பகட்டு முல்லை(பொதுவியல் திணை)
பகட்டு முல்லை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன.
இல்லம் சிறக்க பகடு(காளை) போன்ற பெருமுயற்சியுடைய தலைவனைப் பற்றிக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வளமைக்கும் முயற்சிக்கும் காரணமான பகட்டுடன் இல்லத்தின் சிறப்பிற்குக் காரணமான தலைவனை ஒப்பக் கண்டு பாராட்டல்' என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வயன்மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மைய,ம்
வியன்மனைக் கிழவனை பகட்டொட பொரீஇயன்று (கொளு 13.6)
வெண்பா
உய்த்தல் பொறுத்தல் ஒழிவின்றி ஒலி வயலுள்
எய்த்தல் அறியர் திடைஇன்றி - வைத்த
படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எம் கணவன் நேர் (280)
பொருள்: நெடிய புகழினையுடைய எம் கணவன் தன் பெருமுயற்சி காரணமாக செலுத்தலாலும், பாரம் பொறுத்தலாலும், இடையறாது நீரொலிக்கும் வயலினுள்ளே இளைப்பென்பதனை அறியாது, இடையீடின்றி, கழுத்துமேல் வைக்கப்பட்டபெரிய நுகத்தினைப் பூண்ட எருதுக்கு ஒப்பாவான்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2025, 10:12:32 IST