under review

வெரியர் எல்வின்

From Tamil Wiki
வெரியர் எல்வின்
வெரியர் எல்வின் (நன்றி: Telegraph)

வெரியர் எல்வின் (Harry Verrier Holman Elwin) (ஆகஸ்ட் 29, 1902 - பிப்ரவரி 22, 1964) இங்கிலாந்தில் பிறந்த இந்திய மானுடவியலாய்வாளர், இனவியலாய்வாளர், இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைத்தவர். 1954-ல் முதன் முதலில் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹாரி வெரியர் ஹோல்மன் எல்வின் என்பது இயற்பெயர். இங்கிலாந்தில் சியரா லியோனின் பிஷப்பாக இருந்த எட்மண்ட் ஹென்றி எல்வினின் மகனாக ஆகஸ்ட் 29, 1902-ல் டோவரில் பிறந்தார். டீன் க்ளோஸ் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். ஆக்ஸ்போர்ட் மெர்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப்பட்டங்கள் பெற்றார். DSc பட்டமும் பெற்றார். ஆங்கிலம் மற்றும் இறையியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இங்கிலாந்தில் மதகுருவாக நியமிக்கப்பட்டார்.

தனிவாழ்க்கை

வெரியர் எல்வின் ஏப்ரல் 4, 1940-ல் ராஜ் கோண்ட் பழங்குடியைச் சேர்ந்த கோசி என்ற பெண்ணை மணந்தார். கோசி அவர் ரயத்வார் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது அதில் படித்த மாணவி. இவர்களுக்கு ஜவஹர்லால் (குமார்) என்ற மகன் 1941-ல் பிறந்தார். இரண்டாவது மகன் விஜய். எல்வின் 1949-ல் விவாகரத்து பெற்றார். லைலா என்ற பர்தான் இனப்பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். 1950-களில் அவருடன் ஷில்லாங்கில் குடியேறினார். இவர்களுக்கு வசந்த், நகுல், அசோக் ஆகிய மூன்று மகன்கள்.

இந்தியா வருகை

இந்தியாவுக்கு 1927-ல் ஒரு மதகுருப்பணியாளராக வந்த எல்வின் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். புனேவில் சுதேசி கிறிஸ்துவத்தை உருவாக்க முனைந்த 'கிறிஸ்டியன் சேவா சங்' என்ற சிறிய அமைப்பில் இணைந்தார். காந்தியக் கொள்கைகள், ரபீந்திரநாத் தாகூரின் சிந்தனைகள் மீது ஈடுபாடு கொண்டார். மதப்பணிகளை கைவிட்டு காந்தி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். கோண்டு இனமக்கள் வாழும் கரான்ஜியா என்ற மலைகிராமத்தில் சிறிய குடில் அமைத்து சேவை செய்ய ஆரம்பித்தார், பின்பு அதே மாவட்டத்தில் சான்ரவாச்சாபர் பஸ்தர் பழங்குடி மக்கள் வாழும் சித்ரகோட், போன்ற இடங்களில் வாழ்ந்தார். 1935-ல் இந்து மதத்திற்கு மாறினார். இந்தியாவின் ஒரிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலுள்ள பழங்குடி மக்களுக்காக சேவை செய்தார்.

பொறுப்புகள்

  • 1925-ல் ஆக்ஸ்போர்டு இன்டர்-காலேஜியேட் கிறிஸ்டியன் யூனியனின் (OICCU) தலைவராக இருந்தார்.
  • 1926-ல் ஆக்ஸ்போர்டில் உள்ள விக்லிஃப் ஹாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 1927-ல் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் விரிவுரையாளரானார்.
  • 1945 முதல் இந்திய மானுடவியல் ஆய்வின் (Anthropological Survey Of India) இணை இயக்குனராகப் பணியாற்றினார். இவர் துவங்கிய கோண்டு சேவா மண்டலம் இன்றும செயல்பட்டு வருகிறது
  • 1954-ல் இந்தியாவின் மானுடவியல் (குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள்) அறிவுறுத்துனராக நியமிக்கப்பட்டார்.
  • இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் (Indian National Science Academy) உறுப்பினராக இருந்தார்.

பழங்குடிகள்

வெரியர் எல்வின் பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார். ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்றார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்று கருதினார். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே உருவான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு நேரு எல்வினிடம் கேட்டுக்கொண்டார். எல்வின் நேருவுடன் நாகாலாந்திற்குள் சாதுக்கள் நுழைவதைத் தடைசெய்வதற்கான ஒப்பந்தம் செய்தார்.

எல்வினின் கொள்கைகள்
  • பழங்குடி மக்களின் நிலம் அவர்களிடமிருந்து ஒரு போதும் பறிக்கப்படக்கூடாது
  • காட்டில் அவர்களது உரிமை பாதுகாக்கப்படவேண்டும்
  • காட்டிலாகா அதிகாரிகள் பழங்குடிகளைத் தங்களது வேலையாட்கள் போல நடத்தக்கூடாது
  • பழங்குடியினர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்து சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்
  • பணம்படைத்த வணிகர்கள் பழங்குடியினரை ஏமாற்றி வணிகம் செய்வதை அனுமதிக்கக் கூடாது
  • நகரவாசிகள் அவர்களைக் காட்சிப்பொருள் போல கருதும் மனநிலை அகற்றப்பட வேண்டும்

எழுத்து

வெரியர் எல்வின் பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். தனது வாழ்க்கை வரலாற்றை 'The Tribal world of Verrier Elwin' என்னும் தனி நூலாக எழுதினார். இதை Oxford University Press வெளியிட்டது. 'எல்வின் கண்ட பழங்குடி மக்கள்' என்று இந்த நூல் சிட்டியால் தமிழாக்கம் செய்யப்பட்டது. 2003ல் விழுதுகள் பதிப்பகம் இதை வெளியிட்டது. இந்த நூலிற்காக எல்வின் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

”எல்வின் தொகுத்த புத்தகங்களில் உள்ள மரபுக்கதைகள் உலகம் பற்றிய பழங்குடி மக்களின் கற்பனைத்திறனுக்கும் உலகப்பார்வைக்கும் சாட்சியாக இருக்கின்றன, இந்த தொன்மங்களின் வழியே மனிதனின் கதை சொல்லும் ஆற்றல் எவ்வளவு ஆண்டுகாலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது” என எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிட்டார்.

விருது

  • 1961-ல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அளித்தது.
  • 1965-ல் 'The Tribal World of Verrier Elwin' என்ற இவரின் சுயசரிதை நூல் ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

மறைவு

வெரியர் எல்வின் பிப்ரவரி 22, 1964-ல் மாரடைப்பால் காலமானார்.

இவரைப்பற்றிய நூல்கள்

  • Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India (1999) - Ramachandra Guha

நூல்கள் பட்டியல்

  • Christian Dhyana. Society for Promoting Christian Knowledge (1930)
  • The Dawn of Indian Freedom, with Jack Copley Winslow. G. Allen & Unwin (1931)
  • Gandhi: the Dawn of Indian Freedom, with John Copley Winslow. Fleming H. Revell company (1934)
  • Truth about India: can we get it? G. Allen & Unwin (1932)
  • Mahatma Gandhi: sketches in pen, pencil and brush, with Kanu Desai (1932)
  • Songs of the Forest: the folk poetry of the Gonds. with Shamrao Hivale (1935)
  • Leaves from the Jungle: Life in a Gond Village (1936)
  • The Agaria. H. Milford, Oxford University Press (1942)
  • The Aboriginals. H. Milford, Oxford University Press (1944)
  • Folk-songs of the Maikal Hills. with Shamrao Hivale. H. Milford, Oxford University Press (1944)
  • Folk-songs of Chhattisgarh. G. Cumberlege, Oxford University Press (1946)
  • The Muria and their Ghotul. Oxford University Press (1947)
  • Myths of Middle India, Indian Branch, Oxford University Press (1949)
  • Bondo Highlander. Oxford University Press (1950)
  • Maria Murder and Suicide, Oxford University Press (1950)
  • The Tribal Art of Middle India: a personal record. Indian Branch, Oxford University Press (1951)
  • Tribal Myths of Orissa. Indian Branch, Oxford University Press (1954)
  • The Religion of an Indian Tribe. Oxford University Press (1955)
  • Myths of the North-east Frontier of India, Volume 1. North-East Frontier Agency (1958)
  • India's North-east Frontier in the Nineteenth Century. Oxford University Press (1959)
  • The Art of the North-east Frontier of India, Volume 1. Pub. North-East Frontier Agency (1959)
  • The Fisher-Girl and the Crab
  • A Philosophy for NEFA. S. Roy on behalf of the North-East Frontier Agency (NEFA) 1960)
  • A New Deal for Tribal India. Abridgement of the tenth Report of the Commissioner for Scheduled Castes and Scheduled Tribes for the year (1960–61)
  • When the World was Young: folk-tales from India's hills and forests
  • The Tribal World of Verrier Elwin: An Autobiography (1964)
  • Religious and Cultural Aspects of Khadi. Sarvodaya Prachuralaya (1964)
  • Democracy in NEFA (1965)
  • Folk Paintings of India (Inter-national Cultural Centre, 1967)
  • The Kingdom of the Young, Oxford University Press (1968)
  • The Nagas in the Nineteenth Century (1969)
  • A New Book of Tribal Fiction. North-East Frontier Agency (1970)
  • Folk-tales of Mahakoshal (1980)
  • The Baiga. Gian Pub. House (1986)
  • Verrier Elwin, Philanthropologist (Selected Writings, Nari Rustomji)

உசாத்துணை


✅Finalised Page