மாலை மலர்
From Tamil Wiki
மாலை மலர் (1977) தினத்தந்தி குழுமத்தில் இருந்து வெளிவரும் மாலைநாளிதழ்.
வெளியீடு
மாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் மாலைநாளிதழ். தினத்தந்தி குழுமம் திருநெல்வேலியில் இருந்து வெளியிடும் மாலை முரசு போல ஒரு வட்டார மாலையிதழ் கோவையிலும் தேவை என உணர்ந்தமையால் பா.சிவந்தி ஆதித்தனால் மாலை மலர் நாளிதழ் டிசம்பர் 15, 1977-ல் கோவையில் தொடங்கப்பட்டது. பின்னர் பலநகர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகிறது.
உள்ளடக்கம்
மாலை மலர் பெரும்பாலும் உள்ளூர் செய்திகளையே வெளியிடுகிறது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:52 IST