கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனார்
கச்சிபேட்டுக் காஞ்சிக்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கச்சிபேட்டுக் காஞ்சிக்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். காஞ்சி நகரத்திற்கு பக்கத்தில் அமைந்த கச்சிபேடு என்னும் பேரூரில் வாழ்ந்தவர். பழந்தமிழகத்தில் பேடு, பேட்டை என்ற ஊர் பெயர்கள் சந்தை நடக்கும் இடங்களை குறித்தன.
இலக்கிய வாழ்க்கை
கச்சிபேட்டுக் காஞ்சிக்கொற்றனார் பாடிய இரு பாடல்கள் குறுந்தொகையில் 213, 216-வது பாடல்களாக அமைந்துள்ளன. பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் நிலையை எடுத்து காட்டும் இரு பாடல்களும் பாலைத் திணையில் அமைந்தவை.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆண் கிளைமான் தன் பசியை போக்கி கொள்ள மண்ணை உதைத்து எம்பி மரத்தின் பருமனான பெரிய மட்டையை வளைக்கும்.
- அப்பட்டையினை முதலில் தன் குட்டிக்கு கொடுத்து உண்ணத்தரும். குட்டி உண்டது போக மீதமுள்ளதை தான் உண்ணும். தனது குட்டிக்கு நிழல் கிடைக்குமாறு அதன் மேல் கவிந்து நின்று பாலை நிலத்து வெப்பத்தில் இருந்து குட்டியினைக் காக்கும்.
- தலைவர் பொருளீட்ட சென்ற வழி வாடாத வள்ளிக்கொடிகளால் நிரம்பிய காடாகும்.
பாடல் நடை
குறுந்தொகை - 213
திணை: பாலை துறை : "நம்பெருமான்,நம்பொருட்டு இடைநின்று மீள்வர்"எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - 2: புலவர் க,கோவிந்தன்
- தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- குறுந்தொகை - 213:nallakurunthokai
- குறுந்தொகை - 216:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:38:22 IST