under review

புடலங்காய் புரொபஸர்

From Tamil Wiki
புடலங்காய் புரொபஸர் - ஜி.எஸ். பாலகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பு

புடலங்காய் புரொபஸர் (2010) ஜி.எஸ். பாலகிருஷ்ணன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இதனை, தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி வெளியிட்டது.

வெளியீடு

புடலங்காய் புரொபஸர், ஜி.எஸ். பாலகிருஷ்ணன் எழுதிய நகைச்சுவைச் சிறுகதைகளின் தொகுப்பு. இதனை 2010-ல், அல்லயன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னையைச் சேர்ந்த தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி வெளியிட்டது.

நூல் அமைப்பு

புடலங்காய் புரொபஸர் சிறுகதைத் தொகுப்பில் 42 சிறுகதைகள் இடம்பெற்றன. அவை,

  • புடலங்காய் புரொபஸர்
  • முதல் வகுப்பு!
  • காகா கீ கீ சாமியார்
  • நிமிஷக் கதைகள்
  • நெனச்சுப் பார்த்தா எல்லாமே லொள்ளு!
  • தாத்தாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
  • காய கல்பம்
  • கணையாழி
  • வெறும் கிளிஞ்சல்
  • காட்டிக் கொடுத்தவள்
  • கறை படாத கை
  • ஒட்டகத்தைக் கட்டிக்கோ!
  • தபாற்காரரின் தபால்
  • கவிதைக் கேஸ்
  • கேள்வித் தாள்
  • பால்பன் விழா
  • இவரைக் கேளுங்கள்!
  • சினிமா காண்டம்
  • கற்பனைப் பெண் டெய்ஸி
  • தேடித் தேடி அலைந்தேன்!
  • கல்லூரி சர்க்கஸ்
  • ஜானகியும் ஜனத்தொகையும்
  • சினிமா எமன்
  • பாலம்
  • ஆவி நீ வா!
  • சுறாமீன்
  • லைட் ஹவுஸ் தரங்கிணி
  • காணாமற் போன மனைவி
  • ஹம்ஸவதம்
  • கதை ரிப்பேர் கடை
  • எல்ஃபேக்டர்
  • மலையாள ஒடியன்
  • காதல் முக்கோணம்
  • கணக்கு + பிரம்பு = கடுப்பு
  • சோளக் கொல்லை பொம்மை
  • நான் நடித்த நாடகங்கள்
  • கல்லூரி இரகசியம்!
  • தேவை ஒரு புனைப்பெயர்
  • தீபாவளி மலர் தயாரிப்பது எப்படி?
  • பாடும் பட்டாசு
  • திரும்பி வந்த கணவன்
  • சதாபிஷேகம்

உள்ளடக்கம்

புடலங்காய் புரொபஸர் தொகுப்பு நூலில் ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் சிறுகதைகளும், சில கட்டுரைகளும் இடம் பெற்றன. ஜி.எஸ். பாலகிருஷ்ணன் பேராசிரியராகப் பணியாற்றியதால் கல்லூரிகள் பற்றியும், மாணவர்கள், பேராசிரியர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் நகைச்சுவையாகச் சில சிறுகதைகளில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ். பாலகிருஷ்ணன், சக பேராசிரியர் ஒருவரைப் பற்றிப் பகடி செய்து எழுதிய கதையே ‘புடலங்காய் புரொபசர்’ என்றும், அது சிக்கலாகிப் பின்னர் சமாதானம் ஆனது என்றும் எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன், ஜி.எஸ். பாலகிருஷ்ணன் பற்றிய அமுதசுரபி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நூலில் இருந்து ஒரு சிறு பகுதி

புடலங்காய் புரொபஸர்

…… முதலிலே குழந்தை சைகாலஜியில் ஆராய்ச்சி நடத்தி ‘போட்டோ மாக்’ சர்வகலாசாலையில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு ஸ்ரீமதி, யாங்கி நகரில் மனோதத்துவப் பேராசிரியையாக வந்து சேர்ந்தாள்! வந்த மறுநாளே பத்திரிகைகளில் எல்லாம் டர்கடர் ஸ்ரீமதியின் படங்கள் கொட்டு மேளத்துடன் வெளிவந்தன. தொடர்ந்து அவர் நடத்தின 'அமெரிக்க அனுபவ லெக்சர்' எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர் நடத்தவிருந்த 'கிலு கிலுப்பை' ஆராய்ச்சியைப் பற்றிய செய்தி வெளி வந்தவுடன் அன்னாரின் கெட்டிக்காரத்தனத்தைப் புகழ வார்த்தையின்றித் தவித்தோம். ரேடியோவிலே தன் 'கிலு கிலுப்பை ஆராய்ச்சியைப் பற்றி அம்மாள் நடத்தின பேச்சின் சாராம்சம் வருமாறு:

அமெரிக்கா போன்ற தேசங்களில் குழந்தைகள் இவ்வளவு நேரம் அழுவதில்லை! சராசரி நான்கு மணி நேரம்தான் அவை ராகம் பாடுகின்றன. ஆனால் இந்தியாவிலோவெனில் ஒவ்வொரு குழந்தையும் சராசரி ஒன்பது மணி நேரம் அழுகிறது. இதற்குக் காரணம் இந்தியக் குழந்தைகளுக்குச் சரியான கிலு கிலுப்பைகள் இல்லாதது தான்! எனவே தான் பஞ்சவர்ணக் கிலு கிலுப்பை ஒன்று தயாரித்து அதைக் குழந்தைகளுக்கு நேராகக் காண்பித்து அதிகப்படியான குழந்தைகள் எந்த நிறத்தை விரும்புகின்றனவோ அந்தக் கலரில் கிலு கிலுப்பைகள் தயாரித்து நாட்டிற்குத் தொண்டாற்றப் போவதாக (குழந்தைகளின் அழுகையை நிறுத்தினால் அது பெரிய தொண்டுதானே?) டாக்டர் ஸ்ரீமதி பிரசங்கித்தார். இன்னும் டாக்டர் ஸ்ரீமதி சேரிக்குழந்தைகளுக்கு முன் கிலுகிலுப்பை ஆராய்ச்சி நடத்தி வருவதாகக் கேள்வி!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-May-2024, 09:17:29 IST