under review

குமார்மூர்த்தி

From Tamil Wiki
குமார்மூர்த்தி சிறுகதைத் தொகுப்பு (நன்றி: நூலகம்)

குமார்மூர்த்தி (1956 - ஜூலை 27, 2001) இலங்கை எழுத்தாளர், இதழியலாளர். சிறுகதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

குமார்மூர்த்தி இலங்கையில் 1956-ல் பிறந்தார். போர்ச்சூழல் காரணமாக கனடாவில் புலம் பெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

குமார்மூர்த்தி 'முகம் தேடும் மனிதன்' என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டார். 'தேடல்' இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

இலக்கிய இடம்

குமார்மூர்த்தியை “கனடாவின் புலம்பெயர் சூழலில் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக இருந்தார்.” என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

மறைவு

குமார்மூர்த்தி ஜூலை 27, 2001-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

சிறுகதைத்தொகுப்பு
  • முகம் தேடும் மனிதன்

உசாத்துணை

  • சொல்புதிது இலக்கிய சிற்றிதழ்: இதழ் 7: 2001

இணைப்புகள்


✅Finalised Page