under review

மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா

From Tamil Wiki
ஒலியுல்லா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஒலியுல்லா (பெயர் பட்டியல்)
சாகிபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாகிபு (பெயர் பட்டியல்)

மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா (பொ.யு 19-ம் நூற்றாண்டு) தமிழ் இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி. சூஃபி பக்திப் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லாயின் இயற்பெயர் ஹாஜி செய்கு முகயத்தீனுல் காதிரி. மலபார் கண்ணனூர் காஜி செய்கு நூறுத்தீனின் ஐந்தாம் தலைமுறையில் வந்த காஜி செய்கு உமர் (ரலி) அவர்களின் மகன் செய்கு முகயத்தீன் காதிரியர்மவியின் பேரன் மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா. இவரின் பாட்டனார் செய்கு முகயத்தீன் காதிரியர்மவி ஹஜ்ரத் கெளதுல் அஃலம் முகயத்தீன் ஆண்டகையின் பதினான்காவது தலைமுறையில் வந்த ஹஸ்ரத் செய்யிது உதுமான் பாக்தாதியிடம் கிலாபத் பெற்றார்.

ஆன்மிகம்

மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா தன் தலைமுறையினர்களைப் போலவே சூஃபித்துவத்தில் ஈடுபாடு கொண்டார். இவரது வழித்தோன்றல்களும், சீடர்களும் தக்கலை, காயாமொழி, இரவணசமுத்திரம், சிவகாசி ஆகிய ஊர்களிலும், இலங்கையின் கொழும்பு, அல்காமம், காலி, நீர்க்கொழும்பு, கிந்தொட்டை, பேராதெனி, உடுனுவாறா போன்ற ஊர்களிலும் பரவலாக உள்ளனர். கொழும்பு நகரிலுள்ள மஸஜிது முகயத்தீன் என்னும் காதிரிய்யா தைக்கா இலங்கை வாழ் சீடர்களின் தலைமை நிலையமாக உள்ளது. 1831-ல் மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா ஹஜ் பயணம் மேற்கொண்டார். இவர் சென்ற கப்பல் கடல் கொந்தளிப்பில் சிக்கியது. இவர் இறைவனை நோக்கி வேண்டி பாடல்கள் பாடினார். வெற்றிகரமாக 1832-ல் ஹஜ் பயணம் முடிந்து திரும்பினார்.

இலக்கிய வாழ்க்கை

மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா 'ஜம்கூத்து மாலை' என்ற சூஃபி ஞானத்தை விளக்கும் நூலை எழுதினார். இதில் ஒரு விருத்தம், இரண்டு காப்புக் கண்ணிகள், 119 தொங்கல்கள்,123 பாடல்கள் உள்ளன. ஜம்கூத்து மாலையும், கப்பல் முனாஜாத்தும் அரபுத்தமிழ் அச்சில் வந்தன.

பாடல் நடை

  • ஜம்கூத்து மாலை

அல்ஹம்தி லுற்ற அரும்பொருளை
அடியேன் உரைக்கிறேன் அறிந்து கொள்ளும்
இலமை அறிவோர்க்கு இதுதான் வேணும்
இசைந்த இபாதத்தில் கியாம் அலிபு
வலுமை றுகூவது லாமதாகும்
வளைந்த ஹாவது இஃதிதாலாம்
கலபை உரைத்திட்ட மீமசு ஜூது
கலந்த அத்தஹியா திருப்பு தாலே

நூல்கள் பட்டியல்

  • ஜம்கூத்து மாலை
  • கப்பல் முனாஜாத்து

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2024, 11:40:52 IST