under review

மோசிக்கரையனார்

From Tamil Wiki

மோசிக்கரையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய பாடல் ஒன்று அகநானூறில் உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மோசிக்கரையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மோசி என்னும் ஊரினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மோசிக்கரையனார் பாடிய பாடல் அகநானூறில் 260-வது பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் நெடுந்தொகை மணிமிடைபவளம் என்ற நடையில் உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனின் பொய்யான அன்பை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றாக அமைந்துள்ள பாடல். நெய்தல் திணையில் அமைந்தது.

  • மாலை பொழுதில் சூரியன் மறைய தொடங்கியது. மலைகள் பொன்னிறம் கொண்டன.
  • வண்டுகள் மலர்களை சுற்றி மொய்த்தன. கடற்கரை சோலையில் நாரைகள் தம் கூடுகளுக்கு திரும்பி வரும் ஓசை கேட்டது.
  • கடல் அலைகளின் வேகமும் ஒலியும் குறைந்தது. மீனவர்கள் தம் படகுகளைக் கரை சேர்த்தனர்.
  • வானம் செந்நிறம் கொண்டது. துணையுடன் கூடிய அன்றில் பறவைகள் தம் கூடான பனைமரத்து மடலுக்குள் நுழைந்து இளைப்பாறின.
  • மணம் மிக்க கழி மலர்கள் கூம்பின. மரங்கள் சூழ்ந்த வீடுகளில் உள்ள புன்னை மரத்து மலர்கள் பொன்னிறத்தில் மலர்ந்தன.
  • முதிய மரத்தில் இருக்கும் பெரிய ஆந்தையின் குழறல் ஒலி பேயினை போல பயமுறுத்த கூடியதாக உள்ளது.

பாடல் நடை

அகநானூறு - 260

திணை: நெய்தல் துறை: தலைவனின் வரவு இல்லாமை கண்டு வருந்தும் தலைவியின் நிலை

மண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசைக்
கண்டல் கானல் குருகு இனம் ஒலிப்பத்
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்பக்
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய
செக்கர் தோன்றத் துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேரக்
கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உற
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:31:46 IST