வழிவூர் பொன்னுஸ்வாமி பிள்ளை
- வழிவூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வழிவூர் (பெயர் பட்டியல்)
வழிவூர் பொன்னுஸ்வாமி பிள்ளை (1864-1924) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
மாயூரத்துக்கு அருகே உள்ள வழிவூர் என்னும் கிராமத்தில் 1864-ம் ஆண்டு பொன்னுஸ்வாமி பிள்ளை பிறந்தார்.
முதலில் மிருதங்கம் பயின்று மதுராந்தகம் ஜகதாம்பாள் என்ற நாட்டியக் கலைஞரின் கச்சேரிகளில் வாசித்து வந்தார். பின்னர் தவிற்கலைஞராக மாறினார்.
பெற்றோர், ஆசிரியர் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
தனிவாழ்க்கை
தவில் கலைஞர் இலுப்பைப்பட்டு விஸ்வலிங்கம் என்பவரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். இவருடைய மகன் புகழ்பெற்ற தவில் கலைஞர் வழிவூர் முத்துவீர் பிள்ளை.
பொன்னம்மாள் மறைந்ததும் தவில் கலைஞர் கஞ்சனூர் சொக்கலிங்கம் பிள்ளையின் மகள் மீனாக்ஷி அம்மாளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ராஜம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் வழிவூர் வீராஸ்வாமி பிள்ளை), ஜகதாம்பாள்(கணவர்: வழிவூர் கர்ணம் கோவிந்தஸ்வாமி பிள்ளை) என்ற இரு தங்கைகளும் பக்கிரி ஸ்வாமி (தவில்) என்ற பிள்ளைகள் இருந்தனர்.
இசைப்பணி
மாணவர்கள்:
வழிவூர் பொன்னுஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- வழிவூர் பெத்துத் தவில்காரர்
- வழிவூர் சாமு நட்டுவனார்
மறைவு
வழிவூர் பொன்னுஸ்வாமி பிள்ளை 1924-ம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 09:45:14 IST