under review

சித்திரக் குள்ளன்

From Tamil Wiki
சித்திரக்குள்ளன்

சித்திரக்குள்ளன்(1949-1952) ஓவியர் சந்தனு நடத்திய சிறுவர் இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

உள்ளடக்கம்

சந்தனு குமுதத்தில் ஓவியராக இருந்தார். கேலிசித்திர ஓவியர். அவர் நடத்திய சிறுவர் இதழ் இது. மலைவீடு தொடர்கதை, காட்டுச் சிறுவன் கண்ணன், குள்ள மாமாவைக் கேளுங்கள் என்கிற வினாவிடைப் பகுதி, அறிவுப் போட்டிகள் என பல பகுதிகள் இருந்தன. வென்றாலும் தோற்றாலும் பரிசு உண்டு எனச் சிறுவர்களை ஊக்குவித்து எழுதவைத்து பெயரை அச்சாக்கி மாணவர்களை வளர்த்து வந்தன அன்றைய சிறுவர் இதழ்கள். எழுதிப் பரிசு பெறாதவர்கள் அனைவருக்கும் குத்துச் சண்டை குப்பசாமி சிறுகதை நூல் ஒன்று (விலை 4 அணா) இனாமாக அனுப்பப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.

சித்திரக்குள்ளன் இதழில்தான் தமிழின் முதல் படக்கதை வெளியானது என்று கூறப்படுகிறது. இதில் வெளியான காட்டுச்சிறுவன் கண்ணன், வேதாள உலகத்தில் விச்சு ஆகியவை முதல் படக்கதைகள் என கருதப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page