மகாநோன்புச்சாவடி வேங்கடசுப்பையர்
மகாநோன்புச்சாவடி வேங்கடசுப்பையர் (மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர்) (1803-1862) கர்னாடக இசைக் கலைஞர், கீர்த்தனைகள் இயற்றியவர். தியாகராஜரின் நேரடி மாணவர், உறவினர்.
இளமை
தஞ்சாவூர் அருகே உள்ள மகாநோன்புச்சாவடியில் (மானம்புச்சாவடி) 1803-ல் பிறந்தார்.
தியாகராஜரிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
இசைப்பணி
வேங்கடசுப்பையர் தியாகராஜரின் கீர்த்தனைகளை பாதுகாத்து, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவற்றை பிரபலப் படுத்தியவர். சிறந்த பாடகராகவும் இசை ஆசிரியராகவும் இருந்தார்.
ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த புகழ்பெற்ற 'ஜலஜாக்ஷி’ வர்ணத்தை இயற்றியவர். "வெங்கடேச" என்னும் முத்திரையை தன் கீர்த்தனைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.
இசைக்கோர்வைகளாக (வர்ணமெட்டு) இயற்றப்பட்டு பாடல் வரிகள் இல்லாதிருந்த தியாகராஜரின் கீர்த்தனைகள் சிலவற்றுக்கு இவர் பாடல்வரிகள் அமைத்ததாக சொல்லப்படுகிறது. "வேங்கடேச" என்ற முத்திரையோடு இருக்கும் சில பாடல்கள் இவருடையதாக இருக்கலாம் (உதாரணம்: பரப்ரம்மமு)[1]
மாணவர்கள்
இவருடைய பெரும் புகழ்பெற்ற மாணவர்கள்:
- மகா வைத்தியநாதையர்
- பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
- சரப சாஸ்திரி
- தியாகராஜன் (கர்னாடக இசை மும்மூர்த்தி தியாகராஜரின் பேரன்)
- பிடில் வெங்கோப ராவ்
- சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரி (இவர் தியாகராஜர் கீர்த்தனைகளை ஆந்திர மாநிலத்தில் பிரபலப்படுத்தியவர்)
இதர இணைப்புகள்
- ஸ்வாமிகி சரி எவ்வர - ராகம் தேவகாந்தாரி - சஞ்சய் சுப்பிரமணியன்
- ஸ்வாமிகி சரி எவ்வர - ராகம் தேவகாந்தாரி - டாக்டர் எஸ். ராமநாதன்
- ஜலஜாக்ஷி - ராகம் ஹம்சத்வனி - நேதனூரி கிருஷ்ணமூர்த்தி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Nov-2023, 09:32:11 IST