under review

ரா. நாராயணசாமிப் புலவர்

From Tamil Wiki

ரா. நாராயணசாமிப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். ரத்தினாச்சலமூர்த்தி மீது பாடிய பாடல்கள் முக்கியமானவை.

வாழ்க்கைக் குறிப்பு

ரா. நாராயணசாமிப் புலவர் கொங்கு நாட்டில் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் ராஜகோபாலப் புலவருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையை குருவாகக் கொண்டு கல்வி கற்றார். சிரணவனம்பட்டிக்காட்டில் (ரத்னாசலம்) உள்ள முருகனான ரத்னாசலமூர்த்தி மீது பக்தி கொண்டார். ரத்னாசல மடத்திலேயே காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

ரா. நாராயணசாமிப் புலவர் ரத்னாசலமூர்த்தி மீது பாடல்கள் பாடினார். சிற்றூர்கள் பல சென்று சிறு தெய்வங்கள் மீது பாடல்கள் பாடினார். செய்யுள்கள், தனிப்பாடல்கள் பல பாடினார்.

பாடல் நடை

 சீர்பெற்ற ரத்னகிரிச் சேவகன்மேல் நற்புகழைப்
பார்பெற் றுலகில் பகர்ந்திடவே ஊருலகம்
எல்லோர் செவிக்கும் இனிய கணபதியாம்
நல்லோனே நின்னருள் நல்கு

உசாத்துணை


✅Finalised Page