under review

ஐராவதம் மகாதேவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(One intermediate revision by the same user not shown)
Line 3: Line 3:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தஞ்சை மராட்டிய அரசரின் அவை வித்வானாக இருந்த  வரகூர் ஆனை(ஐராவதம்) பாகவதர்  வழி வந்த குடும்பத்தில் பிறந்தார் ஐராவதம் மகாதேவன். தந்தை ஐராவதம் பர்மாவில் 10 வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார்.  மகாதேவன் அக்டோபர் 2, 1930 அன்று திருச்சிக்கருகில் உள்ள மணச்சநல்லூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்தார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  புலமை பெற்றார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.   

மகாதேவன்  நாணய சேகரிப்பில் ஆர்வம் கொண்டு  பொழுதுபோக்காக செய்துவந்தார்.   

1954-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுத் தேர்ந்தார்.  பிரதமர் நேருவால் நேரடியாக இந்திய அயலகத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் ஆவலில் பிரதமரிடம் வேண்டி, இந்திய ஆட்சிப் பணிக்கு மாறினார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
மகாதேவன் கோவை மாவட்டத்தில் துணை ஆட்சியாளராகப் (Sub-collector) பொறுப்பேற்றார். மத்திய அரசின்  வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் துணைச் செயலராக 1958 முதல் 1961 வரை டெல்லியில் பணியாற்றினார். 1961-ல் தமிழக அரசின் தொழில் துறையில் கைத்தறி மற்றும் ஆடைத் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றார். உணவு மற்றும் விநியோகத்துறையின் இணைச் செயலராகப் பணியாற்றினார்.  அவர் கைத்தறித்துறை இயக்குனராகப் பணிபுரிந்தபோது மாவட்டத்துக்கு ஒரு நூற்பாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1980-ல்  கல்வெட்டாய்வுக்காக இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின்  ஆசிரியராகப் பணியேற்றார்.

மகாதேவனின் மனைவி கௌரி. மகன்கள் வித்யாசாகர்,  ஶ்ரீதர். வித்யாசாகர்  தனது 29-ஆம் வயதில் ஓர் விபத்தில் இறந்தார்.
 
மகாதேவனின் மனைவி கௌரி. மகன்கள் வித்யாசாகர்,  ஶ்ரீதர். வித்யாசாகர்  தனது 29-ம் வயதில் ஓர் விபத்தில் இறந்தார்.
== வரலாற்றாய்வு ==
== வரலாற்றாய்வு ==
மகாதேவன் வர்த்தகத் துறையில் பணிபுரிந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த  கல்வெட்டாய்வாளரும் கலை வரலாற்றாசிரியருமான [[சி. சிவராமமூர்த்தி]]யின் நட்பால் கல்வெட்டாய்வில் ஆர்வம் கொண்டார்.  'Indus Seals'என்னும் சிந்து சமவெளி இலச்சினைகளைப் பற்றியும் அறிந்து கொண்டார். நாணயங்களில் இருந்த பல்வேறு வகை  எழுத்துகள் அவரை மொழி ஆய்வை நோக்கிச் செலுத்தின.  

Line 16: Line 19:
[[File:Pugalurk.jpg|thumb|புகளூர் கல்வெட்டு                                                                    தமிழகத் தொல்லியல் துறை                                                  ]]

தமிழகத்தின் மலைக்குகைகளின் பிராமி மொழிக்  கல்வெட்டு எழுத்துக்கள் அசோகன் பிராமியிலிருந்து வேறுபட்டிருந்ததால் அவற்றைப் படித்தறிய முடியவில்லை. மகாதேவன் புல்லர்(Buhler) என்ற ஜெர்மானிய  இந்தியவியல் ஆய்வாளரின் குறிப்புகளைக்கொண்டு  அசோகன் பிராமி எழுத்துகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும்  உயிரெழுத்துக்களை எழுதும் விதத்தில் உள்ள வேறுபாடுகளை எடுத்துக் காட்டினார். 1960-களில், மதுரையில் இருந்த  கல்வெட்டில் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மற்றும்  [[புகளூர்க் கல்வெட்டுகள்|புகளூர்க் கல்வெட்டில்]] சேர மன்னர்களின் பெயர்களைப் படித்துக்காட்டினார்.  புகளூர் கல்வெட்டில் சேரன் இளங்கடுங்கோ தான் இளவரசனாக பொறுப்பேற்ற பிறகு  இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவியான செங்காயன் என்பவருக்கு பாழி (படுக்கை) அமைத்துத் தந்ததைப் பற்றிய குறிப்பு இருந்தது. புகளூர், மாங்குளம் கல்வெட்டுகள் சங்க காலம் தொடர்பாக கண்டெடுக்கப்பட்ட முதல் கல்வெட்டுகள்.   

கேரள இடக்கல் குகையில்  அவர் கண்டடைந்த பொ.யு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த  பிராமி கல்வெட்டு மலையாளத்தின் தொன்மையைக் குறிக்கும் தொல்லியல் சான்றாகக் கருதப்படுகிறது.  

சங்க காலத்தைக் குறித்த  இலக்கியச் சான்றுகள் இருந்தபோதும் தொல்லியல், வரலாற்றுச்  சான்றுகள் இல்லாமையால் சங்ககாலம் என்பது கற்பனையாக இருக்கலாம் என்ற கருத்து நிலவி வந்தது. மகாதேவன் சங்ககாலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டுகளை வாசிப்புக்கு உட்படுத்தி, சங்ககால மன்னர்களின் பெயர்களை அவற்றில் கண்டடைந்து தொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவினார்   

அதைதொடர்ந்து 1969-ல் கோலாலம்பூரில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க  அழைக்கப்பட்டு, அவரது கண்டுபிடிப்புகள் அங்கு விவாதிக்கப்பட்டன.  1970-ல் தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ்பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவி, அவற்றிற்கு 'தமிழி' என்று பெயரிட்டார். தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண மாற்றங்களையும் அவை வட்டெழுத்துகளாக மாறிய வரையிலுமான வரலாற்றையும் கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.  

தமிழகக் குகைக்கல்வெட்டுகள் சமணச்சார்புடையவை என்பதற்கு அகச்சான்றுகளாக அக்கல்வெட்டுகளில் காணப்படும் சில முக்கியமான சொற்களைத் தொகுத்தளித்தார்<ref>[http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=490 தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம்-ஐராவதம் மகாதேவன், வரலாறு.காம்] </ref>.  

மகாதேவனின் 'Early Tamil Epigraphy, (Harward University press and CreA, 2003') நூலில் தொண்ணூற்றாறு தொல் தமிழ்க் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடக்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (59), பிந்தையகாலத் தமிழ்க் கல்வெட்டுகள்(28) என இரண்டு பாகங்களாக அமைந்து,  பின்னிணைப்பாக 9 கல்வெட்டுகள் இடம்பெற்றன.  ‘வட்டெழுத்து’ என்ற எழுத்து வடிவில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டுகள்  கூறும் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.   

புதுவைக்கருகிலுள்ள ஆலகிராமத்திலுள்ள விநாயகர் அவர் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் உள்ள கல்வெட்டு ஆவணத்தை (4-5 நூற்றாண்டு)  வாசித்து ஒப்பு நோக்கி  தமிழ் நிலத்தின் முதல் விநாயகர் என்பதை உறுதிப்படுத்தினார்.

===== சிந்து சமவெளி எழுத்துரு வடிவ ஆய்வு =====

[[File:Jallikkattu.jpg|thumb|ஏறு தழுவுதல்-சிந்து சமவெளி இலச்சினை]]

மகாதேவன் 1970-ல்  வரலாற்றாய்வுக்கான ஜவஹர்லால் நேரு அறக்கட்டளையின்  ஆய்வுநல்கையைப்(fellowship) பெற்றார்.  ஆட்சிப்பணியில் இருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொண்டு சிந்து சமவெளிக் கல்வெட்டுகளை ஆராய்ந்தார். மிகுந்த முயற்சிக்குப்பின் சிந்து எழுத்துக்களின் புகைப்பட அட்டவணையை உருவாக்கினார். பொள்ளாச்சி. நா. மகாலிங்கம், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.குழந்தைசாமி ஆகியோரின் உதவியால் கணிப்பொறியில் துளையட்டைகள் (punched card)  மூலமாக தரவுகளை உள்ளேற்றி, முடிவுகளைப் பெற்று ஆராய்ந்தார். மும்பை டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்(Tata Institute of Fundamental Research) தன் கண்டுபிடிப்புகளைப் பற்றி உரையாற்றினார். TIFR -ன் கணிப்பொறிகளை பயன்படுத்த அனுமதி கிடைத்தது.  

சிந்து எழுத்தை அச்சிடுவதற்கு அச்சுருக்களோ அச்சு வசதிகளோ அப்போது இல்லாததால்  ஆய்வு முடிவுகள் புத்தகமாகத் தயாராகியும் அச்சிடப்படவில்லை. 1976-ல்  டாடா ஆய்வகத்தில் சக்திவாய்ந்த கணிப்பொறிகளின் அறிமுகத்தால் ஃபோடோ டைப்செட்டிங் முறையில் கையால் வரையப்பட்ட படக்குறிகளை எழுத்துருக்களாக அச்சுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  'The Indus Script; Text, Concordance and Tables'  நூலை ஆறு மாத முயற்சிக்குப்பின் அச்சிட்டார்.  இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை இந்நூலை வெளியிட்டது.

சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆரிய நாகரிகம்  கிராமப்புறத்தில் மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடையது. சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகளில்  முத்திரைகளில்  பொறிக்கப்பட்டிருந்த விலங்குகளின் உருவங்களில்  குதிரையின் உருவம் இல்லை.  குதிரைகள் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாயின என்பதால் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என எடுத்துக்காட்டினார் மகாதேவன்.

தனது ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். இந்தியவியலில் உள்ள  இருமொழிக் குடும்பங்கள் இந்தோ – ஆரியன்,  திராவிடம். இந்தோ ஆரியன் வகை எழுத்துகள் சிந்துவெளியில் புழங்கவில்லை. அங்கே புழங்கியது திராவிட மொழியே. ஆகவே, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு’ என்று வாதத்தை அவர் முன்வைத்தார். இதற்கு ஆதாரமாக பலுசிஸ்தான் மற்றும் ஈரானின் சில பகுதிகளில் இன்றும் புழக்கத்தில் இருக்கும்  ப்ராஹூய் (Brahui)  என்னும் திராவிட மொழியைச் சுட்டிக் காட்டினார்.   

சிந்துவெளிக் கல்வெட்டுகளில் கண்டறியப்பட்ட குறியீடுகளைப் படிப்பதற்கு ஒப்பீட்டளவில் நம்பகமானதொரு முறையை உருவாக்கி, அங்கே கிடைப்பவை தமிழ் எழுத்துகளின் முன்னோடியான வடிவங்கள்தான் என உறுதிசெய்தார்.   

சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பிராமியின் தொல்வடிவமான எழுத்துரு ஒன்றில் தமிழ் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அது சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களுடன் பொதுவான கூறுகள் கொண்டுள்ளது என்பதையும் விரிவான ஆய்வுத்தரவுகளுடன் உலகத் தொல்வரலாற்று ஆய்வுக்களத்தில் நிறுவினார். அந்தத் தளத்தில் அவருடைய ஆய்வுநூல் ''Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D'' ஒரு பெரிய செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் 'Hardvard Oriental series' வகைமையில் பதிப்பிக்கப்பட்டது.

சிந்துவெளி நாகரிகம் மற்றும் தென் திராவிடப் பண்பாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் சிந்துவெளி வரி வடிவங்களைப் பழந்தமிழின் ஊடாக வாசிக்கும் மகாதேவனின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ‘சிந்துவெளிப் பொறிப்புகளின் (Texts) தொடக்கச் சொற்றொடர் (Opening Phrases) இடப்பெயர்களை உள்ளடக்கி இருக்கக்கூடும்’ என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்து மிக முக்கியமானது.

1997-ம் ஆண்டு சிந்துவெளி வரிவடிவங்களைத் தொகுத்து The Indus Script: Texts, Concordance and Tables என்ற தனது முக்கியமான படைப்பை உருவாக்கினார். இந்தியத் தொல்லியல் கழகத்தால் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.  

====== ஜல்லிக்கட்டு ======
====== ஜல்லிக்கட்டு ======
Line 38: Line 54:
== இதழியல் ==
== இதழியல் ==
மகாதேவன் 1987-ல் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.  பொறுப்பேற்றதும் முதன்முதலில் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைப்படுத்தினார்.  ஆகஸ்ட் 22, 1987 இதழில் இளைஞர்களும், குழந்தைகளும் படிப்பதற்கு எளிதாக தினமணி சீர்திருத்த எழுத்துக்களுக்கு மாறுவதாக அறிவித்தார். அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி பத்திரிக்கையாளர்களின் சம்பளத்தை உயர்த்தியது, பெண் பணியாளர்களுக்குச் சரிசம வாய்ப்புகள் என பல நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். செய்திகளில் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறிப்பாக ஒற்றெழுத்துகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார்.

பணியிடைநீக்கம், அலுவலர், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்ற தமிழ்ச்சொற்களை அதிகம்  பயன்படுத்தி பிரபலமடையச் செய்தார். வேற்று மொழிப் பெயர்கள் அம்மொழிகளில் எப்படி உச்சரிக்கப்படுகின்றனவோ அப்படியே எழுதப்படவேண்டுமென வலியுறுத்தினார். அவரது தலையங்கங்கள் விரும்பிப் படிக்கப்பட்டன.  

ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பாகக் கொண்டுவந்த தமிழ்மணி இதழில் தமிழின் பொதுவாசகர்களுக்கு நவீன இலக்கியத்தையும், பல நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அறிமுகம் செய்தார்.

தன் மகன் வித்யாசாகர் நினைவாக வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
[[File:Aira.jpg|thumb|தொல்காப்பியர் விருது                                                                          நன்றி: தினமணி]]

ஐராவதம் மகாதேவன் தன் தலைமுறையின் முதன்மைக் கல்வெட்டாய்வாளராக மதிப்பிடப்படுகிறார். அதுவரை சங்க காலம் இருந்ததற்கான  இலக்கியச் சான்றுகள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களை வாசித்தறிந்து  வரலாற்று, தொல்லியல் சான்றுகளைக் கொண்டு  சங்க காலத்தை இந்திய வரலாற்றாய்வுப் புலத்தில் நிறுவினார். சிந்து சமவெளிப் பண்பாட்டிற்கும், திராவிடப் பண்பாட்டுக்குக்கும் உள்ள தொடர்பை தொல்லியல் சான்றுகள் மூலம் நிறுவினார்.  மகாதேவனின் 'Early Tamil Epigraphy, (Harward University press and CreA, 2003') தமிழ் பிராமி எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக விளங்குகிறது. பொ.மு இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்த கல்வி நிலையையும் எடுத்துக்காட்டியது.  

அவரது சிந்து சமவெளி எழுத்துருக்களைப் பற்றிய 'The Indus Script; Text, Concordance and Tables'  சிந்து எழுத்து குறித்த ஆய்வுக்கு முக்கிய மூல நூலாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுத் துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

<nowiki>''</nowiki>ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977-ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை<nowiki>''</nowiki>என்று  பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

அன்றைய முதல்வர் [[மு. கருணாநிதி]] கோவை உலகத்தமிழ் மாநாட்டின் தலைமையுரையில்  “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது” என்று மகாதேவனின்  ஆய்வினை மேற்கோள்காட்டி பாராட்டினார்.

"இந்த தலைமுறையின் முதன்மையான தொல்வரலாற்றியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்தான் எனலாம்" என்று  [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார்.  

ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பான  தமிழ்மணி இதழ்  மூலம் தமிழ் பொதுவாசகர்களில் ஒரு தலைமுறைக்கு  புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தவராக மதிப்பிடப்படுகிறார். தமிழ் இதழ்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முன்னோடியாக இருந்தார்.   

== விருதுகள், பரிசுகள் ==
== விருதுகள், பரிசுகள் ==
Line 77: Line 101:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 07:26, 24 February 2024

நன்றி: தமிழ்ஹிந்து

ஐராவதம் மகாதேவன் (அக்டோபர் 2, 1930 - நவம்பர் 26, 2018) தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், வரலாற்றாய்வாளர், இதழாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தொல்லியல், எழுத்தியல், இதழியல் ஆகிய மூன்று தளங்களில் செயல்பட்டார். அவரது தலைமுறையின் முதன்மைக் கல்வெட்டாய்வாளராகக் கருதப்படுகிறார். தமிழ் பிராமி எழுத்துருவை வாசிக்கும் முறையைக் கண்டறிந்து முதன்முறையாக சங்க காலத்திற்கான தொல்லியல், வரலாற்றுச் சான்றுகளைக் கண்டடைந்தார். நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரத்தை உருவாக்கினார். சிந்து சமவெளிக் கல்வெட்டுகளில் உள்ள தொல்தமிழ் எழுத்துக்களை ஆய்வு செய்து சிந்து சமவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடாக இருப்பதற்கான வாய்ப்பை நிறுவினார். 'தினமணி' பத்திரிகையின் ஆசிரியராக நவீனத் தமிழ் இலக்கியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பத்மஶ்ரீ, குடியரசுத் தலைவர் வழங்கும் மத்திய செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது போன்ற விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை மராட்டிய அரசரின் அவை வித்வானாக இருந்த வரகூர் ஆனை(ஐராவதம்) பாகவதர் வழி வந்த குடும்பத்தில் பிறந்தார் ஐராவதம் மகாதேவன். தந்தை ஐராவதம் பர்மாவில் 10 வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார். மகாதேவன் அக்டோபர் 2, 1930 அன்று திருச்சிக்கருகில் உள்ள மணச்சநல்லூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்தார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

மகாதேவன் நாணய சேகரிப்பில் ஆர்வம் கொண்டு பொழுதுபோக்காக செய்துவந்தார்.

1954-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுத் தேர்ந்தார். பிரதமர் நேருவால் நேரடியாக இந்திய அயலகத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் ஆவலில் பிரதமரிடம் வேண்டி, இந்திய ஆட்சிப் பணிக்கு மாறினார்.

தனி வாழ்க்கை

மகாதேவன் கோவை மாவட்டத்தில் துணை ஆட்சியாளராகப் (Sub-collector) பொறுப்பேற்றார். மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் துணைச் செயலராக 1958 முதல் 1961 வரை டெல்லியில் பணியாற்றினார். 1961-ல் தமிழக அரசின் தொழில் துறையில் கைத்தறி மற்றும் ஆடைத் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றார். உணவு மற்றும் விநியோகத்துறையின் இணைச் செயலராகப் பணியாற்றினார். அவர் கைத்தறித்துறை இயக்குனராகப் பணிபுரிந்தபோது மாவட்டத்துக்கு ஒரு நூற்பாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1980-ல் கல்வெட்டாய்வுக்காக இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகப் பணியேற்றார்.

மகாதேவனின் மனைவி கௌரி. மகன்கள் வித்யாசாகர், ஶ்ரீதர். வித்யாசாகர் தனது 29-ம் வயதில் ஓர் விபத்தில் இறந்தார்.

வரலாற்றாய்வு

மகாதேவன் வர்த்தகத் துறையில் பணிபுரிந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த கல்வெட்டாய்வாளரும் கலை வரலாற்றாசிரியருமான சி. சிவராமமூர்த்தியின் நட்பால் கல்வெட்டாய்வில் ஆர்வம் கொண்டார். 'Indus Seals'என்னும் சிந்து சமவெளி இலச்சினைகளைப் பற்றியும் அறிந்து கொண்டார். நாணயங்களில் இருந்த பல்வேறு வகை எழுத்துகள் அவரை மொழி ஆய்வை நோக்கிச் செலுத்தின.

பூலன்குறிச்சியில் கல்வெட்டாய்வு
தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்களை அடையாளம் காணல்
திருவாதவூர்க் கல்வெட்டு ஆய்வு கொங்கு கல்வெட்டாய்வு

தமிழ்நாட்டு குகைகளில் பிராமி மொழியில் இருப்பதாக எண்ணப்பட்ட கல்வெட்டுகள் உண்மையில் தமிழ் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டவை என்று கே.வி. சுப்ரமணிய ஐயர் கண்டறிந்தார். கே.வி. சுப்ரமணிய ஐயர், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி இருவரும் மகாதேவனுக்கு பிராமி எழுத்துருவில் அறிமுகம் இருந்ததால் தமிழக கல்வெட்டுகளை விரிவாக வாசிக்க அவரை ஊக்கப்படுத்தினர்.

புகளூர் கல்வெட்டு தமிழகத் தொல்லியல் துறை

தமிழகத்தின் மலைக்குகைகளின் பிராமி மொழிக் கல்வெட்டு எழுத்துக்கள் அசோகன் பிராமியிலிருந்து வேறுபட்டிருந்ததால் அவற்றைப் படித்தறிய முடியவில்லை. மகாதேவன் புல்லர்(Buhler) என்ற ஜெர்மானிய இந்தியவியல் ஆய்வாளரின் குறிப்புகளைக்கொண்டு அசோகன் பிராமி எழுத்துகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் உயிரெழுத்துக்களை எழுதும் விதத்தில் உள்ள வேறுபாடுகளை எடுத்துக் காட்டினார். 1960-களில், மதுரையில் இருந்த கல்வெட்டில் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மற்றும் புகளூர்க் கல்வெட்டில் சேர மன்னர்களின் பெயர்களைப் படித்துக்காட்டினார். புகளூர் கல்வெட்டில் சேரன் இளங்கடுங்கோ தான் இளவரசனாக பொறுப்பேற்ற பிறகு இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவியான செங்காயன் என்பவருக்கு பாழி (படுக்கை) அமைத்துத் தந்ததைப் பற்றிய குறிப்பு இருந்தது. புகளூர், மாங்குளம் கல்வெட்டுகள் சங்க காலம் தொடர்பாக கண்டெடுக்கப்பட்ட முதல் கல்வெட்டுகள்.

கேரள இடக்கல் குகையில் அவர் கண்டடைந்த பொ.யு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டு மலையாளத்தின் தொன்மையைக் குறிக்கும் தொல்லியல் சான்றாகக் கருதப்படுகிறது.

சங்க காலத்தைக் குறித்த இலக்கியச் சான்றுகள் இருந்தபோதும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் இல்லாமையால் சங்ககாலம் என்பது கற்பனையாக இருக்கலாம் என்ற கருத்து நிலவி வந்தது. மகாதேவன் சங்ககாலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டுகளை வாசிப்புக்கு உட்படுத்தி, சங்ககால மன்னர்களின் பெயர்களை அவற்றில் கண்டடைந்து தொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவினார்

அதைதொடர்ந்து 1969-ல் கோலாலம்பூரில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டு, அவரது கண்டுபிடிப்புகள் அங்கு விவாதிக்கப்பட்டன. 1970-ல் தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ்பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவி, அவற்றிற்கு 'தமிழி' என்று பெயரிட்டார். தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண மாற்றங்களையும் அவை வட்டெழுத்துகளாக மாறிய வரையிலுமான வரலாற்றையும் கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

தமிழகக் குகைக்கல்வெட்டுகள் சமணச்சார்புடையவை என்பதற்கு அகச்சான்றுகளாக அக்கல்வெட்டுகளில் காணப்படும் சில முக்கியமான சொற்களைத் தொகுத்தளித்தார்[1].

மகாதேவனின் 'Early Tamil Epigraphy, (Harward University press and CreA, 2003') நூலில் தொண்ணூற்றாறு தொல் தமிழ்க் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடக்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (59), பிந்தையகாலத் தமிழ்க் கல்வெட்டுகள்(28) என இரண்டு பாகங்களாக அமைந்து, பின்னிணைப்பாக 9 கல்வெட்டுகள் இடம்பெற்றன. ‘வட்டெழுத்து’ என்ற எழுத்து வடிவில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கூறும் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

புதுவைக்கருகிலுள்ள ஆலகிராமத்திலுள்ள விநாயகர் அவர் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் உள்ள கல்வெட்டு ஆவணத்தை (4-5 நூற்றாண்டு) வாசித்து ஒப்பு நோக்கி தமிழ் நிலத்தின் முதல் விநாயகர் என்பதை உறுதிப்படுத்தினார்.

சிந்து சமவெளி எழுத்துரு வடிவ ஆய்வு
ஏறு தழுவுதல்-சிந்து சமவெளி இலச்சினை

மகாதேவன் 1970-ல் வரலாற்றாய்வுக்கான ஜவஹர்லால் நேரு அறக்கட்டளையின் ஆய்வுநல்கையைப்(fellowship) பெற்றார். ஆட்சிப்பணியில் இருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொண்டு சிந்து சமவெளிக் கல்வெட்டுகளை ஆராய்ந்தார். மிகுந்த முயற்சிக்குப்பின் சிந்து எழுத்துக்களின் புகைப்பட அட்டவணையை உருவாக்கினார். பொள்ளாச்சி. நா. மகாலிங்கம், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.குழந்தைசாமி ஆகியோரின் உதவியால் கணிப்பொறியில் துளையட்டைகள் (punched card) மூலமாக தரவுகளை உள்ளேற்றி, முடிவுகளைப் பெற்று ஆராய்ந்தார். மும்பை டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்(Tata Institute of Fundamental Research) தன் கண்டுபிடிப்புகளைப் பற்றி உரையாற்றினார். TIFR -ன் கணிப்பொறிகளை பயன்படுத்த அனுமதி கிடைத்தது.

சிந்து எழுத்தை அச்சிடுவதற்கு அச்சுருக்களோ அச்சு வசதிகளோ அப்போது இல்லாததால் ஆய்வு முடிவுகள் புத்தகமாகத் தயாராகியும் அச்சிடப்படவில்லை. 1976-ல் டாடா ஆய்வகத்தில் சக்திவாய்ந்த கணிப்பொறிகளின் அறிமுகத்தால் ஃபோடோ டைப்செட்டிங் முறையில் கையால் வரையப்பட்ட படக்குறிகளை எழுத்துருக்களாக அச்சுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'The Indus Script; Text, Concordance and Tables' நூலை ஆறு மாத முயற்சிக்குப்பின் அச்சிட்டார். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை இந்நூலை வெளியிட்டது.

சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆரிய நாகரிகம் கிராமப்புறத்தில் மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடையது. சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகளில் முத்திரைகளில் பொறிக்கப்பட்டிருந்த விலங்குகளின் உருவங்களில் குதிரையின் உருவம் இல்லை. குதிரைகள் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாயின என்பதால் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என எடுத்துக்காட்டினார் மகாதேவன்.

தனது ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். இந்தியவியலில் உள்ள இருமொழிக் குடும்பங்கள் இந்தோ – ஆரியன், திராவிடம். இந்தோ ஆரியன் வகை எழுத்துகள் சிந்துவெளியில் புழங்கவில்லை. அங்கே புழங்கியது திராவிட மொழியே. ஆகவே, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு’ என்று வாதத்தை அவர் முன்வைத்தார். இதற்கு ஆதாரமாக பலுசிஸ்தான் மற்றும் ஈரானின் சில பகுதிகளில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் ப்ராஹூய் (Brahui) என்னும் திராவிட மொழியைச் சுட்டிக் காட்டினார்.

சிந்துவெளிக் கல்வெட்டுகளில் கண்டறியப்பட்ட குறியீடுகளைப் படிப்பதற்கு ஒப்பீட்டளவில் நம்பகமானதொரு முறையை உருவாக்கி, அங்கே கிடைப்பவை தமிழ் எழுத்துகளின் முன்னோடியான வடிவங்கள்தான் என உறுதிசெய்தார்.

சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பிராமியின் தொல்வடிவமான எழுத்துரு ஒன்றில் தமிழ் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அது சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களுடன் பொதுவான கூறுகள் கொண்டுள்ளது என்பதையும் விரிவான ஆய்வுத்தரவுகளுடன் உலகத் தொல்வரலாற்று ஆய்வுக்களத்தில் நிறுவினார். அந்தத் தளத்தில் அவருடைய ஆய்வுநூல் Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D ஒரு பெரிய செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் 'Hardvard Oriental series' வகைமையில் பதிப்பிக்கப்பட்டது.

சிந்துவெளி நாகரிகம் மற்றும் தென் திராவிடப் பண்பாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் சிந்துவெளி வரி வடிவங்களைப் பழந்தமிழின் ஊடாக வாசிக்கும் மகாதேவனின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ‘சிந்துவெளிப் பொறிப்புகளின் (Texts) தொடக்கச் சொற்றொடர் (Opening Phrases) இடப்பெயர்களை உள்ளடக்கி இருக்கக்கூடும்’ என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்து மிக முக்கியமானது.

1997-ம் ஆண்டு சிந்துவெளி வரிவடிவங்களைத் தொகுத்து The Indus Script: Texts, Concordance and Tables என்ற தனது முக்கியமான படைப்பை உருவாக்கினார். இந்தியத் தொல்லியல் கழகத்தால் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.

ஜல்லிக்கட்டு

சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே ஏறு தழுவுதல் என்னும் வழக்கம் இருந்ததை இலச்சினைகளைச் சான்று காட்டி நிறுவினார்.

சிந்து சமவெளி ஆய்வு மையம்

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் 2007-ம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தை மகாதேவன் நிறுவினார். அதன் மதிப்புறு ஆலோசகராகவும் இருந்தார்.

இதழியல்

மகாதேவன் 1987-ல் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதும் முதன்முதலில் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைப்படுத்தினார். ஆகஸ்ட் 22, 1987 இதழில் இளைஞர்களும், குழந்தைகளும் படிப்பதற்கு எளிதாக தினமணி சீர்திருத்த எழுத்துக்களுக்கு மாறுவதாக அறிவித்தார். அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி பத்திரிக்கையாளர்களின் சம்பளத்தை உயர்த்தியது, பெண் பணியாளர்களுக்குச் சரிசம வாய்ப்புகள் என பல நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். செய்திகளில் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறிப்பாக ஒற்றெழுத்துகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார்.

பணியிடைநீக்கம், அலுவலர், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்ற தமிழ்ச்சொற்களை அதிகம் பயன்படுத்தி பிரபலமடையச் செய்தார். வேற்று மொழிப் பெயர்கள் அம்மொழிகளில் எப்படி உச்சரிக்கப்படுகின்றனவோ அப்படியே எழுதப்படவேண்டுமென வலியுறுத்தினார். அவரது தலையங்கங்கள் விரும்பிப் படிக்கப்பட்டன.

ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பாகக் கொண்டுவந்த தமிழ்மணி இதழில் தமிழின் பொதுவாசகர்களுக்கு நவீன இலக்கியத்தையும், பல நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அறிமுகம் செய்தார்.

தன் மகன் வித்யாசாகர் நினைவாக வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

மதிப்பீடு

தொல்காப்பியர் விருது நன்றி: தினமணி

ஐராவதம் மகாதேவன் தன் தலைமுறையின் முதன்மைக் கல்வெட்டாய்வாளராக மதிப்பிடப்படுகிறார். அதுவரை சங்க காலம் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களை வாசித்தறிந்து வரலாற்று, தொல்லியல் சான்றுகளைக் கொண்டு சங்க காலத்தை இந்திய வரலாற்றாய்வுப் புலத்தில் நிறுவினார். சிந்து சமவெளிப் பண்பாட்டிற்கும், திராவிடப் பண்பாட்டுக்குக்கும் உள்ள தொடர்பை தொல்லியல் சான்றுகள் மூலம் நிறுவினார். மகாதேவனின் 'Early Tamil Epigraphy, (Harward University press and CreA, 2003') தமிழ் பிராமி எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக விளங்குகிறது. பொ.மு இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்த கல்வி நிலையையும் எடுத்துக்காட்டியது.

அவரது சிந்து சமவெளி எழுத்துருக்களைப் பற்றிய 'The Indus Script; Text, Concordance and Tables' சிந்து எழுத்து குறித்த ஆய்வுக்கு முக்கிய மூல நூலாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுத் துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

''ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977-ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை''என்று பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

அன்றைய முதல்வர் மு. கருணாநிதி கோவை உலகத்தமிழ் மாநாட்டின் தலைமையுரையில் “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது” என்று மகாதேவனின் ஆய்வினை மேற்கோள்காட்டி பாராட்டினார்.

"இந்த தலைமுறையின் முதன்மையான தொல்வரலாற்றியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்தான் எனலாம்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பான தமிழ்மணி இதழ் மூலம் தமிழ் பொதுவாசகர்களில் ஒரு தலைமுறைக்கு புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தவராக மதிப்பிடப்படுகிறார். தமிழ் இதழ்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முன்னோடியாக இருந்தார்.

விருதுகள், பரிசுகள்

  • ஜவஹர்லால் நேரு நினைவு ஆய்வுநல்கை(Fellowship)(1970)
  • இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992)
  • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் (FETNA) வழங்கிய மாட்சிமைப்பரிசு (2001)
  • இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது (2009)
  • தொல்காப்பியர் விருது -செம்மொழித் தமிழாய்வு மையம் (2013)

மறைவு

ஐராவதம் மகாதேவன் நவம்பர் 26, 2018 அன்று சென்னையில் காலமானார்.

படைப்புகள்

  • The Indus Script: Texts, Concordance and Tables (1977)
  • Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)
  • Corpus of Tamil-Brahmi inscriptions (1966)
  • The Indus Script: Texts, Concordance and Tables (1977)
  • Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003)
  • Early Tamil Epigraphy: Tamil-Brahmi Inscriptions. Revised and Enlarged Second Edition: Volume 1 (en: Central Institute of Classical Tamil) (2014)
  • Akam and Puram: 'Address' Signs of the Indus Script (2010)
  • Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study (2014)
  • Toponyms, Directions and Tribal Names in the Indus Script (Archaeopress) (2017)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page