பஞ்சரங்கம்
From Tamil Wiki
- பஞ்ச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பஞ்ச (பெயர் பட்டியல்)
பஞ்சரங்கம் ( ஐந்தரங்கம்) காவேரிக் கரையோரமாக திருமால் படுத்திருக்கும் கோலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஐந்து தலங்கள்.
அரங்கம்
திருமால் பள்ளிகொண்டிருக்கும் இடங்கள் மேடைகள் (அரங்குகள்) என்னும் பொருளில் அரங்கம் என அழைக்கப்படுகின்றன. ஆற்றிடைக்குறை மற்றும் ஆற்றங்கரை மேடுகளும் அரங்கம் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக தானாகவே உருவான ஆற்றங்கரை மேட்டுநிலம் அரங்கம் எனப்படுகிறது.
ஐந்தரங்கங்கள்
ஆதிரங்கம், மத்யரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்து அரங்கங்கள் தலபுராணங்களில் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. (முதலரங்கம், நடுவரங்கம், அப்பாலரங்கம், நான்காமரங்கம், ஐந்தாமரங்கம்)
- ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
- மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
- அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
- சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
- பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)
உசாத்துணை
- பஞ்சரங்க தலங்கள் மாலைமலர்
- பஞ்ச அரங்க தலங்கள் தினத்தந்தி
- பஞ்சரங்கம். தமிழ் ஒன் இண்டியா
- பைரவா பௌண்டேஷன் கட்டுரை
- சோழர் கோயில் பணிகள் இணையநூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Dec-2022, 17:30:04 IST