under review

புஷ்பதந்தர்

From Tamil Wiki
புஷ்பதந்தர்

புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்தார்.

புராணம்

புஷ்பதந்தர், சுக்ரீவனுக்கும் ரமாவிற்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ என்னுமிடத்தில் இக்ஷ்வாகு குலத்தில் விக்ரம் சம்வத்தின் மார்கழி மாதத்தின் வளர்பிறை ஐந்தாம் நாள் பிறந்தார். புஷ்பதந்தர் (தற்போதைய) ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். ரிஷபநாதரால் தொடங்கப்பட்ட பாரம்பரியத்தில் நான்காவது சங்கங்களை மீண்டும் நிறுவிய ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்தா.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: வெண்நிறம்
  • லாஞ்சனம்: முதலை
  • மரம்: பவழமல்லி
  • உயரம்: 100வில் (300 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 200000 பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: ஷாலிப்பூரின் புஷ்பமித்ரா வழங்கிய கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 88 (விதர்ப்)
  • யட்சன்: அஜிதன்
  • யட்சினி: மகாகாளி

உசாத்துணை


✅Finalised Page