மயில்வாகனப் புலவர்
- மயில்வாகனர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மயில்வாகனர் (பெயர் பட்டியல்)
மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வையா என்ற புலவர் மரபைச் சேர்ந்தவர்.
(பார்க்க க. மயில்வாகனப் புலவர்)
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகலில் 1779-ல் வையா என்னும் புலவர் மரபில் சுப்ரமணியம், சிதம்பரத்தம்மாள் இணையருக்கு மயில்வாகனப் புலவர் பிறந்தார். இவர் மாதகல் சிற்றம்பலப் புலவரது மருமகன். கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றார். வண்ணார்பண்ணை சிவன் கோவிலை கட்டுவித்த வைத்தியலிங்கச் செட்டியார் இவருடன் பயின்றவர்.
மயில்வாகனப் புலவரின் வாழ்க்கை வரலாறு அ.சதாசிவப் பிள்ளை எழுதிய பாவலர் வரலாற்று தீபகம், அ. குமாரசுவாமிப் புலவர் எழுதிய தமிழ் புலவர் சரித்திரம், வயாவிளான் க.வேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவ கௌமுதி ,சி. கணேசையர் எழுதிய ஈழநாட்டு புலவர் சரித்திரம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். அந்தாதி, மாலை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். ஞானாலங்கார ரூப நாடகம், காசி யாத்திரை விளக்கம் ஆகிய நூல்களை எழுதினார்.
நூல்கள் பட்டியல்
- புலியூர் யமக அந்தாதி
- யாழ்ப்பாண வைபவ மாலை
- காசி யாத்திரை விளக்கம்
- ஞானாலங்கார ரூப நாடகம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17-20-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- புலியூர் அந்தாதி இணைய நூலகம்
- யாழ்ப்பாண வைபவ மாலை இணையநூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Oct-2023, 12:27:55 IST