under review

லுண்டாயெ

From Tamil Wiki
Lundayeh-sipitang-26-dsc08534.jpg

லுண்டாயெ (Lundayeh) பழங்குடியினர் மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழ்கின்றனர். சரவாக் மாநிலத்திலும் புருணையிலும் வாழும் லுண்டாயெ பழங்குடியினருக்கு லுன் பாவாங் (Lun Bawang) எனும் வேறொரு பெயருமுண்டு.

வசிப்பிடம்

லுண்டாயெ பழங்குடியினர் சபா மாநிலத்தில் சிபித்தாங் மாவட்டம், லோங் பாசியா கிராமத்தில் வசிக்கின்றனர்.

மத நம்பிக்கை

Borneo Evangelical Church http://www.sibkl.org.my/

பெரும்பான்மை லுண்டாயெ பழங்குடியினர் (Borneo Evangelical Church) கீழ் கிறிஸ்துவர்களாவர். சிறுபான்மையினர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ஆன்மவாதத்தைப் பின்பற்றுபவர்கள்.

தொழில்

லுண்டாயெ பழங்குடியினர் விவசாயம், மீன் பிடிப்பு, வேட்டை, மேய்ச்சல் போன்ற தொழில்களை மேற்கொள்கின்றனர்.

உணவு

லுண்டாயெ பழங்குடியினரின் சிறப்பு உணவுகள் நூபா திங்கா, லூபா லாயா, கெலுபிஸ், கிழங்கு இலை துவையல் ஆகும்.

விழா

லுண்டாயெ பழங்குடி லுன் பாவாங் பழங்குடியினருடன் சேர்ந்தே விழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்துவர். 1990-லிருந்து லுண்டாயெ பழங்குடியினர் மெண்டுலோங் கிராமத்தில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரப்பூர்வமாக கலை பண்பாட்டு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

நோய் பரவல்

1800-லிருந்து 1900 வரை லுன் பாவாங் பழங்குடியினர் புராக் எனும் அரிசி சாராயத்திற்கு அடிமையாயினர். இவர்கள் வாழும் சுற்றுப்புறம் தூய்மைக்கேடாக இருந்தது. இதனால், 1904-லும் 1905-லும் சிற்றம்மையும் காலராவும் பரவியது. இதனால், லுன் பாவாங் பழங்குடியினர் 20,000 மக்கள் தொகையிலிருந்து 3,000க்குக் குறைந்தனர். லுன் பாவாங் சமூகத்தில் இந்தத் துயரச் சம்பவத்தைப் பேசக்கூடாதெனும் விதிமுறை உள்ளது.

பெயர்க் குழப்பம்

மேற்கத்திய பழங்குடி ஆராய்ச்சியாளர்கள் லுண்டாயெ பழங்குடியையும் லுன் பாவாங் பழங்குடியையும் மூருட் பழங்குடி எனப் பொதுவாக வகைப்படுத்தியுள்ளனர். அதனால், இன்றளவும் பல ஊடகங்களில், இவ்விரு பழங்குடிகளையும் பொதுவாக ‘மூருட்’ என அடையாளங் காணப்படுகின்றனர். இதனால், பழங்குடிகளின் நுண்மை வேறுபாடுகளைத் தவறாக எழுதுவதும் புரிந்து கொள்வதும் உண்டு.

திரு இபோய் டதான்

1989-ல் உள்ளூர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான இபோய் டதான் (Ipoi Datan) A Brief Ethnography of the Lun Bawang of Sarawak எனும் நூலில் இக்குழப்பத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதனடிப்படையில் வெளிநாட்டவர்கள் லுன் பாவாங் பழங்குடியினரை ஒரு இனக்குழுவாக மூருட் என வகைப்படுத்தியுள்ளனர். தங்களை லுன் பாவாங் எனக் கருதும் பழங்குடியினர் மேலும் பல பிரிவுகளாக லுன் டாயே, லுன் லோட், லுன் பா, லுன் தானா லுன், லுன் பாவாங் என்று அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page