மதியழகன்
மதியழகன் (பிறப்பு: 1957) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். ஸ்ரீ முத்துமாரியம்மன் நாடக சபாவின் வாத்தியார்.
வாழ்க்கைக் குறிப்பு
மதியழகன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவிலுள்ள சிறுவையில் 1957-ல் பிறந்தார். மதியழகனின் தந்தை கூத்துக் கலைஞர்.
கலை வாழ்க்கை
மதியழகன் நடேச வாத்தியாரிடம் கூத்து கற்றுக் கொண்டார். வீடூர் பாரத தேவி நாடக சபா, சிறுவை ஸ்ரீ முத்துமாரியம்மன் நாடக சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். ஸ்ரீ முத்துமாரியம்மன் நாடக சபாவின் ஆசிரியர். பெரியசாமி, தேவராஜ், துரைசாமி, கே.சேகர், கே.பிரபாகரன், மணிகண்டன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள். திரெளபதி அம்மன், மாரியம்மன் திருவிழாக்கள், தீமிதி விழா, முருகன் காவடி விழா, இறப்புச் சடங்குகள் போன்றவற்றில் கூத்து ஆடினார். சாலை கிருஷ்ணன், தேவனாம்பட்டு ராஜகோபால், அமுதாடு வேலு ஆகியோரின் பிரதிகளைக் கொண்டு கூத்து ஆடினார்.
திண்டிவனம், விடால் நெற்குணம், தெள்ளார், மரக்காணம், சிறுவாடி, ஆலங்குப்பம், கடப்பாக்கம், கூனிமேடு, அமந்தகருணை, குன்னவாக்கம், சிறுவை, திருவிடந்தை, கோவளம், பிரம்பட்டு, வில்லிவனம், அகரம், செம்பூர் ஆகிய ஊர்களில் கூத்து ஆடினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்து
- சிவபுராணம்
- கந்தபுராணம்
- ராமாயணம்
- கிளைக்கதைகள்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:08:56 IST