தினமணி கா.சு.பிள்ளை- நாறும்பூ நாதன்] | |||
[[Category:உரையாசிரியர்]] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:31:53 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:தமிழறிஞர்]] | |||
[[Category:புலவர்]] | |||
[[Category:மொழிபெயர்ப்பாளர்]] | |||
[[Category:பேராசிரியர்]] |
Latest revision as of 12:10, 17 November 2024
- சுப்பிரமணிய பிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணிய பிள்ளை (பெயர் பட்டியல்)
To read the article in English: K. Subramania Pillai.
கா. சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (நவம்பர் 5, 1888 - ஏப்ரல் 30, 1945) தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர். சைவசித்தாந்த வல்லுநர், வழக்கறிஞர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர், சொற்பொழிவாளர்.தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர்.
பிறப்பு, கல்வி
கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு நவம்பர் 5, 1888-ல் பிறந்தார். திருநெல்வேலி திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. 1906-ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். 1908-ல் சென்னை மாகாணக் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow of Arts) தேர்வில் வென்றார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1910-ல் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் படித்து பி.ஏ பட்டம்பெற்றார். 1913-ல் ஆங்கில இலக்கியத்திலும் 1914-ல் தமிழில் இலக்கியத்திலும் தேறிஎம்.ஏ பட்டங்களைப் பெற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டத்தையும் 1917-ல் எம்.எல் பட்டத்தையும் பெற்றார்.
வாழ்க்கை
சென்னையில்
நீதிபதி சேஷகிரி ஐயருடைய உதவியால், அவருக்கு 1919-ல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். கா. சு. பிள்ளை 1920-ல் குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology) என்னும் தலைப்பில் 12 சொற்பொழிகள் ஆற்றி கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தினர் உருவாக்கியிருந்த 'தாகூர் சட்ட விரிவுரைப் பரிசு’ பெற்றார். 1922-ல் சென்னை மாகாண அரசு அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இடம் பெற்றார். பிறமொழி கலவாத தனித் தமிழ்நூல்களை வெளியிடுவதற்கென்று உருவாக்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1926-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 1932 வரை வகித்தார். தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான சர். பி. டி. தியாகராயச் செட்டியாரின் உதவியால் சட்டப்பேராசிரியராக உயர்ந்தார். 1927-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927-ல் சட்டப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.
நெல்லையில்
பேராசிரியப் பதவியைத் துறந்த கா. சு. பிள்ளை தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். 1927 முதல் 1929 வரை அங்கேயே தங்கியிருந்து சைவக்குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார். 1930-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகியதும் கா. சு. பிள்ளை மீண்டும் நெல்லைக்குத் திரும்பினார். அங்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு திருநெல்வேலி நகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார். நெல்லை நகரில் அமைந்திருக்கும் காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலின் அறங்காவலராகவும் பணியாற்றினார். அப்பொழுது, தமிழ் வழிபாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தேவார, சைவ ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்
1934-ம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு முதன்முறையாக நெல்லையில் கூடியது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக கா. சு. பிள்ளை பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து எடுத்துரைத்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவின்படி, பாளையங்கோட்டையில் 1934-ம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கா. சு. பிள்ளை 1938 வரை அப்பதவியை வகித்தார்.
காஞ்சியில்
கா.சு. பிள்ளை 1938 முதல் 1940 வரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். அப்பொழுது தன் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவார் என்பவருடன் தங்கியிருந்து தமிழிசையை ஆய்வு செய்தார்.
சிதம்பரத்தில்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக 1929-1930-ம் கல்வியாண்டில் பணியாற்றினார். பத்தாண்டுகள் கழித்து 1940-1941-ம் கல்வியாண்டிலிருந்து 1943-1944-ம் கல்வியாண்டு வரை நான்காண்டுகள் அப்பல்கலைக் கழகத்தில் மீண்டும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஜூலை 1, 1944 அன்று ஓய்வுபெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது முறையாக தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது வாதநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தன்னுடைய ஆய்வுரைகளையும் நூல்களையும் உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். 1944-ல் சிதம்பரத்தில் இருந்து நெல்லைக்குத் திரும்பினார்
இலக்கிய வாழ்க்கை
கா.சு.பிள்ளை 1927-1930-ல் நெல்லையில் வாழ்ந்தபோது எழுதிய நூல் 'தமிழ் இலக்கிய வரலாறு’ இரண்டு பகுதிகளாக அமைந்த இந்நூல் தமிழர், தமிழிலக்கியம் இரண்டையும் வரையறை செய்ய முயன்ற முதல்நூல். திருவாசகம், திருக்குறள், திருமுருகாற்றுப் படை, சிவஞான போதம் ஆகிய நூல்க்களுக்கு உரை எழுதினார். அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் வரலாறுகளை எழுதினார்.
விருதுகள்
- பல்கலைப் புலவர் என்னும் பட்டம் 1940-ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்சங்கக் கூட்டத்தில் கா. சு. பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
- நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் செட்டி நாட்டின் இளவரசருமான மு. அ. முத்தையா செட்டியார் 1940-ம் ஆண்டில் கா. சு. பிள்ளையின் பணிகளைப் பாராட்டி செப்புப் பட்டயம் ஒன்றினை வழங்கினார்.
நாட்டுடைமை
கா.சு. பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
வாழ்க்கைவரலாறுகள், நினைவகங்கள்
- கா. சு. பிள்ளை வரலாறு - இ.மு.சுப்ரமணியபிள்ளை. 1958 (திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்)
- திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் கைலாசபுரம் நகர்மன்றப் பூங்காவில் கா. சு. பிள்ளையின் நினைவாக அக்டோபர் 13, 1947 அன்று நடுகல் ஒன்று நாட்டப்பட்டது.
- கா. சு நினைவு இலக்கியக் குழு என்னும் அமைப்பு குளித்தலையில் நிறுவப்பட்டது. திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான மீ. சு. இளமுருகு பொற்செல்வி இக்குழுவை நிறுவினார். இக்குழுவின் சார்பில் குளித்தலையில் கா. சு. பிள்ளை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
மறைவு
கா. சு. பிள்ளை, தம்முடைய 56-வது வயதில் ஏப்ரல் 30, 1945 அன்று மரணமடைந்தார்.
இலக்கிய இடம்
தமிழிலக்கிய ஆய்வாளர்களில் தொடக்ககாலத்து ஆய்வுகளைச் செய்தவர் என்னும் வகையில் கா.சு.பிள்ளை குறிப்பிடத்தக்கவர். ஆனால் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை போல ஆய்வுமுறைமையை கடைப்பிடித்தவர் அல்ல, அவர்களுக்கு முன்னரே அவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் நூல்களின் மொழித்தரவுகளை ஒட்டியே எழுதப்பட்டன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அவருடைய சைவச்சார்பு ஆய்வுகளை எல்லைக்குட்படுத்திவிட்டது. திருக்குறளை சைவநோக்கில் அவர் உரையெழுதியது ஓர் உதாரணம்.
நூல்கள்
வ. எண் | முதற் பதிப்பு | இரண்டாம் பதிப்பு | மூன்றாம் பதிப்பு | நூல் | பக்கம் | வெளியீட்டகம் |
01 | 1920 | Principles of Criminology | ||||
02 | 1923 | 1927 ஜூலை | இந்து சமயங்களின் சுருக்க வரலாறு | 42 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
03 | 1923 ஆக | சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் | 16 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
04 | 1924 | 1927 மே | சைவசித்தாந்த உண்மை வரலாறு | 40 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
05 | 1924 ஏப் | சம்பந்தர் தேவாரம் இயற்கைப் பொருளழகு | 2+42 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
06 | 1925 | 1939 ஜூலை | அறிவு விளக்க வாசகம் | 5+66 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
07 | 1925 ஆக | பண்டார சாத்திரம் பதினான்கு | சதாசிவ முதலியார், சீர்காழி | |||
08 | 1925 டிச | 1958 அக் | சைவ சித்தாந்த சந்தானாசாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் சைவசித்தாந்த விளக்கமும் | 4+90 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
09 | 1926 | 1947 ஜன | அப்பர் சுவாமிகள் சரித்திரம் | 164 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
10 | 1927 | 1953 ஜூன் | ஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் | 10+205 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
11 | 1927 | சந்தனாசாரியர் சரித்திரம் (சைவசித்தாந்த உரைக்கொத்து என்னும் நூலில் ஒரு பகுதி) | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |||
12 | 1928 | 1947 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரம் | 8+208 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
13 | 1928 | 1954 செப் | சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் | 154 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
14 | 1928 | 1947 மார்ச் | மணிவாசகப் பெருமான் வரலாறு | 8+124 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
15 | 1928 | 1958 ஜன | இலக்கிய வரலாறு, தொகுதி 1 | 20+269 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
16 | 1928 | 1958 ஜன | இலக்கிய வரலாறு, தொகுதி 2 | 20+516 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
17 | 1929 | 1955 ஜன | திருக்குறள் பொழிப்புரை | 10+370 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
18 | 1929 மார்ச் | முருகன் பெருமை | 36 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
19 | 1929 மே | Metaphysics of the Saiva Siddhanta System | 4+38 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
20 | 1930 ஜூன் | 1955 மார்ச் | தாயுமான சுவாமிகள் | 4+207 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
22 | 1930 | 1958 பிப் | பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் | 8+112 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
23 | 1932 ஜன | 1947 | குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் | 4+6+134 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
24 | 1932 அக் | 1949 நவ | மெய்கண்டாரும் சிவஞான போதமும் | 18+177 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
25 | 1933 | சுத்தாத்துவிதம் | தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை பொன்விழா மலர் | |||
26 | 1934 | ஆண்டாள் வரலாறும் நூலாராய்ச்சியும் | ||||
27 | 1938 | 1952 டிச | இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 1 | 4+74 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
28 | 1938 | 1949 நவ | இந்திய வரலாற்றுக் கதைகள் – புத்தகம் 2 | 4+92 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
29 | 1939 | பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து | ||||
30 | 1938 | வானநூல் | ||||
31 | 1939 மே | 1941 மே | உலகப் பெருமக்கள், தொகுதி 1 | 136 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | |
32 | 1940 அக் | உலகப் பெருமக்கள், தொகுதி 2 | 6+141 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
33 | 1940 அக் | 1948 மே | 1963 ஏப் | சர். பி.சி.ராய் | 6+122 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை |
34 | 1949 டிச | சிவஞானபோதம் பொழிப்புரை | 6+81 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
35 | 1953 | தமிழர் சமயம் | 14+134 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
36 | 1955 நவ | சிவஞான சுவாமிகள் வரலாறு | 8+150 | தி.தெ.சை.நூ.கழகம், சென்னை | ||
37 | திருவாசகம் பொழிப்புரை | |||||
38 | திருமுருகாற்றுப்படை குறிப்புரை | |||||
39 | குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா குறிப்புரை | |||||
40 | பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 1 | |||||
41 | பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 2 | |||||
42 | நால்வர் வரலாறு (மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சித்தியார், உமாபதி சிவாச்சாரியார்) | |||||
43 | இறையனார் அகப்பொருள் | |||||
44 | தமிழ் நூற்கொள்கையும் தமிழ் மொழியமைப்பும் | |||||
45 | திருச்சோலையார் துறை விளக்கம் | |||||
46 | திருநான் மறை விளக்கம் | |||||
47 | சைவச் சடங்கு விளக்கம் | |||||
48 | மெய்கண்ட நூல்களின் உரைநடை | |||||
49 | தியானமும் வாழ்க்கை உயர்வும் | |||||
50 | கடவுளும் வாழ்க்கை நலமும் | |||||
51 | உலக நன்மையே ஒருவன் வாழ்வு | |||||
52 | மக்கள் வாழ்க்கை தத்துவம் | |||||
53 | வாழ்க்கை இன்பம் | |||||
54 | உடல் நூல் | |||||
55 | சிவப்பிரகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு | |||||
56 | நீதிநெறி விளக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு | |||||
57 | A Short Sketch of the Hindu Religion | |||||
58 | A Note on Hindu Religion Endowment Bill | |||||
59 | Tamil Blooms | |||||
60 | Nature of Thevaram and ancient Tamil Scripture | |||||
61 | பொருட் சட்டம் | |||||
62 | பதிவு விதி | |||||
63 | குற்றச் சட்டம் | |||||
64 | இந்திய தண்டனைத் தொகுதி – முதற்பாகம் | |||||
65 | Lectures on the Indian Penal Code | |||||
66 | திருவுந்தியார் திருக்களிற்றுப்படியா |
உசாத்துணை
- முன்னோடி - கா.சு.பிள்ளை - Thendral Tamil Magazine | tamilonline.com
- தினமணி கா.சு.பிள்ளை- நாறும்பூ நாதன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:53 IST