under review

ராஜகோபாலன் கடிதங்கள்

From Tamil Wiki
ராஜகோபாலன் கடிதங்கள் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்

ராஜகோபாலன் கடிதங்கள் (1924) வ.வே.சு. ஐயர் எழுதிய சிறுகதை. நண்பனுக்கு எழுதிய கடிதமாக சிறுகதை அமைகிறது.

எழுத்து, வெளியீடு

ராஜகோபாலன் கடிதங்கள் 1924-ல் வ.வே. சுப்ரமணிய ஐயர் எழுதிய சிறுகதை பாலபாரதி இதழில் தொடராக ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வெளியானது.

கதைச்சுருக்கம்

ராஜகோபாலன் கடிதங்கள் சிறுகதை நண்பருக்கு எழுதும் கடிதமாக அமைகிறது. தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தன் நண்பனுக்கு எழுதும் கடிதமாக இக்கதை உள்ளது. புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு பையனைத் தான் சந்தித்ததைப் பற்றியும், அவனின் ஒரு நாள் நிகழ்ச்சிகளை, அவனின் குணங்களைப் பற்றிய கடிதம். ஏழைகள் வீட்டில் இருக்கும் அன்பைத் தன் நண்பனுக்கு எடுத்துச் சொல்வதாக கடிதத்தின் மையம் உள்ளது.

இலக்கிய இடம்

"வ.வே.சு. ஐயர் எழுதிய ராஜகோபாலன் கடிதங்கள் என்பவற்றிலும் அபூர்வமான கதைகள் உண்டு" என புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


✅Finalised Page