under review

மணி எம்.கே.மணி

From Tamil Wiki
மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மணி (பெயர் பட்டியல்)

To read the article in English: Mani M. K. Mani. ‎

மணி எம்.கே.மணி

மணி எம்.கே.மணி (நவம்பர் 4, 1962 - ஜூலை 14, 2024) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

மணி எம்.கே.மணி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, 1962-ல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

மனைவி மனோன்மணி. மகன் கண்மணி யாழன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் பங்காற்றி வந்தார். திரைக்கதைகளும் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

மணி எம்.கே.மணியின் முதல் சிறுகதை தொகுப்பு 2017-ல் வெளியானது. சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். துறைசார் கட்டுரையாளர். தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என துறைசார் எழுத்துக்களை எழுதியுள்ளார்.

மறைவு

மணி 15 ஜூலை 2024 அன்று மறைந்தார். இரண்டு ஆண்டுகளாகச் சிறுநீரகக் கோளாறுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

இலக்கிய இடம்

எம்.கே.மணி திரைத்துறையின் அறியப்படாத களங்களைச் சார்ந்த விந்தையான உளநிலைகொண்ட மனிதர்களை மெல்லிய அங்கதம் கலந்த சித்தரிப்புடன் முன்வைத்த சிறுகதையாசிரியர். திரைக்கதையாளர், சினிமாக் கட்டுரையாளர் என்னும் வகைகளிலும் பங்களிப்பாற்றினார்.

மணி எம்.கே.மணி

நூல்கள்

சிறுகதை
  • மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு)
  • டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்)
  • ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்)
நாவல்
  • மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்)
  • புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்)
திரைக்கதைகள்
  • கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்)
கட்டுரை
  • மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு)
  • எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு)
  • பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்)
  • உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்)
  • மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2022, 10:04:37 IST