under review

வண்டு (கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

வண்டு கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. வண்டிடம் பேசுவதாகவோ அல்லது வண்டைத் தூது விடும் வகையிலோ அமைவது. தூது என்ற பொது உறுப்பாகவும் அமையலாம்.

விளக்கம்

வண்டிடம் தலைவனோ, தலைவியோ தங்கள் எண்ணம் உரைப்பதாகவோ, வண்டைத் தூது விடுவதாகவோ அமைவது வண்டு என்னும் கலம்பக உறுப்பின் இலக்கணம்.

எடுத்துக்காட்டு

மறைசைக் கலம்பகம்

தும்பிக்கு வாய்த்த துணைசெய் தருள்புரி தூயநிலாக்
கம்பிக்கு வாய்த்த கரோதரன் காணருங் கண்ணுதலா
னம்பிக்கு வாய்த்த மணிசேர் மறைசை யளிகுலங்காள்
வெம்பிக்கு வாய்த்த மொழியா டுயர்சொலு மேவினர்க்கே. (15)

மதுரைக் கலம்பகம்

நம்பாநி னக்கோல முறையோவெ னக்கால
நஞ்சுண்டு பித்துண்டு நாந்தேவ ரென்பார்
தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த
தயவாளர் கூடற் றடங்காவில் வண்டீர்
செம்பாதி மெய்யுங் கரும்பாதி யாகத்
திருத்தோளு மார்பும் வடுப்பட்ட துங்கண்
டெம்பாவை யைப்பின்னு மம்பாவை செய்வா
ரெளியாரை நலிகிற்பி னேதா மிவர்க்கே. (28)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 18:12:33 IST