under review

வெருவருநிலை,

From Tamil Wiki

வெருவருநிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரில் வீழ்ந்த வீரர்களின் அச்சமூட்டும் நிலையைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவரைத் தடுக்கும் போரில் அகன்ற மார்பில் அம்புகள் தைக்க இறந்து, அவ்வம்புகளாலே தாங்கப்பட்டுத் தரையில் படியாமல் குத்திட்டு நின்ற நிலையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப
நிலம் தீண்டா வகை பொலிந்த தெடுந்தகை நிலை உரைத்தன்று (கொளு 7.23)

வெண்பா

வெங்கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப
எங்கும் மருமத்திடைக் குளிப்பர் - செங்கண்
புலவாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
கலவாமல் காத்த கணை (149)

பொருள்: பகைவரின் அம்புகளை உடல் முழுவதும் அவை தைக்க, சிவந்த கண்ணுடன் புலால்நாறும் வாளையும் கொண்டவனான வீரனின் உடலை நிலத்தில் விழாதபடி அம்புகள் தாங்கின.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:55:13 IST