under review

மடல் ஊர்தல்(பெருந்திணை)

From Tamil Wiki

மடல் ஊர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. காதல் நிறைவேறாததால் தலைவன் மடல் ஏறுதலைக் கூறுவது.

பார்க்க : மடலேறுதல்

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒன்று அன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடல்மாவைச் செலுத்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒன்றல்ல பல பாடி
மன்றிடை மடல் ஊர்ந்தன்று(கொளு 17.2)

வெண்பா

இன்றிப் படரோடு யான் உழைப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானாம் - மன்றில்
தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டிக்
குனி மடல்மாப் பண்ணி மேல் கொண்டு (326)

பொருள்: மான் போன்ற பார்வையை உடையவளின் மிகுந்த அழகைக் கொண்டாடி அம்பத்திலே நான் பனை மடலில் குதிரை செய்து மடல் ஏறக் கருதியதால், காமன் தன் வெற்றிக்கொடியை உயர்த்துகிறான்.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 19:03:27 IST