பூதனார்
பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
பூதனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 29-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனுடன் உடன்போகிய தலைவியாகிய தன் மகளை எண்ணி, அவளது அன்னை உரைப்பதாக பாலை திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வெய்யில் காலத்து கடும் வெப்பத்தால் காந்தள் மலர்கள் வாடி, காட்டுப்பாதை நிழல் இல்லாது அனல் வீசும் வெம்மை உடையதாக காணப்படும்.
- குட்டிகளை ஈன்ற பெண்புலியின் பசியினை போக்குவதற்காக ஆண்புலியானது பொழுது சாயும் மாலை நேரத்தில் புற்கள் காய்ந்துபோன பாதை ஓரத்தில் சிறு விலங்குகளை வேட்டையாட பதுங்கி காத்திருக்கும்.
பாடல் நடை
நற்றிணை - 29
திணை பாலை துறை: காமமிக்க கழிபடர்கிளவி.
நின்ற வேனி லுலந்த காந்தள்
அழலவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி
யாங்குவல் லுநள்கொல் தானே யான்றன்
வனைந்தேந் திளமுலை நோவ கொல்லென
நினைந்துகைந் நெகிழ்ந்த வனைத்தற்குத் தான்றன்
பேரமர் மழைக்க ணீரிய கலுழ
வெய்ய வுயிர்க்குஞ் சாயன்
மையீ ரோதிப் பெருமடத் தகையே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்
- நற்றிணை - 29:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2024, 09:57:38 IST