ந. முத்துமோகன்: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected Category:இலக்கிய ஆய்வாளர்கள் to Category:இலக்கிய ஆய்வாளர்Corrected Category:திறனாய்வாளர்கள் to Category:திறனாய்வாளர்) |
||
(7 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=N. Muthumohan|Title of target article=N. Muthumohan}} | |||
[[File:ந. முத்துமோகன்.png|thumb|ந. முத்துமோகன்|302x302px]] | [[File:ந. முத்துமோகன்.png|thumb|ந. முத்துமோகன்|302x302px]] | ||
ந. முத்துமோகன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1954) மார்க்ஸிய தத்துவ அறிஞர், கல்வியாளர், இலக்கியத் திறனாய்வாளர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வாளர். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை செய்தவர். | ந. முத்துமோகன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1954) மார்க்ஸிய தத்துவ அறிஞர், கல்வியாளர், இலக்கியத் திறனாய்வாளர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வாளர். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை செய்தவர். | ||
Line 14: | Line 15: | ||
ந.முத்துமோகன் தமிழில் மார்க்ஸிய சமூகவியல் நோக்கில் இலக்கிய விமர்சனங்களை எழுதியிருக்கிறார். தன் இலக்கிய ஆதர்சமாக தஸ்தாவஸ்கியைக் கூறுகிறார். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட ந.முத்துமோகன் நாட்டாரியல் அறிஞர் [[ஆ. சிவசுப்பிரமணியன்|ஆ. சிவசுப்பிரமணியனிடமிருந்து]] சமூகவியல் ஆய்வை பயின்றார். மார்க்ஸ் , எங்கல்ஸ், [[ப. ஜீவானந்தம்|ப.ஜீவானந்தம்]] ஆகியோரின் இலக்கியக் கொள்கைகளை விளக்கி எழுதியிருக்கிறார். | ந.முத்துமோகன் தமிழில் மார்க்ஸிய சமூகவியல் நோக்கில் இலக்கிய விமர்சனங்களை எழுதியிருக்கிறார். தன் இலக்கிய ஆதர்சமாக தஸ்தாவஸ்கியைக் கூறுகிறார். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட ந.முத்துமோகன் நாட்டாரியல் அறிஞர் [[ஆ. சிவசுப்பிரமணியன்|ஆ. சிவசுப்பிரமணியனிடமிருந்து]] சமூகவியல் ஆய்வை பயின்றார். மார்க்ஸ் , எங்கல்ஸ், [[ப. ஜீவானந்தம்|ப.ஜீவானந்தம்]] ஆகியோரின் இலக்கியக் கொள்கைகளை விளக்கி எழுதியிருக்கிறார். | ||
====== அரசியல் தத்துவம் ====== | ====== அரசியல் தத்துவம் ====== | ||
ந. முத்துமோகன் மார்க்ஸிய ஆய்வில் [[நா. வானமாமலை]], [[எஸ்.தோத்தாத்ரி]] ஆகியோரின் வழிவந்த ஆய்வாளராக கருதப்படுகிறார். சமூகவியலை ஆய்வின் அடித்தளமாகக் கொள்வது, மார்க்சிய மெய்யியலின் அடிப்படையில் தத்துவங்களை பரிசீலிப்பது ஆகியவை அவருடைய வழிமுறைகள். | ந. முத்துமோகன் மார்க்ஸிய ஆய்வில் [[நா. வானமாமலை (நாட்டாரியல் ஆய்வாளர்)|நா. வானமாமலை]], [[எஸ்.தோத்தாத்ரி]] ஆகியோரின் வழிவந்த ஆய்வாளராக கருதப்படுகிறார். சமூகவியலை ஆய்வின் அடித்தளமாகக் கொள்வது, மார்க்சிய மெய்யியலின் அடிப்படையில் தத்துவங்களை பரிசீலிப்பது ஆகியவை அவருடைய வழிமுறைகள். | ||
ந.முத்துமோகன் எழுதிய முதல் ஆய்வுக்கட்டுரை நா. வானமாமலை நடத்திய [[ஆராய்ச்சி]] என்னும் இதழில் 1980-ல் வெளிவந்தது. ந. முத்துமோகனின் முதல் நூல் 'அமைப்பியல்' காவ்யா பதிப்பகம் வழியாக 1990-ல் வெளியானது. | ந.முத்துமோகன் எழுதிய முதல் ஆய்வுக்கட்டுரை நா. வானமாமலை நடத்திய [[ஆராய்ச்சி]] என்னும் இதழில் 1980-ல் வெளிவந்தது. ந. முத்துமோகனின் முதல் நூல் 'அமைப்பியல்' காவ்யா பதிப்பகம் வழியாக 1990-ல் வெளியானது. | ||
Line 73: | Line 74: | ||
*[https://sarwothaman.blogspot.com/2019/03/blog-post_17.html இந்திய தத்துவங்கள். மதிப்புரை சர்வோத்தமன் சடகோபன்] | *[https://sarwothaman.blogspot.com/2019/03/blog-post_17.html இந்திய தத்துவங்கள். மதிப்புரை சர்வோத்தமன் சடகோபன்] | ||
[[]] | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:39:02 IST}} | |||
[[Category: | [[Category:கல்வியாளர்]] | ||
[[Category:Tamil Content]] | |||
[[Category:இலக்கிய ஆய்வாளர்]] | |||
[[Category:திறனாய்வாளர்]] |
Latest revision as of 13:52, 17 November 2024
To read the article in English: N. Muthumohan.
ந. முத்துமோகன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1954) மார்க்ஸிய தத்துவ அறிஞர், கல்வியாளர், இலக்கியத் திறனாய்வாளர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வாளர். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை செய்தவர்.
பிறப்பு, கல்வி
ந. முத்துமோகன் ஆகஸ்ட் 25, 1954-ல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் சிதம்பரபுரத்தில் நடராஜன் - பவானி இணையருக்கு பிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை களக்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்தபின் மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1976-1982 வரை பயின்று ஒருங்கிணைந்த முதுகலை (வேதியியல்) பட்டம் பெற்றார்.
சோவியத் ருஷ்யாவில் மாஸ்கோ லுமும்பா பல்கலையில் (The Lumumba University) 1982 –1987 வரை இந்திய தத்துவத்தில் ஆய்வு செய்து "புராதான இந்திய தத்துவத்தின் தோற்றம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ந.முத்துமோகன் ஜூலை 5, 1989-ல் பள்ளி ஆசிரியை இந்திராவை மணந்தார். பிள்ளைகள் பாரதி நடராஜன், ராஜகோபால். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கிறார்.
1987 முதல் 2013 வரை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் குருநானக் இருக்கையின் தலைமை பொறுப்பு வகித்தார்.
அறிவியக்க வாழ்க்கை
இலக்கிய ஆய்வு
ந.முத்துமோகன் தமிழில் மார்க்ஸிய சமூகவியல் நோக்கில் இலக்கிய விமர்சனங்களை எழுதியிருக்கிறார். தன் இலக்கிய ஆதர்சமாக தஸ்தாவஸ்கியைக் கூறுகிறார். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட ந.முத்துமோகன் நாட்டாரியல் அறிஞர் ஆ. சிவசுப்பிரமணியனிடமிருந்து சமூகவியல் ஆய்வை பயின்றார். மார்க்ஸ் , எங்கல்ஸ், ப.ஜீவானந்தம் ஆகியோரின் இலக்கியக் கொள்கைகளை விளக்கி எழுதியிருக்கிறார்.
அரசியல் தத்துவம்
ந. முத்துமோகன் மார்க்ஸிய ஆய்வில் நா. வானமாமலை, எஸ்.தோத்தாத்ரி ஆகியோரின் வழிவந்த ஆய்வாளராக கருதப்படுகிறார். சமூகவியலை ஆய்வின் அடித்தளமாகக் கொள்வது, மார்க்சிய மெய்யியலின் அடிப்படையில் தத்துவங்களை பரிசீலிப்பது ஆகியவை அவருடைய வழிமுறைகள்.
ந.முத்துமோகன் எழுதிய முதல் ஆய்வுக்கட்டுரை நா. வானமாமலை நடத்திய ஆராய்ச்சி என்னும் இதழில் 1980-ல் வெளிவந்தது. ந. முத்துமோகனின் முதல் நூல் 'அமைப்பியல்' காவ்யா பதிப்பகம் வழியாக 1990-ல் வெளியானது.
தமிழில் அமைப்பியல் மற்றும் பின்அமைப்பியல் சார்ந்து விவாதங்கள் நிகழ்ந்தபோது மார்க்ஸியத் தரப்பில் நின்று அவற்றில் கலந்துகொண்டார் ந.முத்துமோகன். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் ஆகியவர்களின் கருத்துக்களுடன் மார்க்சியத்தை இணைத்து விரிவாக எழுதினார். ஹெர்பர்ட் மார்க்யுஸின் ஐரோப்பிய நவமார்க்சியக் கொள்கைகளை விளக்கியும் நூல்களை எழுதினார். மார்க்சிய கொள்கைகளை இன்றைய அரசியல், தத்துவச் சூழலுக்கேற்ப விரிவாக எழுதியிருக்கிறார். விளிம்புநிலை மார்க்ஸ் போன்ற நூல்கள் அத்தகையவை.
மத தத்துவம்
ந.முத்துமோகனின் முதன்மையான பங்களிப்பு இந்திய மதங்களின் தத்துவப்பரிணாமத்தையும் அவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகளையும் மார்க்ஸிய சமூகவியல் கோணத்திலும் மார்க்ஸிய முரணியக்கப் பொருள்முதல்வாத அடிப்படையிலும் விரிவாக விளக்கியது. மதங்களில் இருந்து மக்களின் மெய்யியலை பிரித்து அணுகி தமிழர் மெய்யியல் குறித்த வரையறையையும் தன் நூல்களில் உருவாக்கினார். ஐரோப்பிய தத்துவங்களை அறிமுகம் செய்யும் பல குறுநூல்களை நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்காக எழுதினார்.
ந.முத்துமோகன் ஐரோப்பியத் தத்துவங்கள், இந்திய தத்துவங்கள், தமிழகத் தத்துவங்கள் குறித்து எழுதிய 120 கட்டுரைகள் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001-ல் தொகுக்கப்பட்டு ஒரு பெருநூலாய் வெளியிடப்பட்டுள்ளன.
இலக்கிய, தத்துவ இடம்
தமிழ்ச்சூழலில் மார்க்சிய தத்துவ ஆய்வில் முதல்தலைமுறையில் பெரும்பாலும் மொழியாக்கங்களே வெளிவந்தன. ஜமதக்னி, தியாகு, பொன்னீலன் போன்றவர்கள் மொழியாக்கங்கள் வழியாக அடிப்படைகளை அறிமுகம் செய்தனர். இந்திய, தமிழ்ச்சூழலில் மார்க்ஸியக் கோட்பாடுகளை விளக்குவதில் எஸ்.என்.நாகராஜன், ஞானி, எஸ்.தோத்தாத்ரி போன்றவர்கள் முன்னோடியானவர்கள். அடுத்த தலைமுறையின் சோதிப்பிரகாசம் போன்ற தத்துவ ஆய்வாளர்களின் நிரையில் முதன்மையான மார்க்ஸிய தத்துவ ஆய்வாளராக ந.முத்துமோகன் கருதப்படுகிறார்.
ந.முத்துமோகன் மார்க்ஸிய மெய்யியல்-தத்துவத்தை சமகால அரசியல் விவாதங்களுக்கேற்ப விரித்தெடுப்பதிலும், இந்திய மதங்களையும் மெய்யியலையும் மார்க்ஸியக் கோணத்தில் ஆராய்வதிலும் முன்னோடியான பணிகளை ஆற்றியிருக்கிறார். மார்க்ஸியம் என்பது அதிகார நோக்குடைய பெருங்கதையாடல்களில் ஒன்று என்னும் குற்றச்சாட்டு பின்நவீனத்துவச் சூழலில் எழுந்தபோது மார்க்ஸியத்தின் அடிப்படைத் தத்துவத்தை முன்வைத்து மார்க்ஸியம் சாராம்சத்தில் ஒரு போராடும் கருத்தியல் மட்டுமே என நிறுவினார். மார்க்ஸிய மெய்யியலின் விரிவாகும் தன்மையையும், அதற்கு முந்தைய தத்துவங்களுடன் அதற்கிருந்த தொடர்புகளையும், சமகால தத்துவங்களுடன் மார்க்சியம் கொண்ட உரையாடல்களையும் தமிழில் விரிவாக எழுதியவர் ந.முத்துமோகன்.
நூல்கள்
அரசியல்
- படைப்பின் அற்புத தருணங்கள் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஒர் அறிமுகம்) (NCBH-2022)
- மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா-2007)
- மார்க்ஸ்-அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை (விடியல் பதிப்பகம்-2011)
- மார்க்சியம் பயில்வோம் (NCBH-2018)
- தொடரும் மார்க்சிய விவாதங்கள் (கீற்று-2006)
- மார்க்சிய விவாதங்கள் (காவ்யா-2002)
- அயோத்திதாச பண்டிதர் – தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம் (NCBH-2017)
- வர்க்க அரசியலும் அடையாள அரசியலும் (NCBH-2019)
- 1848 (NCBH-2012)
- ஜீவாவின் பண்பாட்டு அரசியல் (NCBH-2012)
- பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
- மார்க்சியம் பயிலுவோம்
- விளிம்புநிலை மார்க்ஸ்
- ஹெர்பர்ட் மார்க்யுஸ்
தத்துவம்
- ஐரோப்பிய தத்துவங்கள் (NCBH-2015)
மதம்
- சமூகவியல் நோக்கில் மதம் (NCBH-2012)
- இயங்கியல் பொருள்முதல்வாதம் – ஒரு அறிமுகம் (NCBH-2012
- வேதாந்தத்தின் கலாச்சார அரசியல் (NCBH-2012)
- இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்
- பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
ஆங்கிலம்
- Essential Postulates of Sikhism (Punjabi University, Patiala, 2003)
- (Editor) South Indian Studies on Sikhism (Guru Nanak University, Amritsar, 2004)
- Post Modernism and Indian Philosophy (Bhavani Publications)
- Essays on Philosophy of Shri Guru Nanak Dev Ji (Indra Gandhi National Centre for the Arts, 2021)
- Writing Sikh Philosophy on Its Own Terms (Guru Nanak University, Amritsar)
- Essays on Sikh Philosophy (Institute of Sikh Studies, Chandigarh, 1997)
பதிப்பித்தவை
- மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் [20 தொகுதிகள்]
- மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசை
இணைப்புகள்
- தமிழகத்தில் சாதி: வரலாறும், புரிதல்களும்: பேரா.ந.முத்துமோகன்: உரை
- ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு தமிழில்: சா.தேவதாஸ் | ந.முத்துமோகன் உரை
உசாத்துணை
- ந.முத்துமோகன் ஆய்வுகள்: கீற்று
- பேராசிரியர் ந.முத்துமோகனின் இடையறாத் தத்துவக் கற்பித்தல் நெறி: கீற்று
- விளிம்புநிலை மார்க்ஸ் என்றொரு புதிய நூல் - 1: கீற்று
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 18
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 44
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 54
- இந்திய தத்துவங்கள். மதிப்புரை சர்வோத்தமன் சடகோபன்
[[]]
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:02 IST