under review

மூருட்

From Tamil Wiki
நன்றி ; Sabah Tourist Association

மலேசியாவின் மூருட் பழங்குடியினர் சபாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடிகள்.

வாழிடம்

மூருட் என்றால் சபாவின் உயர்நிலங்களில் அல்லது மலைப்பகுதிகளில் வாழ்பவர் எனப் பொருள். மூருட் பழங்குடியினர் தெனோம், கெமாபோங், தாவாவ், தொன்கோட், கெனிங்காவில் வசிக்கின்றனர்.

மூருட் பழங்குடியினர் ரூமா பான்ஜாங் எனப்படும் நீண்ட வீடுகளில் பத்திலிருந்து இருபது குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.

தொழில்

மூரூட் பழங்குடியினர் வேட்டையாடும்-சேகரிக்கும் (hunter-gatherer) சமூகமாக இருந்தனர். மூரூட் பழங்குடியினர் விவசாயம், மீன் பிடித்தல், தேன், மூங்கில்களைச் சேகரித்தல் போன்றவற்றைச் செய்து வந்தனர். கட்டாயக் கல்வியைப் பெற்ற மூரூட் பழங்குடியினரில் பலர் அரசாங்கத் துறைகளில் வேலை செய்கின்றனர். மூருட் பழங்குடியினர் படகுகளைச் செய்வதில் திறமையானவர்கள்.

நம்பிக்கைகள்

மூருட் பழங்குடியினரில் பலர் கிறிஸ்துவர்கள் சிலர் இஸ்லாமியர்கள். சிறுபான்மை மூருட் பழங்குடியினர் ஆன்மவாதத்தைப் பின்பற்றுபவர்களாவர்.

மொழி

மூருட் பழங்குடியினர் மூருட் மொழி, மலாய் மொழி, இந்தோனேசிய மொழிகளைப் பேசுவர்.

சடங்கு

திருமணத்தில் தினா சடங்கு

மூரூட் தாஹோல்/தாகால் என்பவர்கள் மூரூட் பழங்குடியின் உப பிரிவினராவர். மூருட் தாகால் பழங்குடியினர் தினா சடங்கை மேற்கொள்கின்றனர். தினா சடங்கென்பது, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்குக் கொடுக்கும் வரதட்சணை.

மரணச்சடங்கு

ஓர் ஆண் திருமணம் செய்த பெண் வீட்டில் இறப்புகள் நிகழ்ந்தால், இறப்புச்சடங்கில் அவர் உடல் உழைப்பைக் கோரும் செயல்களைச் செய்ய வேண்டும். அதில் குழி வெட்டுதல், பிணத்தை வைக்கும் ‘கெராண்டா’ எழுப்புதல் போன்ற செயல்கள் அடங்கும்.

பெண் வீட்டாரும் ஆண் வீட்டாரும் இறப்புகளில், மாறி மாறி நன்கொடையாகவும், வேலைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர்.

நடனம்

மகுனாதிப்
மகுனாதிப் நடன நிறைவு காட்சி [நன்றி; MySabah.com

மூரூட் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் மகுனாதிப். மகுனாதிப்பின் வேர்/சொல் ‘அபிட்’. அபிட் என்றால் இறுகப் பிடித்தல். மகுனாதிப் நடனங்களில் நடனமாடுபவர்களும் மூங்கில்களை இயக்குபவர்களும் இருப்பர். மூங்கிலை இறுகப் பிடித்திருப்பவர், இசைக்கேற்ப மூங்கிலை அசைப்பர். நடனமாடுபவர் மூங்கிலில் கால்கள் மாட்டிக்கொள்ளாதபடி துள்ளித் துள்ளி ஆடுவார்.

விழாக்கள்

மூருட் மக்கள் அறுவடைத்திருநாளைக் கொண்டாடுவர். அன்று மகுனாதிப் நடனம் ஆடப்படும்.

மூருட் பழங்குடியினர் நோன்புப்பெருநாள், கலிமாரான் திருநாள், காமாத்தான் திருநாள், கிறிஸ்துமஸ் போன்றவற்றையும் கொண்டாடுவர்.

ஆடை

மூருட் பெண்களின் பாரம்பரிய ஆடைகள் என்பது பினொங்கோலோ, பிபிரொட், சலுபாய், சினிகொட், ரரங்கொல் மற்றும் ஹோலோங்.

Attire.jpg

மூருட் ஆண்களின் பாரம்பரிய ஆடைகளுள் பாபாரு புபுதுல், அபா புபுதுல், துபி சினுலாதான் அடங்கும்

அடையாளம்/குறியீடு

மூருட் பழங்குடியினரின் ஆடைகளில் இயற்கையைச் சார்ந்த சில அடையாளங்கள் உள்ளன. (மயிலிறகு, மரவட்டை, மூங்கில், கோழிக்கால், கடற்பாசி, சூரிய வடிவம்).

உசாத்துணை


✅Finalised Page