under review

பதிற்றந்தாதி

From Tamil Wiki
கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி, noolaham.net

பதிற்றந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களால் அந்தாதியாக பாடப்பாடுவது பதிற்றந்தாதி

வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி
                    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841

பிரபந்த தீபிகை:

பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள்
. பற்றிடும் தன்மை தோன்றப்
பலசிறப் புற்ற அந்தாதியாய்ப் பாடுவது
. பண்பதிற் றந்தாதி யாம் (பிரபந்த தீபிகை 19)

நவநீதப் பாட்டியல் :

பத்துவெண் பாக்கலித்துறையான் தற்செயலாம் பதிற்றந்தாதி.
                  - நவநீதப் பாட்டியல் 7

பிரசாந்த தீபிகம்:

பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது பண்பதிற் றந்தாதியாம்-
                              - பிரசாந்த தீபிகம் 19

என பதிற்றந்தாதியின் இலக்கணத்தை இலக்கண நூல்கள் கூறுகின்றன.

சில பதிற்றந்தாதி நூல்கள்
  • கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி
  • கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றந்தாதி

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page