புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. ஊடல் கொண்ட நிலையில் தலைவன் இயல்பு பற்றி உரைப்பது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய நெற்றியையுடைய பெண் வீரனது மார்பைத் தழுவேன் என ஊடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று(கொளு.47)
வெண்பா
மலைபடு சாந்தம் மலர்மார்ப யாம் நின்
பலர் படி செல்வம் படியேம் - புலர் விடியல்
வண்டினம் கூட்டு உண்ணும் வயல்சூழ் திருநகரில்
கண்ட கண்டற்கு இனிது (235)
பொருள்:பரத்தையர் பலரும் தோயும் தலைவனது மார்பில் யாம் தோயோம் என ஊடியதாக வெண்பா கூறுகிறது. பெண்கள் பலரும் விரும்பும் தன்மையை உடையவன் தலைவன் என்ற பாராட்டு பொதிந்துள்ளது.
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:56:58 IST