under review

விஜயகுமார் சம்மங்கரை

From Tamil Wiki
விஜயகுமார் சம்மங்கரை

விஜயகுமார் சம்மங்கரை (பிறப்பு: அக்டோபர் 27, 1983) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

விஜயகுமார் சம்மங்கரை கோவையில் அக்டோபர் 27, 1983 அன்று பழனிச்சாமி, பொன்னாத்தாள் இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் கவிதா. கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். குமரகுரு கல்லூரியில் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

விஜயகுமார் சம்மங்கரை 2012-ல் உமாசெல்வியை மணந்தார். மகன் வைபவ் சிவா. மென்பொருள் துறையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

விஜயகுமார் சம்மங்கரையின் முதல் கதை “வராகம்” பதாகை இதழில் 2021-ல் வெளியானது. பதாகை, வல்லினம், சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். விஜயகுமார் சம்மங்கரையின் முதல் நூல் ”மிருகமோட்சம்” யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.

இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், நாஞ்சில் நாடன், லக்ஷ்மி மணிவண்ணன், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கியைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

”அசல் சவாலான ஆன்மத் தேடலில் ஆன்மிகத் தடை அதாவது அலௌகீக தடை பற்றி குறைவாகவே சிந்திக்கிறோம். ஆன்மிக வேட்கையும் அது தரும் அலௌகீக சஞ்சலமும் பிரிக்க இயலாது, இன்றி அமையாதது. இக்கதை இதை பரிசீலிப்பதால் முக்கியமானது.” என விமர்சகர் கிருஷ்ணன் 'மிருகமோட்சம்' சிறுகதை பற்றி மதிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

சிறுகதைத்தொகுப்பு
  • மிருகமோட்சம் (2022)

இணைப்புகள்


✅Finalised Page