திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை பதினொன்றாம் திருமுறையில் இறுதியாக (41-வது திருமுறை) இடம்பெறும் திருமுறை. திருநாவுக்கரசரைப் போற்றி நம்பியாண்டார் நம்பி இயற்றிய 11 பாடல்களைக் கொண்டது.
ஆசிரியர்
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலையை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்.
நூல் அமைப்பு
ஏகாதசம் என்றால் பதினொன்று. 11 பாடல்களால் திருநாவுக்கரசரின் பெருமைகளையும், வரலாற்றுச் செய்திகளையும் கூறும் பதிகம் திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை.
"பதிகம் ஏழெழுநூறு பகரும் மாகவியோகி" என்று திருநாவிக்கரசரை நம்பியாண்டார் நம்பி சிறப்பிக்கிறார். திருநாவுக்கரசர் வாழ்க்கை குறித்த புராணக் கதைகள், அவரது தேவாரப் பதிகங்களின் சிறப்பு, அவற்றை ஓதுவதால் பெரும் பயன்கள் -இவை இந்த ஏகாதச மாலையின் பேசுபொருள்கள். அப்பூதியடிகளுடன் சந்திப்பு, நாவுக்கரசர் திலகவதியாரால் சிவநெறியை ஏற்றது, சூலை நோய் நீங்கப்பெற்றது, திருவதிகையில் சிவனால் 'நாவுக்கரசர்' என அழைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாடல் நடை
பதிகமே ழெழுநூறு
பகருமா கவியோகி
பரசுநா வரசான
பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி
அருளினால் அமண்மூடர்
அவர்செய்வா தைகள்தீரும்
அனகன்வார் கழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை
உடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம்
வெறியரா குவர்சால
மதியரா குவர்ஈசன்
அடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில்
மனிதரா னவர்தாமே. 7
உசாத்துணை
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை, சைவம்.ஆர்க்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2024, 09:56:42 IST