under review

பின்னல் கோலாட்டம்

From Tamil Wiki
பின்னல் கோலாட்டம்

பின்னல் கோலாட்டம், கோலாட்டத்தின் ஒரு பிரிவாக நிகழ்த்தப்படும் நிகழ்த்துக் கலை. இக்கலை தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் நிகழ்கிறது. இது சௌராஷ்டிரா மொழியில் பாண்டியா ரக நடனம் என்றும், இராஜஸ்தானில் கர்பா நடனம் என்றும், ஆந்திராவில் ஜடை கோலாட்டம் என்றும் வழங்கப்படுகிறது.

நடைபெறும் முறை

கோலாட்டம் என்னும் கலையைப் பொதுவாக ஆண், பெண் இருபாலாரும் நிகழ்த்துகின்றனர். ஆனால் பின்னல் கோலாட்டத்தைப் பெண்களே பெருமளவில் நிகழ்த்துகின்றனர்.

இந்த ஆட்டம் சாதாரணக் கோலாட்டத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. இந்த ஆட்டம் கோவில் மண்டபத்திலோ, கூரை உள்ள அரங்கிலோ நிகழ்த்தப்படுகிறது. கூரையில் கட்டப்பட்ட பல வண்ணத் துணிப்பட்டைகளின் ஒரு துணிப் பகுதி கோலாட்டம் அடிக்கும் பெண்ணின் கையில் இருக்கும். ஆடுகிறவர்கள் இந்த வண்ணக் கயிற்றுடன் ஆடிக் கொண்டே பின்னலைப் போடுவதும், பின் ஆடிக் கொண்டே அதனைச் சிக்கல் இல்லாமல் விடுவிப்பதும் இந்த ஆட்டத்தின் சிறப்பாகும். ஆடுகின்ற போது ஒருவர் தவறு செய்தாலும் சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே இந்த ஆட்டம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட பின்பே ஆட முடியும்.

ஆறு. இராமநாதன் பின்னல் கோலாட்டம் குறித்த நடன முறையை மராத்தி நூலில் இருந்து தொகுத்திருக்கிறார். அவர், "கிழக்கில் மூவரும், தெற்கில் மூவரும், மேற்கில் மூவரும், வடக்கில் மூவருமாக எதிரெதிரே நிற்க வேண்டும். கிழக்கில் நின்ற மூவர் தாதைதைதா என்று காலால் தட்டிக் கொண்டு மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும். அதே சமயத்தில் மேற்கில் நின்ற மூவரும் கிழக்கு நோக்கி அதேபோல நகர வேண்டும். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எதிரில் உள்ளவரின் வலதுபுறமாகச் சென்று எதிர்பக்கத்தில் நிற்க வேண்டும். இவ்விதமாகவே வடக்கில் உள்ளவர்களும், தெற்கில் உள்ளவர்களும் நகர்ந்து எதிர் பக்கத்தில் நிற்க வேண்டும். திரும்ப திரும்ப இப்படியே நகர்ந்து பின்னல் போடலாம். பின்னல் போட்டப்பின் அதனை அவிழ்க்க கடைசியில் நிற்கும் வரிசையில் உள்ளவர்களும் அவர்களுக்கு எதிரில் உள்ளவர்களும் மேற்கூரிய விதமாக நகர பின்னல் அவிழ்ந்துவிடும். பின்னலை அவிழ்க்கையில் எதிரில் உள்ளவர்களின் வலதுபுறமாக செல்லாமல் இடதுபுறமாக செல்ல வேண்டும்." என்கிறார்.

நிகழ்த்துபவர்கள்

  • கோலாட்டம் போல் இல்லாமல் இக்கலையை பெரும்பாலும் பெண்களே நிகழ்த்துகின்றனர்.

அலங்காரம்

  • இந்நிகழ்த்துக் கலைக்கான கயிறு பல வண்ணங்களுடன் தயாரிக்கப்படும்.

நிகழும் ஊர்கள்

இக்கலை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. சௌராஷ்டிரா மொழியில் பாண்டியா ரக நடனம் என்றும், இராஜஸ்தானில் கர்பா நடனம் என்றும், ஆந்திராவில் ஜடை கோலாட்டம் என்றும் வழங்கப்படுகிறது.

நடைபெறும் இடம்

இந்த ஆட்டம் கோவில் மண்டபத்திலோ, கூரை உள்ள அரங்கிலோ நிகழ்த்தப்படுகிறது. கூரையில் கட்டப்பட்ட பல வண்ணத் துணிப்பட்டைகளின் ஒரு துணிப் பகுதி கோலாட்டம் அடிக்கும் பெண்ணின் கையில் இருக்கும்.

உசாத்துணை

காணொளி

பின்னல் கோலாட்டம்


✅Finalised Page