வள்ளி
வள்ளி பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. வள்ளிக்கூத்து என்பது இதன் பொருள். முருகனுக்காக ஆடும் வெறி எனும் கூத்து எனவும் பொருள் படும்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அணிகலன்களை அணிந்த மகளிர் தங்கள் நெஞ்சம் நெகிழும்படி வேல் முருகனுக்கு வெறி என்னும் கூத்தை ஆடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
பூண்முலையார் மனம்உருக
வேல்முருகற்கு வெறிஆடின்று (கொளு.41)
வெண்பா
வெள்ளி முளைத்த வயல் ஆமை
அள்ள கட்டென்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ்க என்னாமுன்
என்கடை நீங்கிற்று இடர் (206)
பொருள்: அணிகலன்களை அணிந்த மகளிர் தங்கள் நெஞ்சம் நெகிழும்படி வேல் முருகனுக்கு வெறி என்னும் கூத்தை ஆடுதல் என்பது பொருள். 'இளநங்கையர்கள் இசைக்கருவிகளின் முழக்கத்திடையே சூலத்தை ஏந்திய சிவபெருமானின் மகனாகிய முருகனுக்காக வேலனுடன் ஆடும் வெறிக்கூத்து வீடுபேறு நல்குவது.
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:40:35 IST