கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது
From Tamil Wiki
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ்க் கணிமைக்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது
தமிழ்க் கணினி இயல் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருவோருக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. 2006-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவு கூரும் வகையில் ’சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது’ என இவ்விருது அழைக்கப்படுகிறது.
தமிழ்க் கணிமை விருது பெற்றோர்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2006 | கே. ஸ்ரீநிவாசன் |
2007 | கு. கல்யாணசுந்தரம் |
2008 | சுரதா யாழ்வாணன் |
2009 | தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு |
2010 | முத்து நெடுமாறன் |
2011 | வாசு அரங்கநாதன் |
2012 | முகுந்தராஜ் சுப்பிரமணியன் |
2013 | மணி மணிவண்ணன் |
2014 | முத்தையா அண்ணாமலை |
2015 | சே. ராஜாராமன் (எ) நீச்சல்காரன் |
2016 | த. சீனிவாசன் |
2017 | சசிகரன் பத்மநாதன் |
2018 | ராமசாமி துரைபாண்டி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Feb-2023, 17:49:37 IST