under review

விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள்

From Tamil Wiki
பக்த சேதா, பர்த்ருஹரி மற்றும் இரு சகோதரர்கள் திரைப்பட விளம்பரம்

விடுதலைக்கு முன்பாகத் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகின. 1918 தொடங்கி, தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் பலவும் பேசாப் படங்கள் என்னும் சலனப் படங்களே. 1918-ல் வெளியான ‘கீசக வதம்’ தான் தமிழின் முதல் சலனத் திரைப்படமாகக் கருதப்படுகிறது. 1931 தொடங்கி பேசாப் படங்களின் எண்ணிக்கை குறைந்து பேசும் படங்கள் அதிகம் வெளியாகத் தொடங்கின.

பக்த துகாராம் திரைப்படம்

சலனப் படங்கள்

தமிழில் வெளியான முதல் சலனப் படம் கீசக வதம் (1918). தமிழில் முதன் முதலில் அம்முயற்சியை மேற்கொண்டவர் ஆர். நடராஜ முதலியார். அதனைத் தொடர்ந்து ‘திரௌபதி வஸ்திராபரணம்’, ‘மஹிராவணன்’, ‘மார்க்கண்டேயன்’ போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

தணிக்கை முயற்சிகள்

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில், தணிக்கை வாரியம் காவல்துறை ஆணையாளர்களால் செயல்படுத்தப்பட்டது. 1918-ம் ஆண்டு ஆரம்பித்த இத்தணிக்கைச் செயல்பாடுகள், சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் (1920) கடுமையாக்கப்பட்டன. அதனால் சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துக்களையோ, காந்திய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரித்த காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, புராணக் கதைகளையும், நாடகம் மற்றும் மாயாஜாலம் சார்ந்த சாகசக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் அதிகம் தயாரிக்க முன் வந்தனர்.

விஷ்ணுலீலா திரைப்பட விளம்பரம்

பேசும் படங்கள்

தமிழின் முதன்முதலில் வெளிவந்த பேசும் படமாக 1931-ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ திரைப்படம் கருதப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்பாக, அதே ஆண்டில், ‘குறத்திப் பாட்டும், டான்ஸூம்’ என்னும் குறும்படம் வெளியானது. நான்கு ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படமாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘ராமாயணம்’, ‘காலவா’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘கிருஷ்ண லீலா’ போன்ற படங்கள் வெளியாகின. அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான ‘வள்ளி திருமணம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘பிரகலாதா’, ‘நந்தனார்’, ‘கோவலன்’ போன்றவையும் திரைப்படங்களாக வெளிவந்தன.

தடைகளும் விலக்குகளும்

தொடக்க காலத்தில், புராண, வரலாற்றுப் படங்களே அதிகம் வெளிவந்தன. பின்னரே சமூகம் சார்ந்த, மக்களின் பிரச்சனைகளைப் பேசும் மேனகா, ராஜாம்பாள், டம்பாச்சாரி போன்ற நாவல்களாக, நாடகங்களாக வெளிவந்து வெற்றிபெற்ற துப்பறியும் கதைகள் சில திரைப்படங்களாக வெளிவரத் தொடங்கின.

சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தியாகபூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுப்பற்றைப் போற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் அரசு விலகியதால், ஆங்கிலேய அரசு தியாகபூமி போன்ற திரைப்படங்களுக்கு தடை விதித்தது. தணிக்கை முறையைக் கடுமையாக்கியது. போர்க்காலத்தில் கச்சா ஃபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தது. விடுதலைக்குப் பின்னர் அதிகத் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின.

விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

நாடு விடுதலை அடைந்த ஆகஸ்ட் 1947-க்கு முன்பாகச் சுமார் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றின் பட்டியல் இது.

எண் ஆண்டு திரைப்படம்
1 1931 காளிதாஸ்
2 1932 காலவா
சம்பூர்ண ஹரிச்சந்திரா
பாரிஜாத புஷ்பஹாரம்
ராமாயணம்
3 1933 சத்தியவான் சாவித்திரி
நந்தனர்
பிரகலாதா
வள்ளி
வள்ளி திருமணம்
ஸ்ரீ கிருஷ்ணலீலா
4 1934 கோவலன்
சக்குபாய்
சதி சுலோச்சனா
சீதா கல்யாணம்
சீதா வனவாசம்
தசாவதாரம்
திரௌபதி வஸ்திராபகரணம்
பவளக்கொடி
பாமாவிஜயம்
லவகுசா
ஸ்ரீ கிருஷ்ணமுராரி
ஸ்ரீனிவாச கல்யாணம்
5 1935 அதிரூப அமராவதி
அல்லி அர்ஜுனா
குலேபகாவலி
கோபாலகிருஷ்ணா
கௌசல்யா
சந்திரசேனா
சாரங்கதரா
சுபத்ரா பரிணயம்
மேனகா
டம்பாச்சாரி
ராஜாம்பாள்
பட்டினத்தார்
6 1936 அலிபாதுஷா
இந்திர சபா
இரு சகோதரர்கள்
உஷா கல்யாணம்
கருட கர்வபங்கம்
கிருஷ்ண நாரதி
கிருஷ்ண அர்ஜுனா
சத்யசீலன்
சதிலீலாவதி
சந்திரகாந்தா
சந்திரமோகன்
சந்திரஹாசா
சீமந்தினி
தர்மபத்தினி
தாராச சங்கம்
நவீன சாரங்கதரா
நளாயினி
பக்த குசேலர்
பட்டினத்தார்
பதிபக்தி
பாதுகா பட்டாபிஷேகம்
பாமா பரிணயம்
பார்வதி கல்யாணம்
மகாபாரதம்
மனோகரா
மிஸ்.கமலா
மீராபாய்
மூன்று முட்டாள்கள்
மெட்ராஸ் மெயில்
ராஜா தேசிங்கு
ருக்மணி கல்யாணம்
லீலாவதி
சுலோசனா
வசந்தசேனா
விஸ்வாமித்ரா
வீர அபிமன்யு
7 1937 அம்பிகாபதி
அருணகிரிநாதர்
ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)
கவிரத்ன காளிதாஸ்
கிருஷ்ண துலாபாரம்
கௌசல்யா பரிணயம்
சதி அகல்யா
சதி அனுசுயா
சாமுண்டீஸ்வரி
சிந்தாமணி
சுந்தரமூர்த்தி நாயனார்
சேத பந்தன்
டேஞ்சர் சிக்னல்
தேவதாஸ்
நவயுவன் (கீதாசாரம்)
நவீன நிருபமா
பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)
பக்த அருணகிரி
பக்த துளதிதாஸ்
பக்த புரந்தரதாஸ்
பக்த ஜெயதேவ்
பத்மஜோதி
பஸ்மாசூர மோகினி
பாலயோகினி
பாலாமணி
மின்னல் கொடி
மிஸ் சுந்தரி
மைனர் ராஜாமணி
ராஜசேகரன்
ஏமந்த சோணகிரி
ராஜபக்தி
ராஜமோகன்
வல்லாள மகாராஜா
விக்ரம ஸ்திரீ சாகசம்
விப்ரநாரயணா
விராட பருவம்
ஹரிஜனப் பெண் லட்சுமி
8 1938 அதிருஷ்ட நட்சத்திரம்
அனாதைப் பெண்
என் காதலி
ஏசுநாதர்
கண்ணப்ப நாயனார்
கந்தலீலா
கம்பர் அல்லது கல்வியின் வெற்றி)
கிராம விஜயம்
குற்றவாளி
சுவர்ணலதா
சேவாசதனம்
தசாவதாரம்
தட்ச யக்ஞம்
தாயுமானவர்
பக்த துகாரரம்
துளசி பிருந்தா
தெனாலிராமன்
தேசமுன்னேற்றம்
நந்தகுமார்
பக்த நாமதேவர்
பக்த மீரா
பஞ்சாப் கேசரி
பாக்ய லீலா
பூகைலாஸ்
போர்வீரன் மனைவி என்னும் அசட்டு வீரன் மனைவி
மட சாம்பிராணி
மயூரத்துவஜா
மாயா
முட்டாள் மாப்பிள்ளை
யயாதி
ராமானுஜர்
ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
வனராஜ கர்சன்
வாலிபர் சங்கம்
விப்ர நாராயணா
விஷ்ணு லீலா
வீர ஜெகதீஸ்
ஜலஜா
ஷோக் சுந்தரம்
9 1939 அடங்காபிடாரி
அதிர்ஷ்டம்
ஆனந்த ஆஸ்ரமம்
கிராத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)
குமார குலோத்துங்கன்
சக்திமாயா
சங்கராச்சாரியார்
சந்தனத்தேவன்
சாந்த சக்குபாய்
சிரிக்காதே
சீதா பஹரணம்
சுகுண சரசா
சைரந்திரி (கீசக வதம்)
சௌபாக்யவதி
தியாகபூமி
திருநீலகண்டர்
பக்த குமணன் (ராஜயோகி)
பம்பாய் மெயில்
பாண்டுரங்கன்
பாரத் கேசரி
பிரகலாதா
புலிவேட்டை
மதுரை வீரன்
மன்மத விஜயம்
மாணிக்கவாசகம்
மாத்ருபூமி
மாயா மச்சீந்திரா
மாயா மச்சீந்திரா
மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
ரம்பையின் காதல்
ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)
ராமலிங்க சுவாமிகள்
வீர கர்ஜனை
வீர சமணி
10 1940 அபலை
இரண்டு அணா
உத்தமபுத்திரன்
ஊர்வசி சாகசம்
காளமேகம்
கிருஷ்ணன் தூது
சகுந்தலை
சத்யவாணி
சதி மகானந்தா
சதி முரளி
சந்திரகுப்த சாணக்யா
டாக்டர்
தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்)
தறுதலை தங்கவேலு
தானசூர கர்ணா
திருமங்கை ஆழ்வார்
திலோத்தமா
தேச பக்தி
நவீன தெனாலிராமன்
நவீன விக்ரமாதித்தன்
நீலமலை குகை
பக்த கோரகும்பர்
பக்த சேஹா
பக்த துளதிதாஸ்
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)
பரசுராமர்
பாக்கியதாரா
பாலபக்தன்
பால்ய விவாகம்
புத்திமான் பலவான் ஆவான்
பூலோகரம்பை
போலி பாஞ்சாலி
மணிமேகலை (பாலசன்யாசி)
மீனாட்சி கல்யாணம்
மும்மணிகள்
ராஜயோகம்
வாமன அவதாரம்
வாயாடி
விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)
விமோசனம்
ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை
ஜெயக்கொடி
ஜெயபாரதி
ஷியாம் சுந்தர்
ஷைலக்
ஹரிஜன சிங்கம்
ஹரிஹரமாயா
11 1941 அசோக் குமார்
அப்பூதி
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
ஆஷாடபூதி
ஆர்யமாலா
இழந்த காதல்
கச்சதேவயானி
கதம்பம்
காமதேனு
கிருஷ்ணகுமார்
குமாஸ்தாவின் பெண்
கோதையின் காதல்
சந்திர ஹரி
சபாபதி
சாந்தா
சாவித்திரி
சுபத்ரா அர்ஜீனா
சூர்யபுத்திரி
தயாளன்
தர்மவீரன்
திருவள்ளுவர்
நவீன மார்க்கண்டேயா
பக்த கௌரி
பிரேமபந்தன்
மணிமாலை
மதனகாமராஜன்
மந்திரவாதி
மானசதேவி
மைனரின் காதல்
ராவண விஜயம்
ராஜா கோபிசந்த்
ரிஷ்யசிருங்கர்
வனமோகினி
வேணுகானம்
வேதவதி அல்லது சீதா ஜனனம்
12 1942 அல்லி விஜயம்
அனந்தசயனம்
ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)
ஆனந்தன்
என் மனைவி
கங்காவதார்
கண்ணகி
காலேஜ் குமாரி
கிருஷ்ணபிடாரன்
கிழட்டு மாப்பிள்ளை
சதி சுகன்யா
சம்சாரி
சன்யாசி
சிவலிங்க சாட்சி
சோகா மேளர்
தமிழறியும் பெருமாள்
திருவாழத்தான்
நந்தனார்
நாரதர்
பஞ்சாமிர்தம்
பிருத்விராஜ்
பூகைலாஸ்
மனமாளிகை
மனோன்மணி
மாயாஜோதி
ராஜசூயம்
13 1943 அசட்டுப்பிள்ளை
அருந்ததி
உத்தமி
காரைக்கால் அம்மையார்
குபேர குசேலா
சிவகவி
தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்)
திவான்பகதூர்
தேவகன்யா
மங்கம்மா சபதம்
14 1944 தாசி அபரஞ்சி
பக்த ஹனுமான்
பர்த்ருஹரி
பிரபாவதி
பூம்பாவை
ராஜ ராஜேஸ்வரி
ஜகதலப்பிரதாபன்
ஹரிதாஸ்
15 1945 என் மகன்
கண்ணம்மா என் காதலி
கலிகால மைனர்
சாலிவாகனன்
சூரப்புலி
சௌ சௌ
பக்த காளத்தி
பரஞ்சோதி
பர்மா ராணி
பள்ளி நாடகம்
மஹா மாயா
மானசம்ரக்ஷணம்
மீரா
16 1946 அர்த்தநாரி
ஆரவல்லி சூரவல்லி
உதயணன் வாசவதத்தா
குண்டலகேசி
குமரகுரு
சகடயோகம்
சுபத்ரா
முருகன்
ராம் ரஹிம்
ருக்மாங்கதன்
லவங்கி
வால்மீகி
விகடயோகி
வித்யாபதி
விஜயலட்சுமி
17 15/08/1947 வரை கங்கணம்
கடகம்
சண்பகவல்லி
சித்ரபகாவலி
குண்டலகேசி
சுலோசனா
சுறுசுறுப்பு
சுலோசனா
தாய்நாடு
துளசி ஜலந்தர்
தெய்வ நீதி
நாம் இருவர்
ராமராஜ்ஜியம்
ருக்மாங்கதன்
பக்த துளதிதாஸ்
உதயணன் வாசவதத்தா
பிரம்மரிஷி விஸ்வாமித்ரா
பொன்னுருவி
மலைமங்கை
ராஜகுமாரி
ஜம்பம்
ஜீவஜோதி
ஸ்ரீலட்சுமி விஜயம்

உசாத்துணை

  • சாதனைகள் படைத்த தமிழ் வரலாறு, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், சிவகாமி பப்ளிஷர்ஸ், சென்னை.
  • அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், சுவாசம் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: செப்டம்பர் 2022.
  • Memories of Madras, Randor Guy, Creative Workshop, Chennai-600 086, First Edition: Aug, 2016
  • தமிழ்த் திரைப்படங்கள் பட்டியல் தமிழ் திரை உலகம்


✅Finalised Page