under review

மாயேண்டனார்

From Tamil Wiki

மாயேண்டனார் (மாயெண்டனார்) சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மாயேண்டனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

மாயேண்டனார் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் 235-வது பாடலாக உள்ளது. பாலைத் திணையில் அமைந்தது. தலைவியிடம் சொல்லிச் பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பி வரும் வழியில் தலைவியின் இல்லத்தைக் கண்டு அவளிடம் தான் கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றதை நினைவுகூர்ந்து, வாடையிடம் அவளைக் காக்க வேண்டுவதாக பாடல் உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெல்லிக்காயை மரை என்னும் மானினம் உண்ணுகின்ற முற்றத்தை உடைய புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய தலைவியின் ஊர்.
  • உவமை: பாம்பு உரித்த தோல் தொங்குவதைப் போல் விழும் தூய வெண்மையான அருவி.

பாடல் நடை

  • குறுந்தொகை: 235 (திணை: பாலை)

ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:57:44 IST