under review

பெரியார் காவியம் (இரா. மணியன்)

From Tamil Wiki
பெரியார் காவியம்-இரா. மணியன்

பெரியார் காவியம் (2009), ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையை, எண் சீர் விருத்தப் பாக்களில் கவிதை வடிவில் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் முனைவர் இரா. மணியன். இந்நூல் தமிழக அரசின் சிறப்புப் பரிசைப் பெற்றது.

(’பெரியார் காவியம்’ என்ற இதே தலைப்பில், பா. நாராயணன், நா. காமராசன் உள்ளிட்ட சிலரும் காவிய நூல்களை எழுதினர்)

பிரசுரம் வெளியீடு

பெரியார் காவியம் நூல், 2009-ல், சீதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதனை இயற்றியவர் முனைவர். இரா. மணியன்.

ஆசிரியர் குறிப்பு

இரா. மணியன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நத்தம் கிராமத்தில், ஜூன் 1, 1932-ல், இராமையா – சரசுவதி இணையருக்குப் பிறந்தார். இளங்கலை, முதுகலை, மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற இவர் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

'புறநானூறு ஓர் அழகோவியம்', 'அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா கோவை', 'வ.உ.சி. வாழ்க்கை வரலாறு', 'கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு'எனப் பல நூல்களை எழுதினார். இரா. மணியன் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று பெரியார் காவியம்.

நூல் அமைப்பு

பெரியார் காவியம் நூல், ஏழு காண்டங்களையும், 55 படலங்களையும் கொண்டது. இந்நூலில் 1000 ஆசிரிய விருத்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

காண்டங்கள்
  • ஈரோட்டுக் காண்டம்
  • பேராயக் காண்டம்
  • சுயமரியாதைக் காண்டம்
  • திராவிடர் காண்டம்
  • காமராசர் காண்டம்
  • அண்ணா காண்டம்
  • கலைஞர் காண்டம்


ஈரோட்டுக் காண்டம்

முதல் காண்டமான ஈரோட்டுக் காண்டத்தில், ஈ.வெ. ராமசாமிப் பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்து நகராட்சித் தலைவரானது வரையிலான செய்திகள் கூறப்பட்டுள்ளன. இதில், ஏழு படலங்கள் உள்ளன. அவை,

  • பள்ளிப் படலம்
  • வணிகப் படலம்
  • திருமணப் படலம்
  • ஊர் சுற்றும் படலம்
  • காசிப் படலம்
  • ஏலூர்ப் படலம்
  • பொதுப்பணிப் படலம்
பேராயக் காண்டம்

இரண்டாவது காண்டமான பேராயக் காண்டத்தில், பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததிலிருந்து, அக்கட்சியிலிருந்து விலகியது வரையிலான செய்திகள் கூறப்பட்டுள்ளன. இக்காண்டத்தில் மூன்று படலங்கள் இடம்பெற்றுள்ளன. அவை,

  • மதுவொழிப்புப் படலம்
  • தீண்டாமை ஒழிப்புப் படலம்
  • வகுப்புரிமைப் படலம்
சுயமரியாதைக் காண்டம்

சுயமரியாதைக் காண்டத்தில், பெரியார், சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கியது முதல் நீதிக்கட்சியின் தலைவரானது வரையிலான செய்திகள் கூறப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள படலங்களின் எண்ணிக்கை ஐந்து. அவை,

  • இதிகாச எதிர்ப்புப் படலம்
  • அமைச்சரவைப் படலம்
  • அயல்நாடுகள் பயணப் படலம்
  • ஈரோடு வேலைத்திட்டப் படலம்
  • நூல்கள் வெளியீடு படலம்
திராவிடர் காண்டம்

திராவிடர் காண்டம், பெரியார், திராவிடநாடு கோரியது முதல் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி வளர்ந்தது வரையிலான செய்திகளைக் கூறுகிறது. இக்காண்டத்தில் பதினோரு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • திராவிட நாட்டுப் படலம்
  • தமிழ் வளர்க்கும் படலம்
  • திராவிடர் கழகப் படலம்
  • கொள்கை பரப்புப் படலம்
  • கருத்து வேற்றுமைப் படலம்
  • கருத்தொன்றிய படலம்
  • மணியம்மையார் படலம்
  • போராடும் படலம்
  • பேராய எதிர்ப்புப் படலம்
  • குறிக்கோள் கூறும் படலம்
  • இராசாசி எதிர்ப்புப் படலம்
காமராசர் காண்டம்

காமராசர் காண்டம், காமராசர் முதலமைச்சரானது முதல் அண்ணா முதலமைச்சரானது வரையிலான செய்திகளைக் கூறுகிறது. இக்காண்டத்தில் பதினைந்து படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • இராமன் கதை எதிர்ப்புப் படலம்
  • பர்மா பயணப் படலம்
  • தேசியக் கொடி எரிப்புப் படலம்
  • இராமன் பட எரிப்புப் படலம்
  • பக்தி இலக்கிய எதிர்ப்புப் படலம்
  • நீதிமன்ற அவமதிப்புப் படலம்
  • அரசியல் சட்ட எரிப்புப் படலம்
  • தி.மு.கழகத்தைத் திட்டும் படலம்
  • இந்தியா பட எரிப்புப் படலம்
  • கொள்கை விளக்கப் படலம்
  • தேர்தல் பிரசாரப் படலம்
  • டெல்லி ஆதிக்க எதிர்ப்புப் படலம்
  • பக்தவத்சலப் படலம்
  • பேராயத் தோல்விப் படலம்
  • இந்தி எதிர்ப்புப் படலம்
அண்ணா காண்டம்

அண்ணா காண்டம், அண்ணா முதலமைச்சரானது முதல் அண்ணா மறையும் வரையிலான செய்திகளைக் கூறுகிறது. இக்காண்டத்தில் ஆறு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • பெரியார் மனமாற்றப் படலம்
  • ஆளுவோர்க்கு அறிவுரை கூறும் படலம்
  • அண்ணாவைப் போற்றும் படலம்
  • மத்திய அரசைத் தூற்றும் படலம்
  • அண்ணா நோயுற்ற படலம்
  • அண்ணா மறைவுற்ற படலம்
கலைஞர் காண்டம்

கலைஞர் காண்டம், கலைஞர் மு. கருணாநிதி தமிழக முதலமைச்சரானது முதல் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் மறையும் வரையிலான செய்திகளைக் கூறுகிறது. இக்காண்டத்தில் எட்டு படலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,

  • பெரியாரின் அறிவுரைப் படலம்
  • பெரியாரைப் பாராட்டும் படலம்
  • கோவில் கருவறை நுழைவுப் படலம்
  • பொதுமக்கட்கு வேண்டுகோள் படலம்
  • தமிழுணர்வை வேண்டும் படலம்
  • இராமாயணத் தடை கோரும் படலம்
  • பெரியார் கலைஞரைப் போற்றும் படலம்
  • இறுதிப் படலம்

மதிப்பீடு

இரா. மணியன் எழுதிய ‘பெரியார் காவியம்’, ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையை, மரபுக் கவிதையில், விரிவாக ஆவணப்படுத்தும் நூல். இரண்டாயிரத்திற்குப் பின் எழுதப்பட்ட காவிய நூல்களில் ‘பெரியார் காவியம்’ குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page