under review

மாவளத்தான்

From Tamil Wiki

மாவளத்தான் தமிழ்ப்புலவர், சோழ அரசர். இவர் இயற்றிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ அரசர் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக நெடுங்கிள்ளி இருந்த ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். சிறந்த குதிரை வீரர் என்று சங்கப்பாடல்களின் வழி அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ்ப்புலவர். பிற புலவர்களை ஆதரித்தார். குறுந்தொகையின் 348-ஆவது பாடல் இவர் பாடியது.மாவளத்தானைப் பற்றி புறநானூற்றில் 43-ஆவது பாடலை தாம்பபல் கண்ணனாரும், புறநானூற்றில் 348-ஆவது பாடலை கோவூர்க் கிழாரும் பாடினர்.

மாவளத்தானைப் பாடிய புலவர்கள்
  • கோவூர்க் கிழார்
  • தாம்பபல் கண்ணனார்

பாடல் நடை

  • குறுந்தொகை 348

தாமே செல்ப வாயிற் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்
இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே.

  • புறநானூறு 43

எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

  • புறநானூறு 45

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

உசாத்துணை


✅Finalised Page