பாண்டரங்கண்ணனார்
பாண்டரங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பாண்டரங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
பாண்டரங்கண்ணனார் பாடிய பாடல் புறநானூறில் 16 வது பாடலாக இடம்பெற்றுள்ளது. இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளியின் போர் வென்ற பெருமையினை பாடுவதாக வஞ்சித் திணையில் மழபுல வஞ்சி என்னும் துறையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளியின் படை பகைவர் நாட்டில் நிகழ்த்திய சூறையாடல்.
- பகை நாட்டினரின் விரைவு மிக்க குதிரைப்படையையும் மழை மேகம் போன்ற காலாட்படையையும் முருங்கை மரத்தை முறித்து போடுவது போல வெற்றி கண்டான்.
- நெற்கதிர்கள் விளைந்த வயல்களில் குதிரைகளை பூட்டி உழுது நாசம் செய்வித்தார்கள். வீடுகளில் கட்டுமானத்துக்கு பயன்பட்ட மரங்களை பெயர்த்தெடுத்து விறகாக பயன்படுத்தினர். காவலிட்ட குடிநீர் வழங்கும் குளங்களில் யானைகளை குளிப்பாட்டி சேறாக்கினர்.
- நிலத்தில் துகள் பரக்க செய்யுமளவு வரம்பில்லா பெரும்படையை கொண்டவன் சோழன் இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளி.
- அவனது படையினரின் வாளிலிருந்து வீசும் புலால் நாற்றமும் மார்பில் தேய்க்கப்பெற்ற சந்தனத்தின் மணமும் சீற்றம் கொண்ட முருகப்பெருமானின் தோற்றத்தை ஒத்திருந்தது.
- இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளியின் யானை படையானது, மயக்கும் மணமிக்க வள்ளையும் ஆம்பல் மலரும் பனியில் விளைந்த பகன்றையும் கனிந்த பாகற்காயும் கரும்பு தோட்டமும் விளைந்த பகைவரின் வயல் நிலத்தை முழுக்க எரியுட்டப்பட்டது.
- உவமை: பகலில் எரியூட்டப்பெற்ற பகைவரின் வயல் நிலத்தில் இருந்து எழுந்த தீயின் வெம்மை அந்திநேரத்து சூரியனை போல வானத்தை செக்கச்சிவப்பானதாக மாற்றியது.
பாடல் நடை
புறநானூறு - 16
- திணை: வஞ்சி துறை: மழபுலவஞ்சி
..........................
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் களறுபடீஇ
எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
....................................
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- புறநானூறு - 16:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 12:06:10 IST