புலவர் ஏத்தும் புத்தேள் நாடு
புலவர் ஏத்தும் புத்தேள் நாடு பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று.புலவர் போற்றும் மேலுலகம் என்பது பொருள். வானுலகின் பெருமையைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நுண்ணிய அறிவினால் புலனடக்கம் மிக்கவர்கள் விரும்பும் மேல் உலகத்தைப் பற்றிச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நுழைபுலம் படர்ந்த நோய்அறு காட்சி
விழைபுலம் கடந்தோர் வீடுஉரைத்தன்று (கொளு 12.4 )
வெண்பா
பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம்
ஐயம் ஒன்றின்றி அறிந்துரைப்பின் - வெய்ய
பகலின்றி இரவின்றி பற்றின்றி துற்றின்றி
இகலின்றி இளிவரலும் இன்று (272)
பொருள்: உண்மை ஞானிகள் எய்தும் வீட்டு உலகம் இரவும்பகலும் அற்றது; பாசம் அற்றது; உணவு அற்றது; மாறுபாடற்றது; தாழ்வற்றது.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:50:18 IST