under review

மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்

From Tamil Wiki

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) செம்மொழி செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. அவற்றுள் மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டமும் ஒன்று.


செவ்விலக்கிய மொழிபெயர்ப்புகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்கேற்ற முறையில் மொழிபெயர்ப்புகள், ஆய்வுநூல்கள் முதலான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயலாற்றி வருகிறது. அவ்வகையில் செவ்வியல் நூலான மணிமேகலையை மொழிபெயர்க்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.

மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்

தமிழில் முழுமையாக் கிடைத்துள்ள பௌத்த காப்பியம் மணிமேகலை. பௌத்த சமயத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் நாட்டினருக்குத் தமிழில் பௌத்த சமயப் பெரும்காப்பியம் ஒன்றிருப்பதை அறியச் செய்யும் வகையில், பௌத்த சமயம் வழங்கும் நாடுகளில் மணிமேகலையை அந்தந்த நாட்டினரின் மொழியில் மொழிபெயர்த்து அளிப்பதே இத்திட்டம்.

அந்த வகையில் இந்திய மொழிகள் ஒன்பதிலும், உலக மொழிகள் பதினைந்திலும் மணிமேகலையை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மணிமேகலை மொழிபெயர்ப்புகள்

கீழ்க்காணும் மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்க்கப்பட உள்ளது.

இந்திய மொழிகள்
  • இந்தி
  • சம்ஸ்கிருதம்
  • மலையாளம்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • பாலி
  • லடாக்கி
  • சிக்கிமிஸ்
  • பெங்காளி
உலக மொழிகள்
  • சிங்களம் (இலங்கை)
  • நேபாளி (நேபாளம்)
  • திபெத்தியன் (சீனா)
  • மலாய் (மலேசியா)
  • கெமர் (கம்போடியா)
  • இந்தோனேசியா (இந்தோனேசியா)
  • லாவோ (லாவோஸ்)
  • பர்மிஸ் (மியான்மர்)
  • சீனம் (மாண்டரியன் (சீனா)
  • தாய் (தாய்லாந்து)
  • வியட்நாம் (வியட்நாம்)
  • ஜப்பானியர் (ஜப்பான்)
  • மங்கோலியன் (மங்கோலியா)
  • கொரியன் (தென் & வட கொரியா)
  • சோங்கா (பூடான்)
ஆங்கில மொழிபெயர்ப்பு

மணிமேகலையை ஆங்கிலத்தில் கே.ஜி. சேஷாத்ரி மொழிபெயர்த்துள்ளார். இந்நூல், தமிழக முதல்வரால், 2021-ல் வெளியிடப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page