வாதோரணமஞ்சரி
From Tamil Wiki
வாதோரணமஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். யானையை வசப்படுத்தி அடக்கியவர், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவர், யானையைப் பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் ஆகியோரது சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரி[1].
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1079
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- tamilvu.org இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jan-2023, 12:11:42 IST