under review

ஹிரோஷி ஆபே

From Tamil Wiki

ஹிரோஷி ஆபே (Hiroshi Abe) (1922) ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரணரயில்பாதையில் பணியாற்றினார். முறையாக போர்க்கைதிகளை நடத்தாமல் சாவுக்கு காரணமாக அமைந்தமையால் போர்க்குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

பார்க்க சயாம் மரண ரயில்பாதை

சயாம் மரணரயில்

ஜப்பானிய ராணுவத்தின் ஐந்தாவது ரயில் பாதை அமைப்பு ரெஜிமெண்டின் தலைவராக சோன்குராய் (Songkurai ) என்னுமிடத்தில் இருந்த ரயில்பாதை பணிகளையும் முகாம்களையும் ஹிரோஷி ஆபே மேற்பார்வை பார்த்தார். சோன்குராய் முகாமில் காலரா பரவி பலர் உயிரிழக்க நேரிட்டபோது பணிகளை நிறுத்திவைத்து போர்க்கைதிகளை இடமாற்றம் செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் டாக்டர்கள் சொன்னதை ஆபே செவிகொள்ளவில்லை. ஏறத்தாழ பன்னிரண்டாயிரம்பேர் அந்த முகாமில் மரணமடைந்தனர்.

போர்க்குற்ற விசாரணை

ஹிரோஷி ஆபேக்கு 1947-ல் மரணதண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது 15 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.

1957-ல் ஆபே விடுதலையானார். விசாரணையின்போது ஆபே தன் குற்றம் கடுமையானது, தான் ஒரு போர்க்குற்றவாளி என ஒப்புக்கொண்டார்

போர்விசாரணை

1995-ல் கொரிய மக்கள் சார்பில் ஜப்பானிடம் போர்க்குற்றத்தின்பொருட்டு நஷ்ட ஈடு கோரி விடுக்கப்பட்ட வழக்கில் ஜப்பானிய அரசுக்கு எதிராக ஆபே சாட்சி சொன்னார். அவ்வாறு ஜப்பானிய அரசுக்கு எதிராக சாட்சி சொன்ன முதல் ஜப்பானிய தளபதி என அவர் கருதப்படுகிறார்.

உசாத்துணை

  • http://www.ne.jp/asahi/nadja/bc/frameL1e.html
  • Death Row at Changi Prison. Oral History by Abe Hiroshi. Published in Japan At War - An Oral History. Haruko Taya Cook and Theodore F. Cook. New York Press, 1992. ISBN 1-56584-039-9
  • Statement by Hiroshi Abe, as quoted by Tony Lloyd in the British House of Commons. Transcript


✅Finalised Page