under review

பெயரின்னிசை

From Tamil Wiki

பெயரின்னிசை (பெயர் இன்னிசை) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவது பெயரின்னிசை. பெயரின்னிசையின் இலக்கணத்தைக் கூறும் நூற்பாக்கள்:

இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்
அறையின் அப்பெயர் ஆகும் என்ப
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825

பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃது
ஏனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் உரைப்பது பெயர்இன் னிசையே
                                   - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 131

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page